காலை உணவுத் திட்டம்

அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளிலுள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 மாணவர்கள் இதனால் பயன்பெறுவார்கள். மாணவர்களுக்கு காலை, மதியம் என இருவேளை உணவு வழங்குவதில் இந்தியாவின் முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்வது பெருமையளிக்கிறது. நான் பள்ளியில் படிக்கும் நாட்களில் வறுமையான குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களில் சிலர் காலை உணவு …

காலை உணவுத் திட்டம் Read More »

திருச்சி புத்தகத் திருவிழா

திருச்சி புத்தகத் திருவிழா செப்டம்பர் 16 முதல் 25 வரை நடைபெறுகிறது. இடம் : வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானம். திருச்சி நேரம் காலை 11 மணி முதல் இரவு 9 வரை இதில் செப்டம்பர் 24 சனிக்கிழமை மாலை வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் திருச்சி புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அங்கே எனது அனைத்து நூல்களும் கிடைக்கும்.

யாமம் தெலுங்கு மொழிபெயர்ப்பு

எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவை நாவல் குறித்து வெளியான அறிமுகக்குறிப்புகள் இந்த நாவலை தெலுங்கில் ஜி. பாலாஜி மொழியாக்கம் செய்துள்ளார். இவரே தற்போது எனது சஞ்சாரம் நாவலை சாகித்ய அகாதமிக்காக மொழியாக்கம் செய்துள்ளார்

அவளும் அவனும்

கடிதம் வழியாகவே படம் துவங்குகிறது. ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்ட பினா மற்றும் ஆல்ஃபிரடோ கடிதங்களின் வழியே மனதை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் காதலர்களாக இருக்கக் கூடும் என்ற எண்ணம் நமக்கு உருவாகிறது. The Visit (1963) என்ற இத்தாலியப்படம் பினாவின் ஒருநாளிற்குள் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது ரயில் நிலையத்தில் படபடப்புடன் காத்திருக்கிறாள் பினா. அங்கே வரும் இரண்டு கன்னியாஸ்திரீகள் அவளது மிகையான ஒப்பனையைக் கண்டு நகைக்கிறார்கள். அவளோ ஆல்ஃபிரடோவின் வருகைக்காக ஆவலாகக் …

அவளும் அவனும் Read More »

குற்றத்தின் பாதை

புதிய சிறுகதை (டெல்லி தமிழ்சங்க மலரில் வெளியானது.) தாத்தாவைக் கைது செய்வதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் வீட்டிற்கு வந்த ஏப்ரல் மாதத்தின் புதன்கிழமை முற்பகலில் கூர்வாள் போல வெயில் மினுங்கிக் bகாண்டிருந்தது. அப்போது என் வயது பனிரெண்டு. தாதன்குளத்தில் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன் அப்பாவின் வேலை காரணமாக அம்மாவும் தம்பிகளும் புனலூரில் வசித்தார்கள். என்னை மட்டும் தாத்தா வீட்டில் விட்டிருந்தார்கள். தாத்தாவிற்கு எட்டூர் கண்மாயை ஒட்டி நாலு ஏக்கர் வயலும் கரிசல் நிலமும் இருந்தது. வயலடியில் பெரிய படிக்கிணறு. …

குற்றத்தின் பாதை Read More »

சலூன் நூலக விழா

இரண்டு நாட்களாகத் தூத்துக்குடியிலிருந்தேன். தனது சலூனில் நூலகம் ஒன்றை அமைத்து புத்தக வாசிப்பைப் பரவலாக்கி வரும் பொன் மாரியப்பன் இலக்கிய வாசகர் திருவிழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். இப்படி ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் எங்கும் நடந்ததில்லை. மில்லர்புரத்தில் தனது சலூன் உள்ள வீதியிலே மேடை அமைத்து திறந்தவெளிக் கூட்டமாக அமைத்திருந்தார். இருநூறு பேருக்கும் மேலாக வந்திருந்தார்கள். அவரது கடையின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றிப் பொது மருத்துவமனை மருத்துவர்கள், தொழிலதிபர்கள். அரசு அதிகாரிகள். வங்கி அதிகாரி. பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி …

