சைக்கிள் கமலத்தின் தங்கை

கவிஞர் ஞானக்கூத்தன் நினைவாக சைக்கிள் கமலத்தின் தங்கை என்றொரு சிறுகதை  எழுதியிருக்கிறேன். இம்மாத உயிர்மை இதழில்  கதை வெளியாகியுள்ளது.   ஒரு வாரத்திற்குள்  ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கதையைப் பாராட்டித் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது.

கதையை உயிர்மைக்கு அனுப்பிய இரவு மனுஷ்யபுத்திரன் தொலைபேசியில் அழைத்து  இது மிக முக்கியமான கதை என தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். சிறுகதை ஒன்று உயிர்மையின் அட்டையில் விளம்பரப்படுத்தபட்டிருப்பது இதுவே முதல்முறை.

கதைக்கு  அரஸ் சிறப்பான ஒவியங்களை வரைந்துள்ளார்.  கதையைப் பாராட்டி வண்ணதாசன், தேவதச்சன், தியோடர் பாஸ்கரன், அபிலாஷ், வெண்ணிலா, வேலூர் லிங்கன், அ.ராமசாமி விரிவாக உரையாடியது மிகுந்த சந்தோஷம் தந்தது

அனைவருக்கும் என் அன்பும் நன்றிகளும்

••

0Shares
0