துயில் வெளியீட்டு விழா

எனது புதிய நாவல் துயில் வெளியீட்டு விழா அரங்குநிரம்பிய பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது, நான் விரும்பியபடியே நாவல் பற்றிய கலந்துரையாடல்  தனித்துவமானதாக அமைந்திருந்தது,

துயில் நாவல் அச்சு  மற்றும் வடிவாக்கத்தில் வெகு நேர்த்தியாக உருவாகப்பட்டிருக்கிறது. அதற்காக உயிர்மை பதிப்பக ஊழியர்களுக்கும் நண்பர் மனுஷயபுத்திரனுக்கும் மனம் நிறைந்த நன்றி  

விழாவிற்கு வந்து சிறப்பித்த அத்தனை பேருக்கும், மின்னஞ்சலில் வாழ்த்து அனுப்பிய நண்பர்களுக்கும் இனிய நன்றி

புத்தக கண்காட்சியில் சந்திப்போம்

ஜனவரி எட்டாம் தேதி முதல் தினசரி மாலை 4.30 முதல் 8.30 வரை உயிர்மை அரங்கில் இருப்பேன், விரும்பும் நண்பர்கள் சந்திக்கலாம்

••

நிகழ்ச்சியின் முக்கியப் புகைப்படங்களைக் காண இந்த இணைப்பை பார்க்கவும்

https://picasaweb.google.com/thamizhstudio/rLZekE#

நன்றி. தமிழ் ஸ்டுடியோ

0Shares
0