டால்ஸ்டாய் ஓவியம்
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலை வாசித்த சுரேஷ் என்ற வாசகர் டால்ஸ்டாயின் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கிறார். ஒரு நாவல் இப்படியான மனஎழுச்சியைத் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலை வாசித்த சுரேஷ் என்ற வாசகர் டால்ஸ்டாயின் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கிறார். ஒரு நாவல் இப்படியான மனஎழுச்சியைத் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது
பெப்பர்ஸ் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் திருப்புகழ் IAS தனக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதில் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் பற்றி குறிப்பிட்டுள்ளார். திருப்புகழ் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி நன்றிபெப்பர்ஸ் டிவி
Lunana: A Yak in the Classroom என்ற பூட்டானிய திரைப்படத்தைப் பாவோ சோய்னிங் டோர்ஜி இயக்கியிருக்கிறார். பூட்டானில் மிகக் குறைவான திரைப்படங்களே உருவாக்கப்படுகின்றன. The Cup என்ற Khyentse Norbu இயக்கி 1999ல் வெளியான பூட்டானிய படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. அவரது உதவியாளரான பாவோ இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படமும் பன்னாட்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது. லுனானா பூட்டானின் தொலைதூர மலைக்கிராமம். 56 பேர் மட்டுமே அங்கே வசிக்கிறார்கள். அந்த இடத்திற்குச் சென்று சேர இரவு …
இடக்கை நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் சபரிராஜ் பேச்சிமுத்து ஒளரங்கசீப்பின் இறுதிநாளில் தொடங்குகிறது நாவல். அதனைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்படுகிறார்கள். ஒருவர் ஒளரங்கசீப்பின் விசுவாசி. அரசியல் கைதி. கைதான உடனே விசாரணை என்கிற தண்டனை தொடங்குகிறது. இன்னொருவர் சாமானியன். தாழ்த்தப்பட்டவர். காத்திருப்பு என்கிற தண்டனை தொடர்கிறது. இந்த இழையில் இருந்து இந்தியாவின் கடந்த காலத்தின், நிகழ்காலத்தின் நீதியை, நீதிமுறையை விசாரணை செய்கிறது இந்த நாவல். மரணம் பற்றிய பயம். அதிகாரத்தின் கருணையற்ற இரும்பு கை. …
அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். உங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் பெருகட்டும்.
In Search of Walt Whitman என்ற அமெரிக்க கவிஞர் வால்டர் விட்மன் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவின் நிகரற்ற கவிஞரான வால்ட் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். சிறு வயதில் அச்சகத்தில் பணியாற்றிய விட்மன் பல்வேறு நாளிதழ்களில் கட்டுரைகள். செய்திக்குறிப்புகள் எழுதியிருக்கிறார்., பதினேழு வயதில் பள்ளி ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். 27 ஆவது வயதில் புரூக்லின் செய்தி …
பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி என்றொரு அரிய நூலை பாரதியியல் அறிஞர் சீனி.விசுவநாதன் வெளியிட்டிருக்கிறார். இது பாரதியாரைப் பற்றிய காவல்துறையின் ரகசிய அறிக்கைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகளைக் கி.அ.சச்சிதானந்தம் மற்றும் இரா. சுப்பராயலு இருவரும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் பாரதியை எப்படியெல்லாம் காவல்துறைக் கண்காணித்தது, தொந்தரவு செய்தது என்பதற்கு இந்நூல் நேரடி சாட்சியமாகும். இந்தியச் சுதந்திரப் போரில் எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். ஆனால் எவரையும் கண்டு பிரிட்டிஷ் அரசு இவ்வளவு பயப்படவில்லை. …
ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு உதயம். 1952 முதல் 54 வரை அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலை அவரே அச்சுக் கோர்த்து பவானி பிரஸ் எனும் அச்சகத்தில் டிரெடில் மிஷினில் தானே அச்சிட்டிருக்கிறார். இப்படி ஒரு எழுத்தாளரின் முதற் தொகுப்பு அவராலே அச்சடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானது. அட்டை ஓவியம் வரைந்திருப்பவர் ஓவியர் ஆனந்தன். இந்தத் தொகுப்பில் சாந்தி பூமி, சுமை பேதம், கண்ணன் பிறந்தான், உதயம் பிழைப்பு மீனாட்சி ராஜ்யம், காந்தி ராஜ்யம் என ஏழு …
The Lost Leonardo என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். துப்பறியும் கதைகளை விட விறுவிறுப்பாக உருவாக்கப்பட்ட ஆவணப்படமது. லியோனார்டோ டாவின்சியின் கடைசி ஓவியம் என்று விளம்பரப்படுத்தபட்டு மே 2015ல் கிறிஸ்டி நிறுவனத்தின் மூலம் 450 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட Salvator Mundi என்ற இயேசு கிறிஸ்து ஓவியம் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது. இது உண்மையில் டாவின்சி வரைந்த ஓவியம் தானா. இதற்கு எப்படி விலை மதிப்பு உண்டானது என்பதை இந்த ஆவணப்படம் விரிவாகப் பேசுகிறது. இன்னொரு தளத்தில் அரிய …
மண்டியிடுங்கள் தந்தையே – எஸ். ராமகிருஷ்ணன்…. பிரான்சிஸ் சேவியர் 2022 ல் நான் வாசித்த முதல் நாவல்…. எஸ். ராமகிருஷ்ணன் சொல்லுவது போல் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல். ஒரு பனிக்காலத்தில் கதை தொடங்குகிறது. யஸ்னயா போல்யானா பண்ணை, போர்யா கிராமம், துலா, மாஸ்கோ எனப் பயணிக்கிறது… டால்ஸ்டாய் கால ரஷ்யாவுக்குச் சென்று டால்ஸ்டாய் யோடு பயணித்த உணர்வு வந்து போகிறது… டால்ஸ்டாய் வாழ்கையின் ஊடே பயணித்துப் பற்றிய உண்மைகளை அப்படியே சொல்லுகிறது… முன்னும் பின்னுமாக நகர்ந்து …