Month: August 2026

காரைக்குடி வாசகர் வட்ட நிகழ்வு

காரைக்குடி அழகப்பா பல்கலைகழக வளாகத்திலுள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்து பலரும் நின்றபடியே உரையை கேட்டார்கள். திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகம் பிரம்மாண்டமாக உருவாக்கபட்டிருக்கிறது. மூன்று தளங்கள். இரண்டு லட்சம் புத்தகங்கள் வைத்துக் கொள்ளும்படியான இடம். வாசிப்பதற்கு ஏற்ற இருக்கைகள். நிறைய நூல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூலகதின் இணையதளம், மின்நூலாக்கம் மற்றும் அரிய நூல்களை ஆவணப்படுத்தும் நிகழ்வை ப.சிதம்பரம் அவர்கள் துவக்கி வைத்தார். வாசகர் வட்ட …

காரைக்குடி வாசகர் வட்ட நிகழ்வு Read More »

காரைக்குடியில்

நாளை 28.8.26 காரைக்குடி அழகப்பா பல்கலைகழக வளாகத்திலுள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகத்தில் உரையாற்றுகிறேன். மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது அன்னையின் நினைவாக இந்த நூலகத்தை உருவாக்கியுள்ளார். நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளலாம். அன்புடன் அழைக்கிறேன்

சாமுராயின் தலைமறைவு

‘ஸ்வார்ட் ஆஃப் தி பீஸ்ட்’ திரைப்படம் தலைமறைவாக வாழும் சாமுராயின் வாழ்வைப் பேசுகிறது. செவன் சாமுராய் போன்ற படங்களில் நாம் காணும் சாமுராய்களிலிருந்து மாறுபட்டவர்கள் இதில் இடம் பெறும் சாமுராய்கள். இவர்கள் அங்கீகாரமில்லாதவர்கள். சாமுராய்கள் என்ற பெயரில் சிலர் ஏமாற்றுவேலைகள் செய்கிறார்கள். தனது இனத்திற்கான அங்கீகாரம் மற்றும் பெருமையைத் தர மறுத்த ஆலோசகரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக வாழுகிறான் கென்னோசுகே. அது ஒரு சதிச்செயல் . அவனுடன் துணை நின்றவர்கள் கொல்லப்படுகிறார்கள். கென்னோசுகே தப்பியோடுகிறான். அவனது பயணத்தில் …

சாமுராயின் தலைமறைவு Read More »

காரைக்குடியில்

காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தினுள் அமைந்துள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இந்த நூலகத்தை மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது அன்னையின் நினைவாக உருவாக்கியுள்ளார். ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு தொல்காப்பியர் அரங்கில் நிகழ்வு நடைபெறுகிறது மாணவர்கள் மற்றும் வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறவுள்ளது அனைவரும் கலந்து கொள்ளலாம்.

எழுத்தாளனின் கனவு.

அமெரிக்க எழுத்தாளரான சிந்தியா ஓசிக்கின் “பொறாமை; அல்லது, அமெரிக்காவில் யித்திஷ்” என்ற குறுநாவல் இரண்டு எழுத்தாளர்களுக்கிடையேயான பொறாமையைப் பேசுகிறது. யித்திஷ் மொழி எழுத்தாளரான ஆஸ்ட்ரோவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் புகழ்பெற்றுவிடுகிறார். அதே மொழியில் எழுதும் கவிஞர் எடெல்ஸ்டீனை யாரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அத்தோடு யித்திஷ் மொழியில் கவிதை படிப்பவர்களும் வெகுவாகக் குறைந்து வருகிறார்கள். ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் உலகின் கவனத்தைப் பெற வேண்டுமா. அல்லது சொந்த மொழியில் எழுதி அந்த வட்டத்திற்குள் மட்டும் புகழ் அடைந்தால் …

எழுத்தாளனின் கனவு. Read More »

கல்லில் அமர்ந்தவன்

புதிய சிறுகதை. ஆகஸ்ட் 18. 2026 அந்த மனிதன் வருத்தமான முகத்துடன் சாலையோரம் கிடந்த கல்லில் அமர்ந்திருந்தான். ஐம்பது வயதிருக்கும். சீரற்ற தாடி. வருத்தம் படிந்த கண்கள். தலைமுடியை சீவியிருக்கவில்லை. அழுக்கடைந்து போன பேண்ட். பொத்தான்கள் சரியாகப் போடப்படாத கோடு போட்ட சட்டை. கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருப்பதைப் பார்த்தால் மீளமுடியாத கவலை கொண்டவனைப் போலிருந்தது. அந்த மனிதன் அமர்ந்திருந்த சாலை வழியாகவே குமரேசன் தினமும் ஆபீஸ் போக வேண்டும். ஆகவே ஒரு வாரமாக அந்த ஆளைப் …

கல்லில் அமர்ந்தவன் Read More »

தமிழன் விருது

புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கும் தமிழன் விருது எனக்கு வழங்கப்பட்டது. இலக்கியப் பிரிவில் வாழ்நாள் சாதனையாளர் விருதிற்காக என்னைத் தேர்வு செய்திருந்தார்கள். நேற்று மாலை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. எனது ஆசான் எஸ்.ஏ. பெருமாள் மற்றும் புதிய தலைமுறை சேர்மன் சத்யநாராயணா இருவரும் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கினார்கள். நிகழ்வில் கலந்து கொள்ள உறுதுணை செய்த கார்மல், பரிசல் கிருஷ்ணா, நந்தினி உள்ளிட்ட அனைவருக்கும் மனம் …

தமிழன் விருது Read More »