admin

நகுலன் கட்டவிழ்த்த நிழல்கள்

 (இந்து தமிழ்திசை நகுலன் நூற்றாண்டு சிறப்புப் பகுதியில் வெளியான கட்டுரை – 22.8.21) நகுலன் எட்டு நாவல்கள் எழுதியிருக்கிறார் அல்லது எட்டுப் பெயர்களில் ஒரே நாவலின் வேறுவேறு பகுதிகளை எழுதியிருக்கிறார் என்றும் சொல்லலாம். நவீன நாவல் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான வடிவம். அது மரபான நாவலைப் போல் கதையை வளர்த்தெடுத்து உச்சநிலைக்குக் கொண்டுபோவதைவிடவும் கதைவழியாகச் சுய அனுபவங்கள், நினைவுகள், பாலியல் இச்சைகள், அதன் பின்னுள்ள உளவியல், சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள், வாழ்வின் கசப்புணர்வு, …

நகுலன் கட்டவிழ்த்த நிழல்கள் Read More »

பெர்க்மெனின் வீடு

Trespassing Bergman என்ற ஆவணப்படம். பெர்க்மேன் இறந்து ஐந்து வருடங்கள் கழித்து உலகப்புகழ் பெற்ற இயக்குநர்கள் ஃபெரோ தீவில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்து பெர்க்மெனை நினைவு கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது பெர்க்மென் தனிமையை விரும்பி ஃபெரோ தீவில் வசித்து வந்தார். அவரது வீடு எங்கேயிருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியாது. பார்வையாளர்களை அவர் அனுமதிப்பதில்லை. ஆகவே உலகின் கண்களில் படாமல் வாழ்ந்து வந்த பெர்க்மெனின் வீட்டினையும் அவரது நூலகம் மற்றும் பணியாற்றிய அறையைக் காண்பதற்காக …

பெர்க்மெனின் வீடு Read More »

இருவர் கண்ட ஒரே கனவு

திபெத்தின் கெக்சிலி பீடபூமியின் 16,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையே உலகின் மிக உயரமான சாலையாகும். அந்தக் கெக்சிலி சாலையில் லாரி ஒட்டிக் கொண்டு செல்கிறான் டிரைவர் ஜின்பா. ஆள் நடமாட்டமேயில்லாத நீண்ட சாலை. பழைய ஆடியோ கேசட் ஒன்றை ஒலிக்கவிட்டபடியே வண்டி ஒட்டுகிறான் ஜின்பா. கேமிரா அவன் முகத்தையே மையமிடுகிறது. சலிப்போ, கோபமோ எதுவுமில்லை. அவன் கண்கள் அடிக்கடி கயிற்றில் தொங்கும் டாலரில் உள்ள மகளின் புகைப்படத்தை நோக்குகின்றன. அந்தச் சாலையில் அவன் ஒருவன் மட்டுமே …

இருவர் கண்ட ஒரே கனவு Read More »

புத்தரின் அடிச்சுவட்டில்

அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகச் சிவபாதசுந்தரம் புத்தர் பிறந்த இடம் துவங்கி அவரது வாழ்வில் தொடர்புடைய முக்கிய இடங்களை நேரில் காணுவதற்காக ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அந்த பயண அனுபவத்தை கௌதம புத்தரின் அடிச்சுவட்டில் என்ற நூலாக எழுதியிருக்கிறார். வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது புத்தர் வாழ்க்கையோடு தொடர்புடைய ஸ்தலங்கள் உத்திர பிரதேசம் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ளன. நேபாள எல்லையில் அவர் பிறந்த ஊர் உள்ளது. கபிலவஸ்து சாரநாத், சிராவஸ்தி, வைசாலி கௌசாம்பி சங்கர்ஷ்புரம் நாலந்தா, பாடலிபுரம் …

புத்தரின் அடிச்சுவட்டில் Read More »

வேம்பலையின் நினைவுகள்

நெடுங்குருதி- வாசிப்பனுபவம் ஏழுமலை. வாழ்வின் நேரடி எதார்த்தத்தையும் நுட்பமான காட்சிப் படிமங்களின் சித்தரையும் கொண்டு உயிர்ப்புடன் குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்ட ஒரு அற்புத படைப்பு தான் நெடுங்குருதி. நாவலின் கதை வேம்பலை என்ற கிராமத்தில் மக்களையும் அவர்களின் வாழ்வையும் புனைவு எதார்த்தமாகச் சித்தரித்துக் காட்டும் ஒரு படைப்பு நாவலின் முதல் பகுதி ‘கோடைக்காலம் ‘ ‘காற்றடிகாலம்’ இந்த இரண்டு பகுதியுமே நாகு என்ற மைய கதாபாத்திரத்தின் வாழ்வியலோடு நாகுவின் பதின்பருவத்து அக உள சித்தரிப்பக மேலே விரிகிறது. …

வேம்பலையின் நினைவுகள் Read More »

