admin

காலம் வரைந்த காட்சிகள்

காவேரிப்பட்டினம் சித்தாந்த வேங்கடரமணி எனப்படும் கே.எஸ். வேங்கடரமணி இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல்கள் தஞ்சை மாவட்ட கிராமிய வாழ்க்கையை விவரிக்கின்றன. பூம்புகாரைச் சேர்ந்த கா.சி. வேங்கடரமணி வழக்கறிஞராகப் பணியாற்றியவர். .இவரது தந்தை சித்தாந்த ஐயர் சுங்கவரி அதிகாரி. இவரது முன்னோர்கள் தஞ்சை மராட்டிய மன்னர்களின் அரசவையில் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.. வேங்கடரமணி ஆரம்பப் பள்ளியினை மாயவரத்திலும் கல்லூரி படிப்பைச் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்றிருக்கிறார். சட்டம் படித்து மயிலாப்பூரில் வழக்கறிஞராகத் தொழில் நடத்தியிருக்கிறார். ஓவியத்தில் …

காலம் வரைந்த காட்சிகள் Read More »

ஒளிமலர்

பிரபு மயிலாடுதுறை ஒரு பெரிய கிராமம். அதில் உலகம் கண்ட மகத்தான கலைஞர்களில் ஒருவன் வாசம் புரிகிறான். அவனது குடும்பம். நேசிக்கும் மனைவி . கலையார்வம் மிக்க வாரிசுகள். நூற்றுக்கணக்கான அவனது பண்ணைத் தொழிலாளர்கள். பெரிய மாளிகை. பெரிதினும் பெரிது கேட்கும் அவனது மனநிலை. சாரட்டு வண்டிகள். கிராமத்துத் திருவிழாக்கள் என உலகின் மகத்தான கலைஞன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையைத் தன் சொற்கள் மூலம் என்றுமுள காலத்தில் நிறுவியிருக்கிறார் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். …

ஒளிமலர் Read More »

சலனமாகாத காதல்

ஆதித்ய ஸ்ரீநிவாஸ் மண்டியிடுங்கள் தந்தையே வாசித்தேன். டால்ஸ்டாயின் கதையெனத் தோன்றியது, டால்ஸ்டாயின் காதல் கதை எனத் தோன்றியது, திமோஃபியின் கதை எனத் தோன்றியது, திமோஃபிக்கும் டால்ஸ்டாய்க்குமான உறவு பற்றிய கதை எனத் தோன்றியது. ஆனால் இது அக்ஸின்யாவின் கதை. அக்ஸின்யாவில்தான் எதற்கும் சலனமாகாத காதல் திகழ்கிறது. முகங்களை சொற்களை மீறி ஆழ்மனதின் அலைகளை உணர்வதால் மட்டும் உணரப்படும் அன்பு அக்ஸியாவினுடையது. இந்த அன்பினைச் சுற்றித்தான் நாவல் ஒரு வாழ்வை நெய்துக்காட்டுகிறது. டால்ஸ்டாயின் வாழ்க்கை, பண்ணையடிமைகள், திமோஃபி, ஓல்கா, …

சலனமாகாத காதல் Read More »

வெறும் வலை

மால்டாவிலுள்ள மீனவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் “Luzzu” படத்தை இயக்கியுள்ளார் அலெக்ஸ் காமிலேரி. இயக்குநரின் முதற்படமிது தலைமுறையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெஸ்மார்க்கின் வழியே கதை சொல்லப்படுகிறது. அவன் வைத்துள்ள நாட்டுப்படகு அவனது தாத்தாவிற்குச் சொந்தமானது. நவீன இயந்திர படகுகளும் புதிய கடல் விதிமுறைகளும் வந்தபிறகு மீன்பிடி தொழிலில் கள்ளச்சந்தை உருவாகிவிட்டது. அது ஜெஸ்மார்க்கிற்குப் பிடிக்கவில்லை. மேலும் படகுகள் அதிகாரிகளால் சீரற்ற முறையில் சோதனை செய்யப்படுகின்றன. அதிகாரிகள் மிரட்டி லஞ்சம் பெறுகிறார்கள். உள்ளூர் மீன் ஏலத்தினைச் சிலர் …

வெறும் வலை Read More »

ரயில் கதைகள்

தமிழில் எழுதப்பட்ட ரயில் சார்ந்த சிறுகதைகளைத் தொகுத்து சா. கந்தசாமி ஒரு தொகைநூல் கொண்டு வந்திருக்கிறார். இதனை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் எனது ரயில் நிலையத்தில் ஒருவன் சிறுகதை இடம் பெற்றுள்ளது. ரஸ்கின் பாண்ட் இது போல ரயில் கதைகள் கொண்ட ஆங்கிலத் தொகுப்பு நூல் ஒன்றை கொண்டுவந்திருக்கிறார். அது போல ஒன்றை தமிழில் தொகுக்க வேண்டும் என்று கந்தசாமி விரும்பினார். இந்நூல் அவரது மறைவிற்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது,

