Month: August 2026

ஓவியம் வரையப்பட்ட கடிதம்.

ஹெர்மன் ஹெஸ்ஸேயிற்கும் தாமஸ் மானிற்கும் இடையில் எழுதப்பட்ட கடிதங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். ஹெஸ்ஸே ஒரு ஓவியர் என்பதால் அவரது கடிதங்களின் ஒரங்களிலும் தலைப்பிலும் தான் விரும்பியதை வரைந்து அனுப்பியிருக்கிறார். அழகான நீர்வண்ண ஓவியங்களுடன் எழுதப்பட்ட கடிதங்களை மான் வியந்து பாராட்டுகிறார். அவர்களுக்குள் இருந்த நட்புறவும் பரஸ்பர மரியாதையும் ஒருவருக்கொருவர் உதவிய விதமும் கடிதங்களில் வெளிப்படுகிறது. ஹெர்மன் ஹெஸ்ஸேயிற்குப் பல்வேறு விதங்களில் தாமஸ் மான் உதவி செய்திருக்கிறார். அது போலவே மானின் கட்டுரைகளை ஹெஸ்ஸேயும் அவரது மனைவியும் சேர்ந்து …

ஓவியம் வரையப்பட்ட கடிதம். Read More »

மறக்கப்பட்டவர்கள்.

ராஜஸ்தானின் சித்தோர்கரை பூர்வீகமாகக் கொண்ட காடியா லோஹர் சமூகத்தினர் நாடோடிகளாக வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆயுதங்கள் செய்வதில் திறமை பெற்ற கொல்லர்களான இவர்கள் மாட்டுவண்டிகளில் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் பயணித்தபடி இருக்கிறார்கள். இரும்பு மற்றும் பித்தளையில் கலைப்பொருட்கள் மற்றும் கருவிகள் செய்வது இவர்களின் வேலையாகும். நிரந்தர வசிப்பிடமில்லாத இவர்கள் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். அடையாள அட்டைகளோ, எவ்விதமான அரசு உதவிகளோ கிடைக்காத இவர்களின் வாழ்க்கையை India’s Forgotten People …

மறக்கப்பட்டவர்கள். Read More »

உலகின் அழகு

சாஷா வாட்டர்ஸ் இயக்கிய Mary Oliver: Saved by the Beauty of the World ஆவணப்படம் கவிஞரின் வாழ்க்கை மற்றும் இலக்கியச் செயல்பாடுகளை விவரிக்கிறது. மேரி ஆலிவரை நினைவுபடுத்துவது இயற்கையின் மீதான அவரது ஈடுபாடு மற்றும் புரிதல். இந்த ஆவணப்படம் அதனைச் சரியாகப் பதிவு செய்துள்ளது. மேரி 1935-ல் பிறந்து, ஓஹியோவில் உள்ள ஒரு சிறிய ஊரில் வளர்ந்தவர். தினமும் எழுதுவதை ஒரு சடங்காகக் கொண்டிருந்தவர். நகர வாழ்வின் பரபரப்பை விட்டு ஒதுங்கிய அவரது வீடு …

உலகின் அழகு Read More »

இடக்கை பேசும் நீதி.

கவிஞர் க.வை. பழனிச்சாமி ‘இடக்கை’ நாவலின் மையம் எது? நாவலின் திறவுகோல் எங்கே இருக்கிறது? தூமகேது தான் நாவலின் திறவுகோல். இரண்டாவது அத்தியாயம் இப்படித் தொடங்குகிறது…..”முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் இறந்துபோன இரண்டாம் நாள், சத்கரில் ஆட்டுத்தோல் பதப்படுத்துபவனும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையும் இடக்கைப் பழக்கம் கொண்டவனும் வறியவனுமான தூமகேது திருட்டுக் குற்றம் சுமத்திக் கைது செய்யப்பட்டான்.அதே இரவில் ஒளரங்கசீப்பின் அந்தப்புர பணியாளரும் அரவாணியும் மஹல்தாருமான அஜ்யா பேகம் அஹமது நகர் அரண்மனையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாள்.” …

இடக்கை பேசும் நீதி. Read More »

ஈரோடு புத்தகத் திருவிழாவில்

நேற்று மாலை ஈரோடு புத்தகத் திருவிழாவில் உரையாற்றினேன். அரங்கு நிறைந்திருந்தது. பெரியசாமி தூரன் மற்றும் ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாவல்கள் குறித்தும், காந்தியரான ரொனால்டு டங்கன் பற்றிய அறிமுகத்தையும் உரையில் வழங்கினேன். மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்டாலின் குணசேகரன் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்வில் விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்கள் சிறந்த பதிப்பாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.