கசடதபற

நவீன தமிழ் இலக்கியத்தின் புதுக்குரலாக ஒலித்த சிறுபத்திரிக்கை கசடதபற. 1970ல் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வெளிவந்த இந்த இதழின் வடிவமைப்பும், செறிவான படைப்புகளும் தனிச்சிறப்பு கொண்டவை. க்ரியா ராமகிருஷ்ணன். சா.கந்தசாமி, ஞானக்கூத்தன், நா.முத்துசாமி மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து இதனை நடத்தினார்கள். இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் நா. கிருஷ்ணமூர்த்தி. கசடதபற இதழில் எழுதத் துவங்கிய ஞானக்கூத்தன், நகுலன், பசுவய்யா வைத்தீஸ்வரன், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன், கல்யாண்ஜி, கலாப்ரியா, கங்கைகொண்டான் , சுஜாதா , இந்திரா பார்த்தசாரதி, …

கசடதபற Read More »

எஸ் ராமகிருஷ்ணன் நேர்காணல் பகுதி- 3

அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல். உங்கள் சிறுகதைகளில் ஆரம்பக் காலம் தொட்டு இன்று வரை வடிவம் சார்ந்த பல நுட்பமான உத்திகள் இயல்பாகவே சாத்தியப்பட்டுள்ளன. ஆனால் உள்ளடக்கம் சார்ந்து பார்த்தோமென்றால் மனித மன ஏக்கங்கள், புறச்சூழல் அழுத்தங்கள், அதன் காரணமான அகவுணர்வு மாற்றங்கள் ஆகியவையே அடிநாதமாகின்றன. ஏன்? இவைதான் என்னை உருவாக்கிய விஷயங்கள். என் ஆளுமைதானே என் எழுத்திலும் வெளிப்படும். இது என் ஒருவன் சம்பந்தபட்ட விஷயமில்லை. எழுத்தாளர்களின் பால்யகாலமும் அவர்கள் உருவான விதமும் அவர்கள் …

எஸ் ராமகிருஷ்ணன் நேர்காணல் பகுதி- 3 Read More »

எஸ் ராமகிருஷ்ணன் நேர்காணல் பகுதி 2

(அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல்) நீங்கள் ஒவ்வொரு நாளும் வாசிப்பு மற்றும் எழுத்துக்கான நேரத்தை எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்? நடுவே சினிமாவுக்கும் எழுதுகிறீர்கள். பயணம் செல்கிறீர்கள். உலகச் சினிமாக்களைப் பார்க்கிறீர்கள். பதிப்பக வேலைகள், இதர பத்திரிக்கைகளுக்கான சிறுகதைகள், உரைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் ‘சென்னையும் நானும்’ போன்ற காணொளித் தொடர்கள். எப்படி இதைச் சாத்தியப்படுத்துகிறீர்கள்? மேற்கத்திய எழுத்தாளர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி வாசித்தபோது அவர்கள் எழுதுவதற்காக, படிப்பதற்காக, பயணம் செய்வதற்காகத் தனித்தனி நேரம் ஒதுக்கிச் செயல்படுகிறார்கள் என்பதை அறிந்தேன். …

எஸ் ராமகிருஷ்ணன் நேர்காணல் பகுதி 2 Read More »

எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்: பகுதி 1

அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல்.(ஏப்ரல் 2021) எஸ்.ராவின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் நண்பர் கணேஷ் பாபு நடத்திய நேர்காணல் . அரூ குழுவின் சில கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. எஸ்.ராவின் எழுத்து பயணம், வாசிப்பு, வரலாறு, பெண் கதாபாத்திரங்கள், மொழியாக்கம், உலக இலக்கியம், உலகத்தின் மீதுள்ள புகார்கள், காந்தி, கோணங்கி என நீளும் உரையாடல் கணேஷ் பாபு கொடுக்கும் அறிமுகத்துடன் துவங்குகிறது •••. எஸ்.ராமகிருஷ்ணன் தனியொரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி ஓர் இயக்கமாக வளர்ந்துள்ளவர். நடமாடும் நூலகம் …

எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்: பகுதி 1 Read More »

பதினேழாவது ஆள்

2021 ஆகஸ்ட் காலச்சுவடு இதழில் வெளியான எனது குறுங்கதை ராமநாதன் வீட்டில் மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படத்தில் புதிதாக ஒருவர் தோன்றியிருந்தார். அவர் யார். எப்படி புகைப்படத்தில் புதிதாகத் தோன்றினார் என்று வீட்டில் எவருக்கும் புரியவில்லை. அந்தப் புகைப்படம் 1986ல் எடுக்கப்பட்டது. அஜந்தா ஸ்டுடியோவில் பொங்கலுக்கு மறுநாள் எடுத்தது. சின்ன அக்கா கல்யாணி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எடுத்த புகைப்படம். சுருள் முடியோடு பேரழகியாக இருக்கிறாள். அந்த புகைப்படத்தில் மொத்தம் பதினாறு பேர் இருந்தார்கள். ஆனால் பதினேழாவதாக …

பதினேழாவது ஆள் Read More »