Month: September 2026

வெளியில் ஒருவன் புதிய பதிப்பு

எனது முதல் சிறுகதை தொகுப்பு “வெளியில் ஒருவன். “ சென்னை புக்ஸ் வெளியிட்டார்கள். . கம்ப்யூட்டரை பயன்படுத்தி இதன் அட்டையை ஓவியர் மருது வடிவமைத்தார். அந்தத் தொகுப்பு பல ஆண்டுகளாக மறுபதிப்பு காணவில்லை. தேசாந்திரி பதிப்பகம் இத்தொகுப்பின் புதிய பதிப்பை வெளியிடுகிறார்கள். இதற்கான அட்டைப்படத்தை எனது மகன் ஹரிபிரசாத் சிறப்பாக உருவாக்கியுள்ளான். வெளியில் ஒருவன்புதிய பதிப்பு டிசம்பர் 25ல் வெளியாகும். •••

ஆன்டனின் காதல்

ஆஸ்கார் விருது பெற்ற டேனிஷ் இயக்குநரான பில்லி ஆகஸ்ட் இயக்கிய ‘தி கிஸ்’ (கைசெட்), ஸ்டெஃபான் ஸ்விக்கின் நாவலை மையமாகக் கொண்டது. 1914-ஆம் ஆண்டில் கதை நடக்கிறது ஆன்டன் அபில்கார்ட் என்ற இளம் ராணுவ அதிகாரியின் பார்வையில் கதை விவரிக்கபடுகிறது. ராணுவப் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்ட ஆன்டன் தனக்கான செலவுகளுக்குப் பணக்கார அத்தையைத் தேடிச் சென்று உதவி கேட்பதில் படம் துவங்குகிறது. தந்தையால் ஏற்படுத்தபட்ட அவச்செயலை சரிசெய்து குடும்பக் கௌரவத்தை மீட்கும் பொறுப்புள்ளவனாக ஆன்டன் அறிமுகமாகிறான். குதிரைப்படை …

ஆன்டனின் காதல் Read More »

நாளின் வரலாறு

இரினா பாபெர்னோ எழுதிய Who, What Am I? நூல் டால்ஸ்டாயின் நாட்குறிப்பு மற்றும் தன்னை ஆராய்ந்த விதம் பற்றி விரிவாக ஆராய்கிறது. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன •• 1851 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இருபத்திரண்டு வயதான டால்ஸ்டாய், நீண்ட காலமாகத் திட்டமிட்டிருந்த புதிய திட்டத்தைத் தொடங்கினார். அதாவது தனது ஒரு நாளில் என்னவெல்லாம் நடக்கிறது என்ற முழுமையான விவரத்தை குறிப்பேட்டில் எழுதுவது. இதன் வழியாகத் தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும் என …

நாளின் வரலாறு Read More »

நிழல்களின் நாடகம்.

கோபயாஷி மசாகி இயக்கிய பிளாக் ரிவர் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஜப்பானிய வாழ்க்கையைப் பேசுகிறது. 1957ல் வெளியான திரைப்படம். ஜப்பானிய கறுப்பு வெள்ளைப்படங்களுக்கென விசேசமான அழகியல் இருக்கிறது. இப்படத்திலும் அதைக் காண முடிகிறது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பேசும் மாக்சிம் கார்க்கியின் The Lower Depths நாடகத்தின் சாயலில் உள்ள படம். அமெரிக்க ராணுவ முகாமிற்குச் செல்லும் சாலையில் ஆற்றங்கரையோரமாகக் குடிசைப்பகுதி காணப்படுகிறது. கைவிடப்பட்ட குடியிருப்பு போன்ற பழைய கட்டிடம் ஒன்றில் குறைவான வாடகைக்குப் பலரையும் குடிவைத்துள்ளார்கள். …

நிழல்களின் நாடகம். Read More »

