admin

நூலக மனிதர்கள்

நூலகத்திற்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. பள்ளிவயதில் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை நூற்றுக்கணக்கான நூலகங்களுக்குச் சென்றிருக்கிறேன். நான் கண்ட நூலக மனிதர்கள். சிறந்த நூலகங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படுகிறது தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது

காலத்தின் சிற்றலை

பா ஜின்., பால் வான் ஹெய்ஸே, ஐரின் நெமிரோவ்ஸ்கி ,பில்லி காலின்ஸ், ரெட் பைன், லி போ, கென்ஸாபுரோ ஒயி ஜெய் பரினி, ஷெரீப் எஸ். எல்முசா, எமிதால் மஹ்மூத், ஹெலன் ஹான்ஃப் . ஜே.டி.சாலிஞ்சர், எடுவர்டோ காலியானோ வில்லியம் சரோயன், போஹுமில் ஹ்ரபால், பீட்டர் செமோலிக் என உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் …

காலத்தின் சிற்றலை Read More »

நேற்றின் நினைவுகள்

நகுலன். கிரா, தோப்பில் முகமது மீரான், ஆ.மாதவன், தி. ஜானகிராமன். வண்ணநிலவன், விட்டல்ராவ், எஸ்.எல்.எம். ஹனீபா, ஷங்கர் ராமசுப்ரமணியன் எனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது

ஐந்து வருட மௌனம்

இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய சிறுகதைத் தொகுப்பு இதில் 25 சிறுகதைகள் உள்ளன. 350 பக்கங்களுக்கும் மேலாக உள்ள சிறுகதைத்தொகுப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக வெளியாகிறது டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படயிருக்கிறது இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது

பறப்பாய் பூவிதழே

ரெயின்போ பிளவர் என்ற வாலண்டின் கதயேவ் எழுதிய ரஷ்ய சிறார் கதை ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்பாக வாசித்தேன். அந்தக் கதையில் வரும் ஒரு காட்சி மனதை விட்டு அகலவேயில்லை. இன்று மீண்டும் அக் கதையைத் திரும்பப் படிக்க வேண்டும் போலத் தோன்றவே இணையத்தில் தேடிக் கண்டுபிடித்து வாசித்தேன். அந்தக் கதையில் கேட்டவரம் தரும் ஏழு வண்ணப்பூ ஒன்றை ஒரு சிறுமி பெறுகிறாள். அவள் அந்த இதழ்களை எப்படிப் பயன்படுத்தினாள் என்பதைக் கதை அழகாக விவரிக்கிறது பறப்பாய், …

பறப்பாய் பூவிதழே Read More »

புத்தக வெளியீட்டு விழா

எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எனது பத்து புதிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன. தேசாந்திரி பதிப்பகம் இந்த நூல்களை வெளியிடுகிறது. இதில் டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதிய மண்டியிடுங்கள் தந்தையே நாவல் வெளியாகிறது. எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை …

புத்தக வெளியீட்டு விழா Read More »

வாசிப்பெனும் கலை

சில ஆண்டுகளுக்கு முன்பாக மலேசியாவில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஒன்றில் கலந்து கொண்டேன். அதன் முக்கிய நோக்கம் வகுப்பறையில் கவிதை கவிதை நாடகம் போன்றவற்றை எப்படிக் கற்பிப்பது என்பது குறித்து உரையாடுவதாகும். பாடமாக வைக்கப்பட்ட சிறுகதையோ, கவிதையோ, நாவலோ மாணவர்களுக்கு விருப்பமாக இருப்பதில்லை. மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே படிப்பதால் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மீதே அவர்களுக்குக் கோபமும் வெறுப்பும் வந்துவிடுகிறது. நான் படிக்கும் நாட்களில் துணைப்பாடமாக இருந்த சிறுகதைகளை வகுப்பில் நடத்தவே மாட்டார்கள். பரிச்சைக்கு முன்பாகப் …

வாசிப்பெனும் கலை Read More »

பையன் கதைகள்

வி.கெ. என் மலையாளத்தில் முக்கியமான எழுத்தாளர். அவரது பையன் கதைகள் தமிழில் சாகித்ய அகாதமி வெளியீடாக வந்துள்ளது. 2014ல் கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா வி.கெ.என் பையன் கதைகளில் சிலவற்றை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். அவர் மொழியாக்கம் செய்த கதை ஒன்றை நான் வாசிக்கும்படி அப்போது மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருக்கிறார். நானும் அவரைப் பாராட்டி பதில் எழுதியிருக்கிறேன். அந்த மின்னஞ்சலை இன்று பார்த்தபோது ஸ்ரீபதி சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன நினைவு மனதில் ஆழமான வலியை உருவாக்கியது. …

பையன் கதைகள் Read More »

கவிதையின் இடம்.

The Ecco Anthology of International Poetry என்ற பன்னாட்டுக் கவிதைகளின் தொகுப்பை வாசித்தேன். இந்தியக்கவிதைகள் இதில் குறைவு. தமிழ்க் கவிதைகள் இல்லவே இல்லை. பெரும்பான்மை உலகக் கவிதைத் தொகுப்புகளிலும் இதே நிலை தான். காரணம் இதன் தொகுப்பாசிரியருக்கு இந்தியக் கவிதைகள் பற்றி எதுவும் தெரியாது. மேலும் தமிழ் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் வெளியாவதும் குறைவு என்பதால் நவீன தமிழ்க் கவிதையின் மகத்தான பங்களிப்பு இன்றும் உலகின் கவனத்தைப் பெறவேயில்லை. Antonio Machado, Osip Mandelstam, Vladimir …

கவிதையின் இடம். Read More »