Month: September 2026

தஸ்தாயெவ்ஸ்கியின் ஓவியம்

ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற உருவப்படத்தை வரைந்தவர் ஓவியர் வசிலி பெரோவ். 1872-ல் வரையப்பட்ட இந்த ஓவியம் மாஸ்கோவில் உள்ள ட்ரெட்டியாகோவ் கேலரிக்காக வரையப்பட்டது. அப்போது தஸ்தாயெவ்ஸ்கியின் வயது 51. தனது இடியட் நாவலை எழுதிக் கொண்டிருந்தார். தொடராக அது வெளியாகிவந்தது.  பேடன்பேடனுக்குச் சென்று சூதாடி பொருளை இழந்து அப்போது தான் ரஷ்யா திரும்பியிருந்தார்.  கடனில் தத்தளித்த காலமது. அவரது மனைவி அன்னாவும் உடல்நலமற்றிருந்தார். இந்த ஓவியத்தை  வரைவதற்காக பெரோவ் ஒருவார காலம் தினமும் தஸ்தாயெவ்ஸ்கியை சந்தித்து அவரது …

தஸ்தாயெவ்ஸ்கியின் ஓவியம் Read More »

அஞ்சலி

பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் பழகியிருக்கிறேன். மிகச்சிறந்த பண்பாளர். தமிழ் அறிஞர். பேச்சாளர். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

நினைவின் ஈரம்

புதிய சிறுகதை.செப்டம்பர் 7 2026 புறப்படுவதற்கு முன்பே சிவா சொல்லியிருந்தான் “நாம இன்னைக்கு ஷூட் பண்ணப் போற டி.சி. தாஸிற்கு ஞாபகமே கிடையாது. அவர் இருக்கிற ரூம்க்குள்ளே தான் ஷுட் பண்ணணும்.. எக்ஸ்ட்ரா லைட் எடுத்துக் கோ.. “ “ஞாபகமே இல்லாதவரை எதுக்குச் சிவா ஷூட் பண்ணனும்“ எனக்கேட்டான் அஸ்வின் “அவருக்கு ஸ்டேட் அவார்ட் கொடுத்திருக்காங்க. ஏவிக்கு அவரோட விஷுவல் வேணும். கௌதம் சார் இப்போ உள்ள விஷுவல் கேட்கிறார். அதுவும் வீட்டுக்குள்ளே நடக்கிற மாதிரி. புக் …

நினைவின் ஈரம் Read More »

ஆட்டுப்பூனை

ஃபிரான்ஸ் காஃப்கா தனது குறுங்கதை ஒன்றில் விசித்திரமான விலங்கு ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். A Crossbreed என்ற கதையில் வரும் விலங்கு பூனையின் தலையும் ஆட்டுக்குட்டியின் உடலும் கொண்டிருக்கிறது. ஆட்டுப்பூனை என்று அதனைக் குறிப்பிடலாமா. இந்த விலங்கு அவரது தந்தையிடமிருந்து பாரம்பரியமாகக் கிடைத்ததாகக் காஃப்கா குறிப்பிடுகிறார். ஆட்டுக்குட்டியைப் போல உடல் கொண்டிருந்தாலும் அது ஆட்டுக்குட்டி போல நடந்து கொள்ளவில்லை. அது போலவே பூனையின் தலை கொண்டிருந்தாலும் எலியைத் துரத்தவில்லை. சில நேரம் ஆடு போல அங்குமிங்கும் ஒடுகிறது. …

ஆட்டுப்பூனை Read More »

படைப்பு சங்கமம் விருது

சிறந்த நூல்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு ஆண்டு தோறும் படைப்பு குழுமம் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான படைப்பு சங்கமத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு வழங்கப்படுகிறது விருது வழங்கும் விழா செப்டம்பர் 26 மாலை சென்னை அருங்காட்சியக கலையரங்கில் நடைபெறுகிறது