இரண்டு மொழிபெயர்ப்புகள்
எனது நூலக மனிதர்கள் கட்டுரைத் தொகுப்பு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நூல்களும் விரைவில் வெளியாகவுள்ளன.
எனது நூலக மனிதர்கள் கட்டுரைத் தொகுப்பு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நூல்களும் விரைவில் வெளியாகவுள்ளன.
தமிழ் திரையுலகின் நிகரற்ற இயக்குநர் பாரதிராஜாவின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். தமிழ் சினிமாவிற்கு புதிய அழகியலை உருவாக்கியவர். தெற்கத்தி மண்ணையும் மக்களையும் திரையில் அழியாச்சித்திரங்களாக உருவாக்கிய பெருங்கலைஞர். சிறந்த நண்பர். பண்பாளர். அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது.
புதிய சிறுகதை. ஜுன் 9 .2026 மல்லிகாவிற்குச் சினிமாவில் வரும் திருமணக்காட்சியை மிகவும் பிடிக்கும். அதற்காகவே அவள் சினிமா பார்த்தாள். தனது பக்கத்துவீட்டுப் பையன்களிடம் எந்தத் தியேட்டரில் என்ன படம் ஒடுகிறது என்பதை விசாரிப்பதோடு அதில் கல்யாணக் காட்சி இருக்கிறதா என்றும் கேட்டுத் தெரிந்து கொள்வாள். “ இருக்கிறது“ என்று சொன்னால் “ கடைசிக்காட்சியிலா“ எனக்கேட்பாள். “ இல்லைக்கா..பாதியில வருது“ என்று சொல்லிவிட்டால் போதும் அடுத்த நாளே அந்தப்படத்திற்குப் போய்விடுவாள். சினிமா பார்ப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் …
அம்ரும் திரைப்படத்தில் ஹில்லே என்ற பெண் ஹிட்லர் இறந்த சேதியை ரேடியோவில் கேள்விப்பட்டு மிகுந்த துயரம் அடைகிறாள். கர்ப்பிணியான அவள் ஆழ்ந்த மன அழுத்தத்தில் மூழ்கி எதையும் சாப்பிட மறுக்கிறாள். தங்களைக் காக்க வந்த கடவுளான ஹிட்லர் எப்படி இறந்து போவார் எனப்புலம்புகிறாள். அவர் இறந்தாலும் அவர் முன்னெடுத்த போரைத் தொடர வேண்டும் என்கிறாள். ஆனால் அதே வீட்டிலுள்ள அத்தை ஈனா ஹிட்லரின் புகைப்படத்தை அடுப்பிலிட்டு எரித்து இனி நாம் விடுதலை அடைந்தோம் என்கிறாள். இந்த இருவருக்கும் …
மார்க்கோ போலோவின் பயணநூலை விடவும் அது எழுதப்பட்டதன் பின்னுள்ள கதை அல்லது உண்மை வியப்பளிக்கிறது. கால்வினோ அதிலிருந்தே தனது புலப்படாத நகரங்கள் என்ற நாவலை எழுதியிருக்கிறார். அதில் வரும் மன்னர் குப்ளாய்கான் கற்பனையான நகரங்களை விவரிக்கத் துவங்குகிறார். அதுவும் போலோவின் உண்மை அனுபவங்களும் ஒன்றாக இணைகின்றன. இந்த இணைவு போன்றதே போலோவின் பயண நூல் எழுதப்பட்ட வரலாறும் போலோவின் நிழலாக அந்த நூலின் பின்னால் இருப்பவர் இத்தாலிய எழுத்தாளரான ரஸ்டிகெல்லோ டா பிசா. வீரசாகசக் கதைகளை எழுதும் …
1935ல் வடக்கு ஸ்பெயினின் புர்கோஸ் மாகாணத்திலுள்ள சிறிய பள்ளிக்கூடம். அதற்குப் புதிய ஆசிரியராக அந்தோனி பெனாய்கெஸ் வருகை தருகிறார். தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் உஙகளில் எத்தனை பேர் கடலைப் பார்த்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். ஒருவரும் கடல் பார்த்ததில்லை. ஆனால் கடலைப் பற்றி நிறையக் கேள்விபட்டிருக்கிறார்கள். கடல் எப்படியிருக்கும் அவர்களாகக் கற்பனை செய்திருக்கிறார்கள். அவற்றை ஆசிரியர் எழுதித் தரச் சொல்கிறார். ஒவ்வொரு மாணவனும் தனது கற்பனையில் கடலைப் பற்றி எழுதித் தருகிறான். அவற்றைத் தொகுத்து சிறிய நூலாக …
பிரேசிலிய எழுத்தாளர் மச்சடோ டி ஆசிஸ் எழுதிய Epitaph of a Small Winner நாவல் மாறுபட்ட கதை சொல்லும் முறையைக் கொண்டுள்ளது. 1881-ல் வெளியான இந்நாவல் The Posthumous Memoirs of Brás Cubas என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது. பிராஸ் குபாஸ் என்பவரின் மரணத்திற்குப் பிந்தைய நினைவுகளைக் கூறும் இந்த நாவல் வாசகர்களுடன் புதிர் விளையாட்டினை நிகழ்த்துகிறது. இதில் வரும் குபாஸ் தான் “இறந்து போன எழுத்தாளரில்லை. இறந்த பின்பு எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளன்“ என்று …
விக்டோரியா மகாராணியின் பேத்தியான இளவரசி மேரி லூயிஸ் தனது வாழ்க்கை வரலாற்றை My Memories of Six Reigns என எழுதியிருக்கிறார். தனது எண்பது ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் விதமாக இதனை எழுதியிருக்கிறார். தனது பாட்டியின் ஆலோசனைப் படி இந்நூலை எழுதியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் நினைவுகள் என்பதால் அந்தக் கால அரண்மனை வாழ்க்கையும் அன்றாட நிகழ்வுகளும் வெகு துல்லியமாக, நுணுக்கமாக விவரிக்கபட்டுள்ளன. வரலாற்றின் சில முக்கிய முடிவுகள். நிகழ்வுகள் …
எனது முணுமுணுப்புக் கட்டணம் சிறுகதை தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் அவினேனி பாஸ்கர். ஆந்திர ஜோதி இதழில் வெளியாகியுள்ளது
சிறந்த இந்தியச் சிறுகதைகளைத் தேர்வு செய்து பஞசாபியில் தொகைநூலாக வெளியிடுகிறார்கள். இந்தத் தொகுப்பில் எனது கேள்வியின் நிழல் சிறுகதை இடம் பெற்றுள்ளது. இதனை ராதிகா மொழியாக்கம் செய்துள்ளார்.