admin

நாற்பது ஆண்டுக்கால கேள்வி

வாழும் காலத்தில் சொந்த தேசத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு நாவலாசிரியன் தனது மறைவிற்குப் பிறகு உலகின் சிறந்த எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதும் அவரது நாவல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாவது புரிந்து கொள்ளமுடியாத புதிராகும் நல்ல நாவல்கள் தனக்கான இடத்தைத் தானே தேடிக் கொள்கின்றன. யாரோ ஒரு தேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர் வாசகர், அந்த நாவலைக் கண்டுபிடித்து உலகின் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். அப்படித் தான் சண்டோர் மராயிற்கும் நடந்தது ஹங்கேரியின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர் சண்டோர் மராய். (Sándor Márai)அவர் மறைந்து பனிரெண்டு ஆண்டுகளுக்குப் …

நாற்பது ஆண்டுக்கால கேள்வி Read More »

துப்பாக்கி முனையில் ஒரு பயணம்

இரண்டாம் உலகப்போரின் போது மலேயா மீது ஜப்பானியர் படையெடுத்த சமயத்தில் நடந்த உண்மை நிகழ்வினைப் பற்றிய படம் A Town Like Alice. நெவில் ஷட்டின் நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள். மலேசியாவில் வசித்த வந்த பிரிட்டிஷ்காரர்கள் 1942 இல் ஒரு நாள் ஜப்பானிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு காரணமாக வெளியேறும்படியான சூழல் உருவாகிறது. சிங்கப்பூருக்குத் தப்பிப் போக முயல்கிறார்கள். கோலாலம்பூரில், ஜீன் பேஜெட் என்ற இளம்பெண் வேலை செய்த அலுவலகம் மூடப்படுகிறது. அவளது உயரதிகாரி ஹாலந்து உடனடியாக ஊரைவிட்டு வெளியேறும்படி …

துப்பாக்கி முனையில் ஒரு பயணம் Read More »

யானையின் சித்திரம்.

ஆ,மாதவனின் புனலும் மணலும் நாவலில் ஒரு அபூர்வமான காட்சி விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் தொழில் பற்றிய இந்த நாவல் சூழலியல் பிரச்சனையை அடையாளப்படுத்திய முன்னோடி நாவலாகும். திருவனந்தபுரத்திலுள்ள கோட்டையாறு என்ற ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் அங்குசாமியின் வாழ்க்கையோடு அந்தத் தொழிலில் ஈடுபடும் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை பாடுகளையும் மிக அழகாக மாதவன் எழுதியிருக்கிறார். இந்த நாவலில் ஆற்றில் மணல் அள்ளப்பட்ட காரணத்தால் பெரும் பள்ளம் ஏற்படுகிறது. மழைக்காலத்தின் ஒரு நாள் ஆற்றில் தண்ணீர் பெருகியோடும் போது …

யானையின் சித்திரம். Read More »

நாயனக்காரர்களின் வருகை

சஞ்சாரம் நாவல் குறித்த பார்வை மதன்குமார் நாவலின் பெயருக்கு ஏற்றாற்போல் இதில் வரும் கலைஞர்களும் இசையும் காலமும் சஞ்சாரம் செய்வதுடன் நம்மையும் அதனுடனே கொண்டு செல்கிறது. இன்றளவும் மங்கள இசை என்றாலும் எந்த வித கோவில் திருவிழா, திருமணம், முக்கிய நிகழ்வுகள் எதுவென்றாலும் முதலில் ஞாபகம் வருவது நாதஸ்வர இசைதான். ஆனால் நாயனக்காரர்களைக் கலைஞர்களாகவோ நாதஸ்வரத்தை இசையாகவோ இப்போதெல்லாம் கருதுவதேயில்லை என்பதே வருத்ததிற்குரிய உண்மை. இதை மையமாகக் கொண்டு தான் நாவல் சஞ்சாரமாகிறது. நாயனக்காரர்களின் இன்ப துன்பங்கள் …

நாயனக்காரர்களின் வருகை Read More »

