ஆங்கில மொழிபெயர்ப்பு

எனது முகமது அலியின் கையெழுத்து சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு borderless journal இதழில் வெளியாகியுள்ளது இதனை டாக்டர் சந்திரமௌலி மொழியாக்கம் செய்துள்ளார்

சாமுராய்களும் செர்ரி மலர்களும்

Chushingura 1962ல் வெளியான ஜப்பானியப் படம். ஹிரோஷி இனாககி இயக்கியது புகழ்பெற்ற 47 ரோனின் என்ற சாமுராய்வீர்ர்களின் கதையை விவரிக்கும் படம். 47 ரோனின் கதை ஜப்பானின் தேசிய காவியம் என்றே அழைக்கப்படுகிறது இக்கதை எண்ணற்ற முறை நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அத்தோடு ஆறு முறை படமாக்கப்பட்டிருக்கிறது இதே கதையை மிஷோகுஷி 1949ல் எடுத்திருக்கிறார். அப்படம் தோல்வியுற்றது. வண்ணத்தில் அதே கதையைத் தொசிரே மிபுனே போன்ற முக்கிய நட்சத்திரங்களைப் பயன்படுத்திப் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். இடைக்கால ஜப்பானில் நடைபெறும் கதை. …

சாமுராய்களும் செர்ரி மலர்களும் Read More »

பாஸ்டர்நாக்கின் ஜன்னல்.

1958ம் ஆண்டுத் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் செய்தியை கேள்விப்பட்டபோது போரிஸ் பாஸ்டர்நாக் மாஸ்கோவிற்கு அருகிலிருந்த எழுத்தாளர்களுக்கான கிராமமான பெரெடெல்கினோவில் இருந்தார். அங்கே அவருக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது மாக்சிம் கார்க்கியின் ஆலோசனைப் படி ஸ்டாலின் எழுத்தாளர்களுக்கான கிராமத்தினை உருவாக்கியிருந்தார். இயற்கையான சூழலில் நதிக்கரை ஓரமாக 250 ஏக்கர் பரப்பளவில் அந்தக் கிராமம் உருவாக்கப்பட்டு அதில் ஐம்பது எழுத்தாளர்களுக்குத் தனிவீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் குடியிருப்பின் பின்புறமாக எளிய மரவீடுகளில் விவசாயிகள் குடியிருந்தார்கள். அங்கே விவசாயப் பணிகள் நடைபெற்றன. …

பாஸ்டர்நாக்கின் ஜன்னல். Read More »

பில்லி காலின்ஸ்

புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர் பில்லி காலின்ஸ் தனது கவிதைகளை வாசிக்கும் காணொளி. இதன் முடிவில் கவிதை குறித்த அவரது பேச்சு மிக முக்கியமானது. Basically when you’re teaching poetry, despite that poem (Introduction to Poetry), you’re talking about meaning. We’re basically extracting meaning from the poem. And I realized at some point, that when I wrote a poem, meaning was the last …

பில்லி காலின்ஸ் Read More »

வான்கோவின் கோதுமை வயல்

Van Gogh: Of Wheat Fields and Clouded Skies என்ற ஆவணப்படம் நெதர்லாந்திலுள்ள வான்கோ அருங்காட்சியகத்தைப் பற்றியது. அத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் வின்சென்ட் வான்கோவின் ஓவியங்களைத் தேடிச் சேகரித்து அவற்றைப் பாதுகாக்க ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கிய ஹெலன் க்ரோல்லர்-முல்லரைப் பற்றியது. இந்த ஆவணப்படத்தை ஜியோவானி பிஸ்காக்லியா இயக்கியுள்ளார். நெதர்லாந்தின் கிழக்கில் ஓட்டர்லோ எனுமிடத்தில் பரந்த இயற்கை வெளியின் நடுவே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கே வான்கோவின் ஓவியங்கள் மட்டுமின்றிப் பிகாசோ, மாண்ட்ரியன் உள்ளிட்ட முக்கிய …

வான்கோவின் கோதுமை வயல் Read More »

ஆங்கிலத்தில்

எனது முகமது அலியின் கையெழுத்து சிறுகதையை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அக்கதை borderless journal இதழில் வெளியாகிறது.

மவுண்ட்பேட்டனின் கடைசிநாள்

லூயி பிரான்சிஸ் ஆல்பெர்ட் விக்டர் நிக்கோலஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் எனப்படும் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தவர். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர். இந்தியப்பிரிவினைக்கு முக்கியக் காரணமாக இருந்தவர், இங்கிலாந்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மவுண்ட்பேட்டன் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் அயர்லாந்தின் முல்லாக்மோரிலுள்ள கிளாசிபான் கோட்டையில் விடுமுறையைக் கழித்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வின் நேரடி சாட்சிகள் மற்றும் அந்த நாளில் …

மவுண்ட்பேட்டனின் கடைசிநாள் Read More »

நீல்பாக் பள்ளி

ரிஷிவேலி அருகே அமைந்துள்ள நீல்பாக் பள்ளியை பற்றிய இந்த இந்த ஆவணப்படம் தனித்துவமான கற்றல் முறையினையும் பள்ளி சூழலையும் விவரிக்ககூடியது. டேவிட் உருவாக்கியுள்ள இப் பள்ளியில் குழந்தைகள் ஐந்து மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள். சுதந்திரமாக செயல்படுகிறார்கள். இப்பள்ளி கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்க புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. நீல்பாக்கின் கதை கல்வியில் நாம் விரும்பும் மாற்றங்களை செயல்படுத்த முனைந்த டேவிட்டின் கனவாகவும் விரிகிறது.

கவிஞனும் கவிதையும் -4 சு துங் போவின் நிலவு

அமெரிக்கக் கவிஞர் W.S.மார்வின் பதினோறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனக்கவிஞர் சு துங் போ (Su Tung-Po) பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார். சு துங் போவிற்கு ஒரு கடிதம் என்ற அந்தக் கவிதையில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கேட்ட அதே கேள்விகளைத்தான் நானும் கேட்கிறேன் தொனியைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை என்கிறார் மார்வின் சு துங் போவை வாசித்தவர்களுக்குத் தெரியும். அவர் விடையில்லாத கேள்விகளை எழுப்பி அதன் வழியே இயற்கையின் மர்மத்தை, வாழ்வின் …

கவிஞனும் கவிதையும் -4 சு துங் போவின் நிலவு Read More »