admin

யாமம் – தெலுங்கு மொழிபெயர்ப்பு

எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் திருப்பதியைச் சேர்ந்த ஜில்லேல பாலாஜி. நூலின் பிரதி வேண்டுவோர் தேசாந்திரி பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவும் விலை ரூ 250 தேசாந்திரி பதிப்பகம் டி&1, கங்கை அப்பார்ட்மெண்ட், 110, 80 அடி ரோடு, சத்யா கார்டன், சாலிக்கிராமம், சென்னை – 600 093, தொலைபேசி: 044 2364 4947, +91 96000 34659. desanthiripathippagam@gmail.com www.desanthiri.com

மலையாளத்தில்

எனது யாமம் நாவல் மலையாளத்தில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வாசிக்க விரும்புகிறவர்கள் இங்கே பெறலாம் https://keralabookstore.com/book/yamam/15009/

யாமம்- வாசிப்பனுபவம்

சௌந்தர்.G ஒரு நாவலுக்குள் , வரலாற்று தடயங்கள் , காலக்கணக்குகள், தத்துவார்த்த நிலைகள் , மனித அவலங்கள் , தீர்வும் , தீர்வற்ற முடிவுகள்.  என பல படிகள் கட்டமைக்கப்பட்டு , ஒரு உச்சத்தில்,  கதையை அந்தரத்தில் மிதக்க விடுவதோ , சரித்து கீழே தள்ளி, கைகட்டி அமர்ந்து வேடிக்கை பார்ப்பதோ, அந்த படைப்பாளியின்  தேர்வாக இருக்கலாம்.   வாசகனுக்கு அந்த நாவல் மிச்சம் வைப்பது என்ன? என்பதுவே  அந்த  நாவலின்  வெற்றி.  தொடர்ந்து பேசப்பட்ட, அப்படியான  …

யாமம்- வாசிப்பனுபவம் Read More »

தண்ணீரின் கதவுகள்

நேற்று கவிஞர் தேவதச்சனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது இயற்கையை ஏன் கவிதைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பேசிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் வருகிறது. உரைநடைக்கு அதில் ஏன் அவ்வளவு பெரிய கவனமில்லை என்ற பேச்சு வந்தது. அதைப்பற்றி உரையாடினோம் கவிதையைப் பற்றிய உரையாடல்கள் என்பது பாராட்டு அல்லது நிராகரிப்பு என்ற இருநிலைகளுக்குள் இன்று சுருங்கிப் போயிருக்கிறது. ஆனால் கவிதைகளின் போக்கு மற்றும் அதன் இயல்புகள். இன்று உருவாகி வரும் மாற்றங்கள். அது மொழியில் வெளிப்படும் விதம். …

தண்ணீரின் கதவுகள் Read More »

லியுடா தேடும் உண்மை

வெனிஸ் திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு பெற்றுள்ள Dear Comrades என்ற ரஷ்யத் திரைப்படத்தைப் பார்த்தேன். சமகால ரஷ்யப் படங்கள் ஹாலிவுட் படங்களுடன் போட்டிப்போடும் விதமாகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படுகின்றன. சர்வதேசச் சந்தையைக் குறித்து வைத்து உருவாக்கப்படும் இந்தப் படங்கள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் சிறந்த கலைப்படங்களின் உருவாக்கமும் விநியோகமும் குறைந்து வருகிறது. ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கி போன்ற சினிமா மேதைகள் உருவாக்கிய புதிய அழகியலை இளம் இயக்குநர்களில் ஒரிருவரே முன்னெடுக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் போது …

லியுடா தேடும் உண்மை Read More »

நோபல் பரிசு

இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. A Companion to Salman Rushdie என இவர் சல்மான் ருஷ்டி பற்றிய நூல் ஒன்றைத் தொகுத்திருக்கிறார். அதைப் படித்திருக்கிறேன். மற்றபடி இவரது நாவல்கள் எதையும் வாசித்ததில்லை. இந்த ஆண்டு நோபல் பரிசு யாருக்கு கிடைக்கும் என நேற்று வரை பத்திரிக்கைகள் கணித்த எந்தப் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை. 2005ம் ஆண்டின் புக்கர் பரிசு பட்டியலில் இவரது நாவல் இடம்பெற்றிருந்திருக்கிறது. …

நோபல் பரிசு Read More »

சிறப்பு சலுகை

எனது அனைத்து நூல்களுக்கும் தேசாந்தரி பதிப்பகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. இருபது சதவீதத் தள்ளுபடியில் நீங்கள் ஆன்லைன் மூலம் பெறலாம் Desanthiri Pathippagam : D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093 Phone: 044 2364 4947 Mobile 9789825280 https://www.desanthiri.com/

இரண்டு மோனாலிசா

லியோனார்டோ டா வின்சி வரைந்த மோனா லிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது. இந்த ஓவியம் குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன் The Secret Of The Mona Lisa என்ற பிபிசியின் ஆவணப்படம் ஒரு துப்பறியும் கதை போல விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது மோனாலிசாவின் நகல்களை நாம் பார்த்திருப்போம். புகைப்படமாகவும் காலண்டர் ஓவியமாகவும் பார்த்திருப்போம். பாரிஸ் நகரத்தில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் நேரில் காணும் போது நாம் அடையும் முதல் வியப்பு ஓவியம் இவ்வளவு சிறியதா என்பதே. ஒவ்வொரு …

இரண்டு மோனாலிசா Read More »

உலகில் நடந்திராத சந்திப்பு

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த செக் எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படும். போஹுமில் ஹ்ரபால் எழுதிய Too Loud a Solitude என்ற சிறிய நாவலை வாசித்தேன்.. கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெளியான மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக இந்த நாவல் இடம் பெற்றுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது இதனை நண்பர் ஆம்பூர் அசோகன் எனக்குப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார். நான் போஹுமில் ஹ்ரபால் எழுதிய Dancing Lessons for the Advanced in Age முன்னதாகப் படித்திருக்கிறேன். …

உலகில் நடந்திராத சந்திப்பு Read More »

சமையலறையில் கடவுள்

ஸ்லோவேனிய கவிஞர் பீட்டர் செமோலிக்(Peter Semolič) சமகால உலகக் கவிஞர்களில் முக்கியமானவர். அவரது நேர்காணல் ஒன்றில் கவிதை என்பது புரட்சிகரமானது. கவிதையின் வழியாகவே சமூகத்தில் மாற்றங்கள் உருவாகும் என்று பதின்வயதிலிருந்து நம்பி வருவதாகவும் அமெரிக்காவில் கவிதைகள் ஒரு நுகர்வு பொருள் போல மாறிவிட்டதைக் காணும் போது உண்மையில் கவிதையின் இடம் ஒரு சமூகத்தில் என்ன என்பது குறித்துத் தான் குழம்பிப் போய்விட்டதாகவும் குறிப்பிடுகிறார். இது தீவிரமாகக் கவிதை எழுதும் சமகாலக் கவிஞர்கள் பலருக்கும் ஏற்பட்ட குழப்பமே. இந்தியா …

சமையலறையில் கடவுள் Read More »