சங்கீதக்காரனின் வீடு

இசையை மையமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் கே.பி.நீலமணியின் புல்லின் இதழ்கள் தனிச்சிறப்பு கொண்டது. இசைக்கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவலின் ஊடாக அந்தக் கால சுவாமிமலை மற்றும் திருவிடைமருதூரின் சித்தரிப்புகள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. இசைக்கலைஞர்களுக்குக் காந்தியின் மீதிருந்த ஈடுபாடு. கச்சேரியில் சுதேசி பாடல்களைப் பாடுவது, அதற்கு உருவான எதிர்ப்பு எனச் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தின் சமூகச் சூழலையும் நீலமணி நுண்மையாக விவரித்திருக்கிறார் ஹரி என்ற இளம்பாடகன் சாதகம் செய்வதில் தான் நாவல் துவங்குகிறது. திருவிழா மற்றும் திருமண …

சங்கீதக்காரனின் வீடு Read More »

சிறப்பு சலுகை

பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள காரணத்தால் புதிய லாக்டவுன் விதிகள் அறிவிக்கபட்டுள்ளன. சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கபட்டுள்ளது. இந்தச் சூழலில் புதிய நூல்களை வாங்க விரும்பும் வாசகர்களுக்காக தேசாந்திரி பதிப்பகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது தேசாந்திரி இணையதளத்திலிருந்து புத்தகங்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தேசாந்திரி பதிப்பகத்தின் அலுவலகம் சாலிகிராமத்திலுள்ளது. நேரில் இந்த நூல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் இந்த ஆண்டு வெளியான புதிய நூல்கள்

டான்டூன் என்ற எறும்பு

ரியா ரோஷன் என்ற ஏழாம் வகுப்பு மாணவி டான்டூனின் கேமிரா நூலை வாசித்து எழுதியுள்ள குறிப்பு ••• பெயர் : ரியா ரோஷன் வகுப்பு: ஏழாம் வகுப்பு வயது :12 இடம்: சென்னை புத்தகம் : டான்டூனின் கேமிரா ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தேசாந்திரி விலை: Rs.150 2021 இல் நான் படித்த முதல் புத்தகம் – நீல சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து. இந்த வருடத்தில் நான் படிக்கும் முதல் தமிழ் …

டான்டூன் என்ற எறும்பு Read More »

பழகிய நாட்கள்

சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள் தமிழின் அரிய நாவல்களில் ஒன்று. 1983ல் வெளியான இந்த நாவலுக்கு முன்னுரை எழுதியுள்ள கவிஞர் ஞானக்கூத்தன் ஒரு பத்தியில் நாவலின் மையத்தைச் சிறப்பாகச் சொல்லிவிடுகிறார் “வாழ்க்கைப் பாதையில் அவனது நண்பர்கள் மீட்கமுடியாதபடி தொலைத்துப் போய்விடுகிறார்கள். அவர்களை அவன் பார்க்கலாம், உரையாடலாம். ஆனால் அவர்களை ஒன்று சேர்த்து முன்பு இழந்த உலகைத்தை மீண்டும் கட்டிவிட முடியாது. அவர்கள் தொலைத்துப் போய்விட்டார்கள். எங்கே எப்படி என்று நுட்பமாகக் கூறுகிறது நாவல் “ தன்னோடு பள்ளியில் நடித்து …

பழகிய நாட்கள் Read More »

வண்ணதாசனின் வாழ்த்து

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’ 248 பக்கங்கள் தான். புத்தாண்டு முதல் நாள் இரவு வாசிக்கத் துவங்கி, நேற்றிரவு முடித்தேன். வழக்கத்தை விட வேகம் குறைவாக அமைந்த வாசிப்பு. ஒரு குறிப்பிட்ட நாளில் வெறும் பதினாறு பக்கங்களே வாசித்திருக்கும் படி, அன்றாடத்தின் பாரம் என் மேல் சரிந்திருந்தது. அன்றாடம் புது வருடம் பழைய வருடம் எல்லாம் பார்ப்பதில்லையே.ஆனால் கடந்த நான்கு நாட்களும் அதன் பக்கங்களின் வரிகளாகவே இருந்தேன். ஒரு சிறிய வெளிச்சமும் சிறிய துக்கமும் சதா என் மேல் …

வண்ணதாசனின் வாழ்த்து Read More »