கதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் நாவல் குறித்து விவாதிப்பதற்காக ஒரு நாள் முகாமை நடத்தலாம் என அறிவித்திருந்தேன்.
நண்பர்கள் பலரும் ஒரு நாள் போதாது என்று விரும்புகின்ற காரணத்தால் அது இரண்டு நாள் இலக்கிய முகாமாக மாற்றப்படுகிறது
ஜுன் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் உள்ள தன்னார்வ நிறுவன வளாகம் ஒன்றில் இந்த முகாம் நடைபெற உள்ளது.
இம் முகாமை டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைப்பு செய்கிறது
இந்த முகாமில் உலகின் தலைசிறந்த நாவல்கள், தமிழ்நாவலின் சமகாலப்போக்குகள் , தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள்ஆகிய மூன்று அமர்வுகள் நடைபெற இருக்கின்றன. இத்துடன் நாவல் எழுத விரும்புகிறவர்களுக்கான கலந்துரையாடலும் நடைபெற உள்ளது
முன்பதிவு செய்து கொள்கிற வாசகர்கள் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள முடியும்.
இதற்கான பதிவுக் கட்டணம் ரூ 1200 (உணவு மற்றும் தங்குமிடத்திற்காக)
சென்னையில் இருந்து பயணம் செய்ய விரும்புகிறவர்கள் அதற்கான கட்டணத்தை தனியே செலுத்தினால் தனிப்பேருந்தில் இடம் கிடைக்கும்
பேருந்து பயண கட்டண விபரம் மற்றும் முன்பதிவு குறித்து நண்பர் வேடியப்பனிடம் அறிந்து கொள்ளவும்
உங்களின் வருகையை kathaipesuvom@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உறுதிபடுத்துங்கள்.
தொடர்புக்கு :
வேடியப்பன்
Ph”+91 44 65157525, Cell +91 9940446650
டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை – 600078.