admin

தேர் சிற்பங்கள்

தேவகியின் தேர் என்றொரு சிறுகதையை ஆறுமாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அந்தக் கதையில் ஊர் ஊராகச் சென்று தேரைப் புகைப்படம் எடுக்கும் ஒரு புகைப்படக்கலைஞரைப் பற்றி எழுதியிருக்கிறேன். பிரான்சு நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞன் தமிழகத்திலுள்ள அரிய தேர்சிற்பங்களைப் புகைப்படம் எடுப்பதற்காக அலைந்து கொண்டிருப்பான். அவன் தேவகியின் ஊருக்கு வந்து தங்கிய போது நடந்த அனுபவத்தைக் கதை விவரிக்கிறது. அதே போல தேர் சிற்பங்களைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக்கலைஞரைப் பற்றி ஒரு கட்டுரை விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ளது. …

தேர் சிற்பங்கள் Read More »

புகையில்லாத தீச்சுடர்

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை ஒன்றை பி.கே. சிவகுமார் தமிழாக்கம் செய்து திண்ணை இதழில் வெளியிட்டிருக்கிறார். Commentaries on Living தொகுதியில் உள்ள சிறு கட்டுரையது. 2002ல் வெளியாகியுள்ளது ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரையை மிகச் சிறப்பாக, நுட்பமாகச் சிவக்குமார் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பும் புரிதலும் இல்லாமல் இது சாத்தியமில்லை. பி.கே.சிவக்குமாருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் சிறப்பான மொழியாக்கத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை வாசிப்பது மிக நெருக்கமான அனுபவத்தைத் தருகிறது. பி.கே.சிவக்குமார் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து தனியே நூலாக வெளியிடவில்லை. ஒருவேளை அனுமதி …

புகையில்லாத தீச்சுடர் Read More »

அழைப்பிதழ்

நவம்பர் 14 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை யாவரும் பதிப்பகம் மற்றும் நற்றுணை கலந்துரையாடல் அமைப்பு இணைந்து நடத்துகிறது. இந்த நிகழ்வு மயிலாப்பூரிலுள்ள நிவேதனம் அரங்கில் நடைபெறுகிறது. இந்த அரங்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் Yellow Pages அருகில் அமைந்துள்ளது. (234, Venkatachalam St, Dwarka Colony, Mylapore, Chennai – 600004) அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி …

அழைப்பிதழ் Read More »

36 புகைப்படங்கள்

The Last Roll Of Kodachrome என்ற ஆவணப்படம் பிரபல புகைப்படக்கலைஞரான ‘ஸ்டீவ் மெக்குரி’ கடைசிக் கோடக்குரோம் படச்சுருளைப் பயன்படுத்தி 36 புகைப்படங்களை எடுப்பதை ஆவணப்படுத்தியிருக்கிறது படச்சுருள் தயாரிப்பில் கோடக் நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. டிஜிட்டில் கேமிரா வந்தபிறகு படச்சுருளின் தேவை வெகுவாகக் குறைந்து போனதால் அந்நிறுவனம் தனது படச்சுருள் தயாரிப்பை 2009 ஜுன் 22ல் கைவிட்டது. கடைசியாக இருந்த ஒரு படச்சுருளை ஸ்டீவ் மெக்குரியிடம் கொடுத்து அவர் விரும்பும் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னது …

36 புகைப்படங்கள் Read More »

அஞ்சலி

பெருமதிப்பிற்குரிய தோழரும் மதுரைக்கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நன்மாறன் இன்று காலமானார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரை அறிவேன். எளிமையும் நேர்மையும் கொண்ட அற்புதமான தோழர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சார்பில் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் பதவியிலிருந்தார். அந்த நாட்களில் மதுரை மக்களின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். நன்மாறனின் மேடைப்பேச்சில் நகைச்சுவையும் சிந்தனை தெறிப்பும் ஒன்று கலந்திருக்கும். …

அஞ்சலி Read More »

