மதுரையில்

வதனம் இலக்கிய அமைப்பு மே 23 சனிக்கிழமை அன்று மதுரையில்  எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளுடன் ஒரு நாள் என்ற கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் எனது எட்டு சிறுகதை தொகுதிகள் குறித்து எட்டு எழுத்தாளர்கள் உரையாற்ற இருக்கிறார்கள்

தோழர் எஸ்.ஏ.பெருமாள் தலைமை வகிக்கிறார். எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் முன்னிலை வகிக்கிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் சிறப்புரை வழங்குகிறார்.  சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர் தேவதச்சன், இயக்குனர் சீனுராமசாமி,  கவிஞர் தேவேந்திரபூபதி கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்வினை கவிஞர் ஆத்மார்த்தி ஒருங்கிணைப்பு செய்து நடத்துகிறார்

1. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை: கவிஞர் கலாப்ரியா

2. காந்தியோடு பேசுவேன் :டாக்டர் பிச்சை

3. மழைமான் : எழுத்தாளர் ஷாஜகான்

4. வெயிலைக் கொண்டு வாருங்கள்: எழுத்தாளர் முருகேச பாண்டியன்

5. நகுலன் வீட்டில் யாருமில்லை:கவிஞர் யவனிகாஸ்ரீராம்

6. புத்தனாவது சுலபம் :எழுத்தாளர் மணிமாறன்

7. தாவரங்களின் உரையாடல் : எழுத்தாளர் சந்திரா

8. நீரிலும் நடக்கலாம்: ஜீவலட்சுமி

மாலை அமர்வில் எனது உரையும், வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளன.

இடம் : பிரேம்நிவாஸ் ஹோட்டல்

மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி. மதுரை

நேரம் : காலை 10 மணி

நாள் : 23.05.2015 சனிக்கிழமை

••


0Shares
0