admin

ரகசியத்தின் பாதையில்

Souad என்ற எகிப்திய படத்தைப் பெண் இயக்குநரான அய்டன் அமீன் இயக்கியுள்ளார். 2021ல் வெளியான இப்படம் ஆஸ்கார் விருதுக்கான அயல்மொழி பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது பேஸ்புக், டிக்டாக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு இளந்தலைமுறையினருக்கென ஒரு ரகசிய வாழ்க்கை உருவாகியிருக்கிறது. ஆன்லைன் வழியாகக் காதல் கொள்வதும் அதில் ஏற்படும் சிக்கல்களும் முந்தைய தலைமுறை அறியாத விஷயம். டீனேஜர்கள் இணையவெளியில் எவருடன் நட்பாக இருக்கிறார்கள். யாருடன் சாட் செய்கிறார்கள். எந்த வீடியோவை, புகைப்படத்தை ரசிக்கிறார்கள். …

ரகசியத்தின் பாதையில் Read More »

மண்டியிடுங்கள் தந்தையே

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் வெளியாகவுள்ள எனது புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே பற்றிய காணொளி சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது

கார்க்கியின் பாட்டி

மாக்சிம் கார்க்கி தனது வாழ்க்கை வரலாற்றை மூன்று பகுதிகளாக எழுதியிருக்கிறார். மூன்றும் மிகச் சுவாரஸ்யமான புத்தகங்கள். இதில் எனது குழந்தைப் பருவம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. தனது தந்தையின் மரணத்தைக் கார்க்கி எதிர்கொண்ட விதமும் பாட்டியோடு மேற்கொண்ட கப்பல் பயணத்தைப் பற்றிய நினைவுகளும் திரைப்படம் போல நம் கண்முன்னே விரிகின்றன. கார்க்கியின் தந்தை அவரை எதற்காகவும் அழக்கூடாது என்று பழக்கியிருந்தார். ஆகவே தந்தை இறந்த போதும் அவருக்கு அழுகை வரவில்லை. ஒரு மழைநாளில் தந்தை இறந்த போது பாட்டி …

கார்க்கியின் பாட்டி Read More »

உதிர்ந்த கனவுகள்

A Fortunate Man என்ற டேனிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். வெளியான படம். பில்லி ஆகஸ்ட் இயக்கியிருக்கிறார் கதை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடக்கிறது. தீவிரமான மதப்பற்றுள்ள குடும்பம் ஒன்றில் பிறந்த பீட்டர் தந்தையைப் போல மதகுருவாக விரும்பாமல் பல்கலைக்கழகத்தில் சென்று பொறியியல் படிக்க விரும்புகிறான். இதை அவனது தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிடிவாதமாக வீட்டை விட்டுப்புறப்படும் மகனுக்கு ஒரு பாக்கெட் கடிகாரத்தைப் பரிசாகத் தருகிறார் தந்தை. அந்தக் கடிகாரம் அவன் தவறான பாதையில் செல்வதை …

உதிர்ந்த கனவுகள் Read More »

மண்டியிடுங்கள் தந்தையே

டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு நான் எழுதியிருக்கும் புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே. இந்த நாவல் டிசம்பர் 25 சனிக்கிழமை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படவுள்ளது தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது

நிமித்தம் கேட்கிறது

நிமித்தம் நாவல் குறித்த வாசிப்பு விமர்சனம்… மஞ்சுநாத் சப்தம் என்பது ஒரு வலுவான இருப்பு. இருப்பின் மூலமே அது தன்னை நீட்டித்துக் கொள்வகிறது. மனிதனின் வாழ்வியல் இருப்பும்கூடச் சப்தத்தினால் நிலை நிறுத்தப்படுவது வியப்பானது. காது கேளாதவர்களுக்கு நிசப்தம் ஒரு வரமாக அமைந்திருக்கும் என்று கருதியிருந்தேன். அது தவறு. வெளிப்புற சப்தங்கள் கேட்காத போதும் பேரிரைச்சலாய் அகத்தின் குரல் அவர்களை தினம்தினம் கொன்று கொண்டிருக்கும் என்பது தான் நெருடலான உண்மை. வெறுமையின் வேதனை வாழை குருத்திலையின் மீது பதியும் …

நிமித்தம் கேட்கிறது Read More »

மலைப்பாம்பின் கண்கள்

அந்திமழை டிசம்பர் இதழில் வெளியான புதிய சிறுகதை ராகவின் கனவில் ஒரு மலைப்பாம்பு வந்தது. அவனது முப்பதாவது வயது வரை இப்படிக் கனவில் ஒரு மலைப்பாம்பினைக் கண்டதேயில்லை. ஆனால் திருமணமாகி வந்த இந்த ஏழு மாதங்களில் பலமுறை அவனது கனவில் மலைப்பாம்பு தோன்றிவிட்டது. இதற்குக் காரணம் மிருதுளா. அவளுக்கு மலைப்பாம்பினைப் பிடிக்கும். குளோப்ஜாமுனைப் பார்த்ததும் நாக்கைச் சுழற்றுவது போல அவள் மலைப்பாம்பைப் பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கண்கள் விரிய ஆசையுடன் ரசிப்பாள். என்ன பெண்ணிவள் …

மலைப்பாம்பின் கண்கள் Read More »

புனைவின் வரைபடம்

சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டது. அரூ ஆசிரியர் குழுவினர் எனது படைப்புகளை முழுமையாக வாசித்து இந்த நேர்காணலைச் சிறப்பாக செய்திருந்தார்கள். சமீபத்தில் புரவி இதழில் எனது நேர்காணல் வெளியானது. எழுத்தாளர் கமலதேவி செய்த நேர்காணல். இந்த இரண்டு நேர்காணல்களின் தொகுப்பாக புனைவின் வரைபடம் நூலை உருவாக்கியுள்ளேன் இந்த நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது டிசம்பர் 25 சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது நன்றி புகைப்படம் : வசந்தகுமாரன்

காந்தியின் நிழலில்

மகாத்மா காந்தி குறித்து நான் எழுதிய கட்டுரைகள் மற்றும் புனைவுகளைத் தொகுத்து காந்தியின் நிழலில் என்ற நூலை உருவாக்கியுள்ளேன். காந்தி குறித்து நான் எழுதிய சிறுகதைகள் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது டிசம்பர் 25 சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது