Month: April 2026

கவிஞனின் நாட்கள்.

கொலம்பிய இயக்குநர் சைமன் மேசா சோட்டோ இயக்கி 2025 ல் வெளியான A Poet திரைப்படம் ஆஸ்கர் ரெஸ்ட்ரெபோ என்ற கவிஞரைப் பற்றியது. தன் தாயின் ஓய்வூதியத்தில் வாழும் ஐம்பது வயதான கவிஞரும், குடிப்பழக்கம் மற்றும் கசப்புணர்வு கொண்டவருமான ஆஸ்கர், மனைவி, மகளைப் பிரிந்து வாழுகிறார். அவரது தோற்றத்திலே அவரது தற்போதைய நிலை தெளிவாக உணர்த்தப்படுகிறது. போதுமான வருவாயில்லை. தகுந்த வேலையில்லை. தனது பல இரவுகளை உள்ளூர் மதுக்கடையில் குடித்துக் கழிக்கிறார். அங்கே, தனக்கு விருப்பமான கவிஞரான …

கவிஞனின் நாட்கள். Read More »

திரைக்கு முன்னால்.

புதிய சிறுகதை. ஏப்ரல் 13. 2026 அந்தப் பெண்கள் இருவரும் கையில் கோன்ஐஸ்கிரீம் வைத்திருந்தார்கள்.. ஆர்கேஎஸ் தியேட்டரில் கோன் ஐஸ்கிரீம் மிகுந்த சுவையாக இருக்கும். வழக்கமாகச் சபாபதியும் அவனது மனைவி தனசங்கரியும் படம் ஆரம்பிக்கும் முன்பாகவே கோன் ஐஸ் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தான் தியேட்டருக்குள் செல்வார்கள். அன்றைக்கு அவர்கள் டைட்டானிக் படத்தினைக் காணுவதற்காக வந்திருந்தார்கள். கோன்ஐஸை நோக்கித் தனது நாக்கை நீட்டிய ஆரஞ்சு வண்ண சுடிதார் அணிந்த பெண்ணிற்கு முப்பத்தைந்து வயதிருக்கக் கூடும். அருகில் நின்றவளின் வயது …

திரைக்கு முன்னால். Read More »

சலிப்பு நிறமற்றது

செகாவின் சிறுகதைகளில் சலிப்பு ஒரு முக்கியக் கருப்பொருள். சலிப்புற்ற கதாபாத்திரங்களின் மனஉணர்வுகளை, செயல்களைத் துல்லியமாக எழுதியிருக்கிறார். சலிப்பை எழுதுவது எளிதானதில்லை. அது எழுதுவதற்கான கருப்பொருளுமில்லை. அப்படியே எழுதினாலும் அது வாசிப்பிற்கு விருப்பமானதாகயிருக்காது. சலிப்பை இவ்வளவு சுவாரஸ்யமான விஷயமாகச் செகாவால் மட்டுமே மாற்ற முடிகிறது தனது மாறாத இடம் மற்றும் இருப்பு குறித்து ஆணிகள் சலிப்படைவதில்லை. மாறாகத் தான் உறுதியின் துணைவன் என்பதாகத் தன்னை உணருகின்றன. இயற்கையில் சலிப்பு என்பதேயில்லை. ஒரே செயல் நாம் அறியாத பலநூறு நுண்மாற்றங்களுடன் …

சலிப்பு நிறமற்றது Read More »

இன்றைய நிஜம்

மரியம் தௌசானி இயக்கிய மொராக்கோ திரைப்படமான ‘கல்லே மலகா’ அழகாகத் துவங்குகிறது. தனித்து வாழும் எண்பது வயதான மரியா டான்ஜியரில் வசிக்கிறார். அதுவும் கடைகள் நிறைந்த பரபரப்பான வீதி ஒன்றில் அவரது வீடிருக்கிறது. காலையில் அவர் நடந்து திரிந்து சமையலுக்குத் தேவையான காய்கறிகள். பழங்கள் என ஒவ்வொன்றாக வாங்குகிறார். கடை நடத்துபவர்களுடன் அவருக்குள்ள நீண்டகால நட்பு. அங்குள்ள இளைஞர்களுடன் நடக்கும் இயல்பான உரையாடல். பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் உள்ள உறவு என அவரது உலகம் நேர்த்தியாக மலர்கிறது. …

இன்றைய நிஜம் Read More »

அஞ்சலி

எனது அன்பிற்குரிய நண்பரும் எழுத்தாளருமான அரவிந்தன் இன்று காலமானார்.  25 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் நல்ல நட்பிருந்தது. நான்கு நாட்களுக்கு முன்பாகக் கூட தொலைபேசியில் அழைத்துப் பேசினார். ஞாயிற்றுகிழமை சந்திப்போம் என்றார். அவரது மரணம் அதிர்ச்சி தருவதாக உள்ளது. காலச்சுவடு நிறுவனத்தில் பதிப்பாசிரியராக பணியாற்றியவர் இன்று முற்பகல் நாகர்கோவிலில் மாரடைப்பின் காரணமாக இயற்கை எய்தினார். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழகிக் கொள்.

புதிய சிறுகதை. ஏப்ரல் 2. 2026 சுதர்சனம் வீட்டின் முன்கேட்டைத் திறக்க முடியாதபடி அந்த பஸ் நின்றிருந்தது. அது ஏதோ போராட்டத்திற்காக வெளியூர் ஆட்களை ஏற்றி வந்த தனியார் பஸ். அதன் முகப்பில் பெரிய துணிபேனர் வைத்திருந்தார்கள். யார் அவர்கள், என்ன போராட்டம் என எதுவும் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் சுதர்சனத்திற்கு இல்லை. காரணம் அவர்கள் தெருவை ஒட்டிய திடலை சில ஆண்டுகளாகப் போராட்ட மைதானமாக மாற்றி விட்டிருந்தார்கள். அதற்குக் கேசிஆர் திடல் எனப் …

பழகிக் கொள். Read More »