admin

இதயத்திலிருந்து எழும் குரல்

எப்போது தஸ்தாயெவ்ஸ்கிக்கு தான் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் முதன்முறையாகப் பிறந்தது என்பதைப் பற்றி Jacques Catteau புத்தகத்தில் ஒரு தகவலைப் படித்தேன். 1837ல் பொறியியல் புகுமுக வகுப்பில் பயிலுவதற்காகத் தனது சகோதரன் மிகேலுடன் பீட்டர்ஸ்பெர்க் வந்த தஸ்தாயெவ்ஸ்கி புஷ்கின் சண்டையிட்டுக் கொல்லப்பட்ட இடத்தைக் காணச் சென்றார். சில மாதங்களுக்கு முன்பு தான் அந்தச் சம்பவம் நடந்தேறியது. புஷ்கின் மீது தஸ்தாயெவ்ஸ்கியும் அவரது சகோதரனும் தீராத காதல் கொண்டிருந்தார்கள். ஆகவே புஷ்கின் டூயல் சண்டை செய்த …

இதயத்திலிருந்து எழும் குரல் Read More »

துயிலின் திருவிழா

ஜெ. திவாகர் எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின்றன என்பது போல இந்நாவலின் கதையோட்டம் முழுமையும் தெக்கோடு துயில் தரு மாதா கோவிலில் நடைபெறும் பத்து நாள் திருவிழா நோக்கியே நகர்கிறது. எஸ்.ரா. வின் அத்தனை கதைகளிலும் முக்கிய கதாபாத்திரமாய் இடம்பெறும் வெயில்.  இக்கதையிலும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் நம் உடலில் கண்ணுக்கு தெரியாமல் ஓடும் நரம்புகளாய் பின்னி பிணைந்து நம்மோடும், கதையோடும் பயணிக்கிறது வெயில். இந்நாவல், மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது. ஒரு தளம் …

துயிலின் திருவிழா Read More »

பாலபுரஸ்கார்

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ சிறார் நூலுக்கு  சிறுவர் இலக்கியத்திற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. பாலபாரதிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் புத்தகம் வெளியிட்ட வானம் மணிகண்டனுக்கு பாராட்டுகள்.

வீடும் உலகமும்

புதிதாக ஒரு வீட்டிற்குக் குடியேறும் போது ஏற்படும் அனுபவங்கள் எல்லாக் காலத்திலும் ஒன்று போலவே இருக்கின்றன. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டிஷ் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு குடும்பம் புறநகர் லண்டனிலுள்ள ஒரு வீட்டிற்குப் புதிதாகக் குடியேறுகிறார்கள். அண்டை வீட்டாருடன் ஏற்படும் அறிமுகம். தெரிந்த நண்பனின் வருகை. குடும்பம் அங்கே மெதுவாக நிலை கொள்ள ஆரம்பிப்பது. அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் எனக் காட்சிகளைக் காணும் போது இது போன்ற அனுபவத்தைத் தானே நான் …

வீடும் உலகமும் Read More »

நிகழாத சந்திப்பு

புதிய குறுங்கதை அவன் லேடிமெக்பெத்தை எலக்ட்ரிக் ட்ரைனில் வைத்துச் சந்தித்தான். அவள் லேடி மெக்பெத் தானா. ஏனோ அவளைப் பார்த்த மாத்திரம் அவள் தான் மெக்பெத்தின் மனைவி. அரசனைக் கொலை செய்யத்தூண்டிய பெண் என்று தோன்றியது ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தை அவன் பலமுறை படித்திருக்கிறான். லேடி மெக்பெத்தின் உண்மையான பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஏன் ஷேக்ஸ்பியர் அவளுக்குப் பெயர் வைக்கவில்லை. லேடி மெக்பெத் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணுகிறவள். ஒரு கடிகாரத்திற்குச் சாவி கொடுப்பது போலவே …

நிகழாத சந்திப்பு Read More »

