எனது நாடகங்கள்

ஒரியண்ட் பிளாக்ஸ்வான் மற்றும் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரி இணைந்து வெளியிட்டுள்ள FOUR TAMIL PLAYS நூலில் எனது நாடகங்களாக அரவான், மற்றும் உருளும்பாறைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனை  கே. லதா, பத்மா வி.மெகர்டிச், தன்யா சி.லாரன்ஸ் மூவரும் இணைந்து தொகுத்திருக்கிறார்கள்.

இந்த நாடகங்கள் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்பவர்களுக்குப் பாடமாக வைக்கபட்டுள்ளது. இத்தொகுப்பில் ந.முத்துசாமியின் இரண்டு நாடகங்களும் இடம் பெற்றுள்ளன.

ஆங்கிலத்தில் இந்த நாடகங்களை மொழியாக்கம் செய்த பேராசிரியர் பத்மா, பேராசிரியர் பிரேமா ஜெகநாதன் ஆகியோருக்கு மனம் நிரம்பிய நன்றி. நாடகங்களின் மொழியாக்கத்தினைச் சீர்செய்வதில் உதவிய எழுத்தாளர் திலீப்குமார், பேராசிரியர் மங்கை, அரவான் நாடகத்தை நிகழ்த்திய நண்பன் கருணாபிரசாத், உருளும் பாறைகள் நாடகத்தை நிகழ்த்திய நண்பர் சுந்தர்காளி, மற்றும் இந்த ஆங்கில நாடகத்தொகுப்பு வெளியாக முக்கியக் காரணமாக இருந்த ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

•••

0Shares
0