மலையாளத்தில்

பஷீரின் திருடன் என்ற எனது குறுங்கதையை ஷாஜி மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். Truecopythink இணைய இதழில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. நன்றி ஷாஜி. https://webzine.truecopy.media/packet-41

இதயத்திலிருந்து எழும் குரல்

எப்போது தஸ்தாயெவ்ஸ்கிக்கு தான் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் முதன்முறையாகப் பிறந்தது என்பதைப் பற்றி Jacques Catteau புத்தகத்தில் ஒரு தகவலைப் படித்தேன். 1837ல் பொறியியல் புகுமுக வகுப்பில் பயிலுவதற்காகத் தனது சகோதரன் மிகேலுடன் பீட்டர்ஸ்பெர்க் வந்த தஸ்தாயெவ்ஸ்கி புஷ்கின் சண்டையிட்டுக் கொல்லப்பட்ட இடத்தைக் காணச் சென்றார். சில மாதங்களுக்கு முன்பு தான் அந்தச் சம்பவம் நடந்தேறியது. புஷ்கின் மீது தஸ்தாயெவ்ஸ்கியும் அவரது சகோதரனும் தீராத காதல் கொண்டிருந்தார்கள். ஆகவே புஷ்கின் டூயல் சண்டை செய்த …

இதயத்திலிருந்து எழும் குரல் Read More »

துயிலின் திருவிழா

ஜெ. திவாகர் எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின்றன என்பது போல இந்நாவலின் கதையோட்டம் முழுமையும் தெக்கோடு துயில் தரு மாதா கோவிலில் நடைபெறும் பத்து நாள் திருவிழா நோக்கியே நகர்கிறது. எஸ்.ரா. வின் அத்தனை கதைகளிலும் முக்கிய கதாபாத்திரமாய் இடம்பெறும் வெயில்.  இக்கதையிலும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் நம் உடலில் கண்ணுக்கு தெரியாமல் ஓடும் நரம்புகளாய் பின்னி பிணைந்து நம்மோடும், கதையோடும் பயணிக்கிறது வெயில். இந்நாவல், மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது. ஒரு தளம் …

துயிலின் திருவிழா Read More »

பாலபுரஸ்கார்

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ சிறார் நூலுக்கு  சிறுவர் இலக்கியத்திற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. பாலபாரதிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் புத்தகம் வெளியிட்ட வானம் மணிகண்டனுக்கு பாராட்டுகள்.

வீடும் உலகமும்

புதிதாக ஒரு வீட்டிற்குக் குடியேறும் போது ஏற்படும் அனுபவங்கள் எல்லாக் காலத்திலும் ஒன்று போலவே இருக்கின்றன. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டிஷ் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு குடும்பம் புறநகர் லண்டனிலுள்ள ஒரு வீட்டிற்குப் புதிதாகக் குடியேறுகிறார்கள். அண்டை வீட்டாருடன் ஏற்படும் அறிமுகம். தெரிந்த நண்பனின் வருகை. குடும்பம் அங்கே மெதுவாக நிலை கொள்ள ஆரம்பிப்பது. அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் எனக் காட்சிகளைக் காணும் போது இது போன்ற அனுபவத்தைத் தானே நான் …

வீடும் உலகமும் Read More »

நிகழாத சந்திப்பு

புதிய குறுங்கதை அவன் லேடிமெக்பெத்தை எலக்ட்ரிக் ட்ரைனில் வைத்துச் சந்தித்தான். அவள் லேடி மெக்பெத் தானா. ஏனோ அவளைப் பார்த்த மாத்திரம் அவள் தான் மெக்பெத்தின் மனைவி. அரசனைக் கொலை செய்யத்தூண்டிய பெண் என்று தோன்றியது ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தை அவன் பலமுறை படித்திருக்கிறான். லேடி மெக்பெத்தின் உண்மையான பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஏன் ஷேக்ஸ்பியர் அவளுக்குப் பெயர் வைக்கவில்லை. லேடி மெக்பெத் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணுகிறவள். ஒரு கடிகாரத்திற்குச் சாவி கொடுப்பது போலவே …

நிகழாத சந்திப்பு Read More »