மண்ணாசை எனும் மண்ணின் குரல்

சங்கர ராமின் மண்ணாசை தமிழின் குறிப்பிடத்தக்க நாவல். அதிகம் பேசப்பபடாத ஆனால் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான நாவல். நீண்டகாலம் இந்த நாவல் அச்சில் இல்லாமல் இருந்தது. நண்பர் கால. சுப்ரமணியம் அதைத் தமிழினி மூலம் மறுபதிப்புச் செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். சங்கர ராமின் சொந்த ஊரை மையப்படுத்திய நாவல். முசிறியைச் சுற்றிய கிராமங்களின் இயல்பை. விவசாயக் குடும்பத்தின் வாழ்க்கை நெருக்கடிகளை மிக உண்மையாகச் சங்கரராம் எழுதியிருக்கிறார். தான் நேரில் கண்ட உண்மை …

மண்ணாசை எனும் மண்ணின் குரல் Read More »

கிரா விருது

2021ம் ஆண்டுக்கான கி.ரா விருது பெறும் அன்பு நண்பர் எழுத்தாளர் கோணங்கிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் நேற்று அவருடன் தொலைபேசியில் பேசினேன். கோணங்கியோடு பல ஆண்டுகள் ஒன்றாகச் சுற்றித்திரிந்த நாட்கள் நினைவில் வந்து போனது. கோணங்கி உற்சாகமாகப் பேசினார். அடுத்த வாரம் கோவில்பட்டிக்கு நேரில் சென்று சந்திக்க இருக்கிறேன். கிரா பெயரில் கோணங்கி கௌரவிக்கப்பட்டது மிகப் பெரிய மகிழ்ச்சி. நாளை வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் அவரைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ••

மலைக்கிராமத்தின் பள்ளி

வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’ நாவலை என் இருபது வயதுகளில் படித்திருக்கிறேன். மலைக்கிராமத்துக்குச் செல்லும் ஒரு பள்ளி ஆசிரியரின் கதையை விவரிக்கக்கூடியது. ஆடு மேய்ப்பவர்கள் வாழும் அந்தச் சிற்றூரில் அவர் எப்படித் தங்கி பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்கிறார் என்பதை அழகாக விவரித்திருப்பார்கள். The Miracle (2015 film) என்ற துருக்கிப்படத்தைப் பார்த்தபோது பன்கர்வாடி தான் நினைவில் வந்தது. இப்படமும் மலைக்கிராமத்தினை தேடிச் செல்லும் பள்ளி ஆசிரியரின் கதையே. மாஹிர் எக்ரெட்மேன் ஒரு பள்ளி ஆசிரியர் .1960களில் துருக்கியின் …

மலைக்கிராமத்தின் பள்ளி Read More »

ஆறும் மலையும்

இரண்டு தமிழ்ப் படங்களைச் சமீபத்தில் பார்த்தேன். இப்படங்கள் சென்ற ஆண்டில் வெளியாகியிருந்தன. அப்போது பார்க்க இயலவில்லை. சில தினங்களுக்கு முன்பாக இணையத்தில் பார்த்தேன். இரண்டும் எனக்குப் பிடித்திருந்தன. கமலி from நடுக்காவேரி – ராஜசேகர் துரைசாமி இயக்கியது. அவரது முதற்படம். மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தனை மென்மையான காதல்கதையைப் பார்த்து நீண்டகாலமாகிவிட்டது. ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் ஆசையினை இயல்பாக, நுட்பமாக விவரித்துள்ளார்கள். படம் பார்க்கிறோம் என்ற உணர்வேயில்லை. பிளஸ் டூ படிக்கும் பக்கத்துவீட்டுப் …

ஆறும் மலையும் Read More »

இசையே வாழ்க்கை.

பணீசுவர்நாத் ரேணு புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர். இவரது தேர்வு செய்யப்பட்ட கதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரேணு இளமையில் இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாக இயங்கியவர். பின்பு கருத்துவேறுபாட்டால் விலகிச் சென்றவர். பீகாரில் வசித்த அவரது குடும்பம் ஆர்யசமாஜத்தை சேர்ந்தது. எளிய விவசாயியாக இருந்த அவரது தந்தை காந்திய வழியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். சம்பரானில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் இதற்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தது. பள்ளிப் படிப்பு முடிவதற்குள்ளாகவே ரேணுவின் அரசியல் ஈடுபாடு துவங்கிவிட்டது. பனாரஸில் படித்த …

இசையே வாழ்க்கை. Read More »