சலூன் நூலக விழா Read More »

உறவும் நட்பும்

கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த்-ன் ‘அழிந்தபிறகு‘ நாவலில் வரும் யசவந்தராயர் மறக்கமுடியாத கதாபாத்திரம். தற்செயலாக அவரை ரயில் பயணத்தில் சந்திக்கும் கதைசொல்லி பின்பு மும்பையில் அவரைத்தேடிச் சென்று நட்பு கொள்வது. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது ஆசைகளை நிறைவேற்ற முனைவதும் நாவலில் மிகசிறப்பாக எழுதப்பட்டுள்ளது இந்த நாவலில் வரும் கதைசொல்லி பயணத்தை விரும்புகிறவன். நம்முடைய வாழ்க்கையே ஒரு ரயில் பயணம் தான் என்கிறான். நமக்கான இடம் கிடைக்காவிட்டால் பயணத்தில் நின்று கொண்டே பயணிப்பது போன்ற நிலை வாழ்க்கையிலும் …

உறவும் நட்பும் Read More »

என்றாவது ஒரு நாள்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (ஆங்கிலத்திலிருந்து தமிழில்: எஸ்.எம்.ஏ.ராம்) அந்தத் திங்கள் கிழமை மழையின்றி வெதுவெதுப்பாய் விடிந்தது. முறையான மருத்துவப் பட்டம் எதுவுமற்ற பல் மருத்துவர் ஆரிலியோ எஸ்கோவர் விடிகாலையிலேயே எழுந்து விடும் வழக்கமுள்ளவர் என்பதால், சரியாய் ஆறு மணிக்குத் தன் அலுவலகத்தைத் திறந்தார். இன்னமும் பிளாஸ்டர் அச்சிலேயே பொருத்தி இருந்த  சில பொய்ப்பற்களைக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து  வெளியில் எடுத்தார். பின், கை நிறையப் பல் சிகிச்சைக் கருவிகளை அள்ளி எடுத்து, அவற்றின் நீளங்களுக்கு ஏற்றவாறு, காட்சிக்கு வைப்பது …

என்றாவது ஒரு நாள் Read More »

கதையாகும் மனிதர்கள்

Niall Williams எழுதிய History of the Rain நாவல் எனக்குப் பிடித்தமானது. இந்நாவலை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். சிறிய நாவல். எளிமையான கதை. ரிச்சர்ட் பாக்கை நினைவுபடுத்தும் எழுத்து. இளவயதிலே நோயாளியாகி படுக்கையில் வாழும் ரூத் தன்னைச் சுற்றி நிறையப் புத்தகங்களைக் கொண்டிருக்கிறாள். அவளது கட்டில் படகு போன்ற வடிவில் இருக்கிறது. நோயாளியான அவளுக்கு வேதனையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி புத்தக வாசிப்பு மட்டுமே. புத்தகங்களின் வழியாக அவள் தனது தந்தையைத் தேடுகிறாள். கதை என்பது …

கதையாகும் மனிதர்கள் Read More »

ராபர்ட் போல்ட்

டேவிட் லீன் பற்றிய ஆவணப்படம் ஒன்றில் அவர் தனது படங்களின் திரைக்கதை ஆசிரியர் ராபர்ட் போல்ட் பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். ராபர்ட் போல்ட் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர். டேவிட் லீனின் முக்கியப் படங்கள் யாவும் அவர் எழுதியவை. ராபர்ட் போல்ட் எழுதித்தருவதில் மிகக் குறைவாகவே மாற்றம் செய்வேன். மற்றபடி அவரது எழுத்துப்பணியில் குறுக்கிட மாட்டேன். திரைக்கு ஏற்ப ஒரு காட்சியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவரை விடச் சிறப்பாக எவராலும் வசனம் …

ராபர்ட் போல்ட் Read More »