admin

மண்ணாசை எனும் மண்ணின் குரல்

சங்கர ராமின் மண்ணாசை தமிழின் குறிப்பிடத்தக்க நாவல். அதிகம் பேசப்பபடாத ஆனால் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான நாவல். நீண்டகாலம் இந்த நாவல் அச்சில் இல்லாமல் இருந்தது. நண்பர் கால. சுப்ரமணியம் அதைத் தமிழினி மூலம் மறுபதிப்புச் செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். சங்கர ராமின் சொந்த ஊரை மையப்படுத்திய நாவல். முசிறியைச் சுற்றிய கிராமங்களின் இயல்பை. விவசாயக் குடும்பத்தின் வாழ்க்கை நெருக்கடிகளை மிக உண்மையாகச் சங்கரராம் எழுதியிருக்கிறார். தான் நேரில் கண்ட உண்மை …

மண்ணாசை எனும் மண்ணின் குரல் Read More »

கிரா விருது

2021ம் ஆண்டுக்கான கி.ரா விருது பெறும் அன்பு நண்பர் எழுத்தாளர் கோணங்கிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் நேற்று அவருடன் தொலைபேசியில் பேசினேன். கோணங்கியோடு பல ஆண்டுகள் ஒன்றாகச் சுற்றித்திரிந்த நாட்கள் நினைவில் வந்து போனது. கோணங்கி உற்சாகமாகப் பேசினார். அடுத்த வாரம் கோவில்பட்டிக்கு நேரில் சென்று சந்திக்க இருக்கிறேன். கிரா பெயரில் கோணங்கி கௌரவிக்கப்பட்டது மிகப் பெரிய மகிழ்ச்சி. நாளை வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் அவரைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ••

மலைக்கிராமத்தின் பள்ளி

வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’ நாவலை என் இருபது வயதுகளில் படித்திருக்கிறேன். மலைக்கிராமத்துக்குச் செல்லும் ஒரு பள்ளி ஆசிரியரின் கதையை விவரிக்கக்கூடியது. ஆடு மேய்ப்பவர்கள் வாழும் அந்தச் சிற்றூரில் அவர் எப்படித் தங்கி பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்கிறார் என்பதை அழகாக விவரித்திருப்பார்கள். The Miracle (2015 film) என்ற துருக்கிப்படத்தைப் பார்த்தபோது பன்கர்வாடி தான் நினைவில் வந்தது. இப்படமும் மலைக்கிராமத்தினை தேடிச் செல்லும் பள்ளி ஆசிரியரின் கதையே. மாஹிர் எக்ரெட்மேன் ஒரு பள்ளி ஆசிரியர் .1960களில் துருக்கியின் …

மலைக்கிராமத்தின் பள்ளி Read More »

ஆறும் மலையும்

இரண்டு தமிழ்ப் படங்களைச் சமீபத்தில் பார்த்தேன். இப்படங்கள் சென்ற ஆண்டில் வெளியாகியிருந்தன. அப்போது பார்க்க இயலவில்லை. சில தினங்களுக்கு முன்பாக இணையத்தில் பார்த்தேன். இரண்டும் எனக்குப் பிடித்திருந்தன. கமலி from நடுக்காவேரி – ராஜசேகர் துரைசாமி இயக்கியது. அவரது முதற்படம். மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தனை மென்மையான காதல்கதையைப் பார்த்து நீண்டகாலமாகிவிட்டது. ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் ஆசையினை இயல்பாக, நுட்பமாக விவரித்துள்ளார்கள். படம் பார்க்கிறோம் என்ற உணர்வேயில்லை. பிளஸ் டூ படிக்கும் பக்கத்துவீட்டுப் …

ஆறும் மலையும் Read More »

இசையே வாழ்க்கை.

பணீசுவர்நாத் ரேணு புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர். இவரது தேர்வு செய்யப்பட்ட கதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரேணு இளமையில் இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாக இயங்கியவர். பின்பு கருத்துவேறுபாட்டால் விலகிச் சென்றவர். பீகாரில் வசித்த அவரது குடும்பம் ஆர்யசமாஜத்தை சேர்ந்தது. எளிய விவசாயியாக இருந்த அவரது தந்தை காந்திய வழியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். சம்பரானில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் இதற்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தது. பள்ளிப் படிப்பு முடிவதற்குள்ளாகவே ரேணுவின் அரசியல் ஈடுபாடு துவங்கிவிட்டது. பனாரஸில் படித்த …