ஷியாம் பெனகல்

இயக்குநர் ஷியாம் பெனகல் பற்றி நல்லதொரு ஆவணப்படம் இணையத்தில் காணக்கிடைக்கிறது. காலித் முகமதுவின் இயக்கம். வர்ணனை: நஸ்ருதீன் ஷா பெனகலின் இளமைப்பருவம். விளம்பரத் துறையில் பணியாற்றிய அனுபவம். முதல்படம் எடுத்த விதம். அவரது படங்களின் உருவாக்கம் குறித்த கலைஞர்களின் நேர்காணல்கள். தொலைக்காட்சித் தொடர்கள். சத்யஜித்ரேயின் நட்பு  எனச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். இதில் கேன்ஸ் திரைப்படவிழாவில் தங்கள் படத்திற்கு வரவேற்பு கிடைக்க மேற்கொண்ட முயற்சிகள். ஸ்மிதா பாட்டீல் பற்றிய அவதானிப்பு. ஷபனா ஆஸ்மியின் மனம் திறந்த நேர்காணல் போன்றவை …

ஷியாம் பெனகல் Read More »

விருது விழா

படைப்புக்குழுமம் சார்பில் நடைபெறும் படைப்பு சங்கமம் – 2026 விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு வழங்கப்படுகிறது இந்த நிகழ்வு செப்டம்பர் 26 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு சென்னை அருங்காட்சியக கலையரங்கில் நடைபெறுகிறது முழுநாள் நிகழ்வாக இந்த விழா நடைபெறுகிறது. இதில் படைப்பிலக்கிய விருதுகள். திரைப்படைப்பாளிகளுக்கான விருதுகள். சிறந்த நூலிற்கான பரிசளிப்பு. நூல் வெளியீடு போன்ற அமர்வுகள் நடைபெறுகின்றன அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

மார்க்வெஸின் சேவற்சண்டை

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது யாரும் எழுதுவதில்லை கர்னலுக்கு குறுநாவலில் சேவற்சண்டையைப் பற்றி எழுதியிருக்கிறார். அதில் வரும் கர்னல் மார்க்வெஸின் தாத்தா நிகோலாஸ் ரிக்கார்டோவின் மறுவடிவம் என்றொரு குறிப்பை வாசித்திருக்கிறேன். காளைச் சண்டையைப் பற்றி ஹெமிங்வே எழுதியதைப் போலச் சேவற்சண்டையைப் பற்றிச் சிறப்பாக எழுதியவர் மார்க்வெஸ். எனது பால்ய வயதில் எனது கிராமத்திலும். சுற்றியுள்ள ஊர்களிலும் சேவற்சண்டை நடப்பதைக் கண்டிருக்கிறேன். சண்டைச்சேவல்களை வளர்த்தவர்களையும் அறிவேன். சேவல் வளர்க்க விரும்பிய வசதியானவர்கள் அதனைக் கோவிந்தன் என்பவரின் பொறுப்பில் வளர்க்க …

மார்க்வெஸின் சேவற்சண்டை Read More »

வான்கோ தலையணை

புதிய சிறுகதை. செப்டம்பர் 14 2026 அவள் இரண்டு வான்கோ தலையணைகளை வாங்கியிருந்தாள். ஒன்றில் வான்கோவின் உருவமும் மற்றொன்றில் சூரியகாந்திப்பூக்களின் ஓவியமும் இருந்தன. இணையத்தில் தேடி அந்த இரண்டு தலையணைகளையும் வாங்கியிருந்தாள். அதன் விலை எவ்வளவு என அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்தத் தலையணைகளைப் பார்த்தவுடன் எதற்காக இப்படி ஓவிய உறை கொண்ட தலையணையை வாங்க வேண்டும் என்று தான் ரவிக்குத் தோன்றியது. பிரவீணாவாகச் சொல்லட்டும் என அதை அலட்சியமாகப் பார்த்தான். அவள் எதையும் சொல்லவில்லை. …

வான்கோ தலையணை Read More »