அறியப்படாத மார்க்வெஸ்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் வாழ்க்கை வரலாற்றை அவரது நண்பர்கள், ஊர்மக்கள். பதிப்பாளர்கள், வாசகர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நேர்காணல் வழியாகத் தொகுத்திருக்கிறார் சில்வானா பேட்னார்ஸ்டோ. பத்திரிக்கை ஒன்றிற்கான சிறிய நேர்காணலாகத் துவங்கி நூற்றுக்கணக்கானவர்களைத் தேடிச் சென்ற இலக்கியப் பயணமாக மாறியிருக்கிறது. மார்க்வெஸ் தனது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலை மரியா லூயிசா எலியோ மற்றும் ஜோமி கார்சியா அஸ்காட்டிற்குச் சமர்பணம் செய்திருக்கிறார். சில்வானா அவர்களைத் தேடிச் சென்று நேர்காணல் செய்திருக்கிறார். அவர்களின் …

அறியப்படாத மார்க்வெஸ் Read More »

நினைவுப் பெண்

புதிய சிறுகதை ஹூப்ளி எக்ஸ்பிரஸில் யாரோ ஒரு பெண் தவறவிட்டதாக அந்தச் சிவப்பு நிற மணிபர்ஸை ரயில்வே காவல் நிலையத்தில் வித்யா ஒப்படைத்தபோது மார்கண்டன் ஸ்டேஷனில் இல்லை. ஆறாவது பிளாட்பாரத்தில் கிடந்த மரப்பெட்டி ஒன்றிலிருந்து துர்நாற்றம் அடிப்பதாகப் பயணிகள் புகார் செய்த காரணத்தால் அதைப் பரிசோதனை செய்யப் போயிருந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு மரப்பெட்டியில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடலை அவர்கள் கைப்பற்றினார்கள். அவளது தலையை மட்டும் காணவில்லை. ஆனால் உடல் மூன்றாகத் துண்டிக்கபட்ட நிலையில் …

நினைவுப் பெண் Read More »

கோடுகளும் சொற்களும்

கே.எம். வாசுதேவன் நம்பூதிரி கேரளாவின் முக்கிய ஓவியர். வைக்கம் முகமது பஷீர். தகழி, கேசவதேவ். உரூபு, வி.கே.என் எம்.டி.வாசுதேவன் நாயர் உள்ளிட்ட முக்கியப் படைப்பாளிகளின் தொடர்களுக்குச் சித்திரம் வரைந்தவர். எம்.டி. வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம் தொடருக்கு இவர் வரைந்த மகாபாரதக் கோட்டோவியங்கள் அற்புதமானவை. தான் பீமனின் மனநிலையை முதன்மையாகக் கொண்டு கோட்டோவியங்கள் வரைந்தேன். இந்தத் தொடருக்கு ஓவியம் வரைந்தது என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம் என்கிறார் நம்பூதிரி. அவரும் எம்.டி.வாசுதேவன் நாயரும் சந்தித்து உரையாடும் நேர்காணல் …

கோடுகளும் சொற்களும் Read More »

முழுநாள் கருத்தரங்கம்

எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நவம்பர் 14 ஞாயிறு (14.11.2021) சென்னை மயிலாப்பூரில் உள்ள நிவேதனம் அரங்கில் நடைபெறவுள்ளது. தேர்ந்த வாசகர்களே இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த முழுநாள் கருத்தரங்கில் எனது சிறுகதைகள். குறுங்கதைகள், நாவல். உலக இலக்கியக் கட்டுரைகள். வரலாறு சார்ந்த கட்டுரைகள். வாழ்வியல் கட்டுரைகள். சிறார் புனைவுகள் எனப் பல்வேறு பிரிவுகளில் உரைகள் நிகழ்த்தபட இருக்கின்றன. நிகழ்வு குறித்த முழுவிபரங்களை இரண்டு நாட்களில் வெளியிடுகிறேன் இந்த நிகழ்வை முன்னிட்டு மாலை …

முழுநாள் கருத்தரங்கம் Read More »