இசையே வாழ்க்கை. Read More »

சிறிய உண்மைகள் 6 பனிப் பறவைகள்

இயக்குநர் இங்க்மர் பெர்க்மென் தனது முன்னுரை ஒன்றில் ஒரு நிகழ்வினைக் குறிப்பிடுகிறார். அது வர்ஜின் ஸ்பிரிங் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம். கடுங்குளிரான மே மாதத்தில் அவர்கள் வடக்கு பிரதேசமான டலார்னாவில் இருந்தார்கள். காலை ஏழுமணி அளவில் படப்பிடிப்பிற்கான இடத்திற்கு அவரது குழுவினர் சென்று கொண்டிருந்தார்கள். அந்தப் பனிப்பாகையில் செல்வது கடினமாக இருந்த்து. மிக அதிகமான குளிர். ஆகவே விதவிதமான குளிராடைகளை அணிந்து கொண்டு பணியாளர்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார்கள். வழியெங்கும் பனிப்பொழிவு அதிகமாக இருந்த்து. படப்பிடிப்பு …

சிறிய உண்மைகள் 6 பனிப் பறவைகள் Read More »

இரவு ரயிலில் இரண்டு பெண்கள்

ஒரு ரயில் பயணத்தை இத்தனை அழகாகப் படமாக்கமுடியுமா என வியப்பில் ஆழ்த்திய திரைப்படம் SOMETHING USEFUL பெண் இயக்குநரான .பெலின் எஸ்மர் இயக்கிய துருக்கி நாட்டுப்படம். 2017ல் வெளியானது வழக்கறிஞரும் கவிஞருமான லேலா தன்னோடு பள்ளியில் படித்த நண்பர்கள் 25 ஆண்டுகளுக்குப்பிறகு ஒன்று சேரும் நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பக் காத்திருக்கிறாள். அது நீண்ட தூர ரயில் பயணம். தற்செயலாக ரயில் நிலையத்தில் பயிற்சி செவிலியராக வேலை செய்யும் கனனை சந்திக்கிறாள். அவளது தந்தை தன் …

இரவு ரயிலில் இரண்டு பெண்கள் Read More »

கவிதையின் கையசைப்பு

உலகக் கவிதைகளை அறிமுகம் செய்யும் எனது கவிதையின் கையசைப்பு நூல் பற்றி பவித்ரன் விக்னேஷ் சிறந்த அறிமுகம் ஒன்றை தந்துள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி

தமிழ் வாழ்க்கையின் புதிய பரிமாணம்.

கனகராஜ் பாலசுப்ரமணியம் கன்னடத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர். இவரது வாட்டர்மெலன் என்ற சிறுகதைகளின் தொகுப்பினை நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார். யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் படித்த மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்பு. கனகராஜ் சிறந்த சிறுகதைகளுக்காக நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார் கனகராஜ். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வேலையின் தமிழகத்திலிருந்து காரணமாகக் கர்நாடகாவிற்குப் புலம்பெயர்ந்து போய் அங்கேயே வேர்விட்டு வாழும் குடும்பத்தின் அகபுற உலகினை மிகச்செறிவாக எழுதியிருக்கிறார் கனகராஜ். இது ஒரு புதிய கதையுலகம். இதுவரை நாம் பதிவு …

தமிழ் வாழ்க்கையின் புதிய பரிமாணம். Read More »

போராடும் தவளை

உலகின் மிகச்சிறிய தவளை – வாசிப்பனுபவம் ந.பிரியா சபாபதி.      ஆதிகால மனிதன் இயற்கையோடு இணைந்து அதன் போக்குடனே வாழ்ந்தான்.  மனிதர்களுடைய அறிவு, ஆணவம் விரிவடைய விரிவடைய தன் பலத்தைப் பறைசாற்றத் தொடங்கினான். அதன்பின் தன் எல்லையை விரிவுபடுத்தினான். இயற்கையையும் தனதாக்கிக் கொண்டு தான்தான் இந்த அண்டத்தில் வலிமை பொருந்தியவன் என்பதை வெளிக்காட்ட போர் புரிந்தான். பிற நாட்டையும் இயற்கைச் செல்வங்களையும் தனக்கானது உரிமை கொண்டாடினான்.  நம் முன்னோர்களான இவர்களது எண்ணமானது நம்முடைய உடலுக்குள்ளும் ஓடுவதால் இப்போது …

போராடும் தவளை Read More »