admin

ஆக்டோபஸின் தோழன்

My Octopus Teacher என்ற ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். இந்தப் படம் கிரக் ஃபாஸ்டர் என்று ஆழ்கடல் ஆய்வாளர் தனது கடலடி அனுபவத்தில் சந்தித்த ஒரு ஆக்டோபஸோடு எப்படி நெருங்கிப் பழகினார் என்பதை மிகச்சிறப்பாக விவரிக்கிறது. ஃபாஸ்டரோடு நாமும் கடலின் அடியில் பயணிக்கத் துவங்குகிறோம். ஃபாஸ்டரின் குரலில் தான் படம் துவங்குகிறது. அவரது கடந்தகால அனுபவம் முற்றிலும் மாறுபட்டது. ஒரு காலத்தில் ஆப்ரிக்கா வேட்டை பழங்குடிகளுடன் பழகி அவர்கள் எவ்வாறு விலங்குகளின் சுவடுகளின் வழியே …

ஆக்டோபஸின் தோழன் Read More »

தேரின் அழகு

’தேவகியின் தேர்’  சிறுகதை குறித்த வாசிப்பனுபவம் தயாஜி / மலேசியா சிறுகதையில் ஒன்றை சொல்லியும் சொல்லாமலும் வாசகர்களிடம் அதன் முடிவை கொடுப்பது ஒரு கலை. எஸ்.ரா அவர்களுக்கு அது கை வந்த கலை. அதற்கு சான்றாக இக்கதையைச் சொல்லலாம். ‘தேவகியின் தேர்’ என்பது தலைப்பாக இருந்தாலும், இறுதியில் தேவகியும் தேரும் ஒரே பொருளாக மாறிவிடுவதில் சிறுகதை தனித்து நிற்கிறது. ஆணாதிக்க குடும்பம் என்பதை நாயகியின் அப்பாவின் அறிமுக காட்சியிலேயே நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவ்வூரில் இருக்கும் …

தேரின் அழகு Read More »

கடைசிக் குதிரைவண்டி

புதிய சிறுகதை கண்ணாயிரம் வீட்டின் பெரிய இரும்புக் கேட்டை ரகசியமாகத் தள்ளி அந்த இடைவெளியின் வழியே உள்ளே எட்டிப்பார்த்தார் சேர்மதுரை. குதிரை கண்ணில் படவில்லை. வாசலை ஒட்டி ஒரு இன்னோவா கார் நிற்பது மட்டும் தான் கண்ணில் தெரிந்தது. எக்கிக் கொண்டு பார்த்தபோது நாலைந்து பூச்செடிகளும் பைக் ஒன்றும் கண்ணில் பட்டது குதிரையை எங்கே கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று மாலை அவரது கடனுக்காகக் குதிரையைக் கண்ணாயிரத்தின் ஆட்கள் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அந்த நேரம் சேர்மதுரை …

கடைசிக் குதிரைவண்டி Read More »

மூத்தோர் பாடல் 4

குருகிடம் தப்பிய இறால். Minuscule என்ற பிரெஞ்சு அனிமேஷன் தொடர்வரிசை பூச்சிகள் மற்றும் வண்டுகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் மிகச்சிறப்பான தொடராகும். அதில் ஒரு வெட்டுக்கிளி எப்படி இலையை உண்ணுகிறது. ஒரு வண்டு எவ்வாறு மரத்தைத் துளையிடுகிறது என்பதைப் போல நுண்ணுயிர்களின் வாழ்க்கையை அற்புதமாகச் சித்தரித்திருப்பார்கள். அந்தப் படங்களைப் பார்த்தபிறகு வண்டும் பூச்சிகளும் விநோத உலகில் வாழ்வதாக உணர்ந்திருக்கிறேன். இது போலவே நேஷனல் ஜியாகிரபி சேனலில் மீன்கொத்தி ஒன்று எப்படி மீனைக் கவ்விச் செல்கிறது என்பதைத் துல்லியமாகப் படம்பிடித்து …

மூத்தோர் பாடல் 4 Read More »

கி.ரா: நூற்றாண்டின் சாட்சியம்

இந்து தமிழ்திசை நாளிதழில் வெளியான கட்டுரை •• கி.ராஜநாராயணன் நவீனத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க குரல் மட்டும் அல்ல; ஒரு நூற்றாண்டின் சாட்சியமும் அவர். தனது 98 வயதில் உற்சாகமாகப் புதிய நாவலை எழுதி வெளியிட்டார். அடுத்த மாதம் 99 வயதிலும் ஒரு புதிய நாவலை வெளியிடத் திட்டம் கொண்டிருந்தார். எழுத்துதான் அவரது ஒரே இயக்கம்; விருப்பம். வற்றாத ஜீவ ஊற்றுகளில் எப்போதும் நீர் சுரந்தபடியே இருக்கும் என்பார்கள். அப்படியானதுதான் கி.ரா.வின் எழுத்து வாழ்க்கை. “நான் பிறந்து …

கி.ரா: நூற்றாண்டின் சாட்சியம் Read More »

தேவகியின் தேர்

புதிய சிறுகதை “நம்ம கோவில் தேரைப் பார்க்க வந்திருக்கிறார். அவரைத் தேரடி முக்கு வரைக்கும் அழைச்சிட்டு போயிட்டு வா“ என்று ஹரியிடம் அப்பா சொன்ன போது அவன் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தான். அம்மா தோசைக்கல்லை அப்போது தான் அடுப்பில் போட்டிருந்தாள். அம்மா மெதுவாகத் தான் தோசை சுடுவாள். அதுவும் அப்பாவிற்குச் சுடும்போது இடையில் வேறு யாரும் சாப்பிட வந்துவிடக்கூடாது. அப்பா சாப்பிட்டுமுடித்துப் போன பிறகு தான் மற்றவர்களுக்குச் சாப்பாடு அப்பா ஆதிகேசவப்பெருமாள் கோவிலின் நிர்வாகத்தைப் பார்க்கிறவர் என்பதால் அதிகாலையிலே …

தேவகியின் தேர் Read More »

காற்றின் நறுமணம்.

காருகுறிச்சியார் நூற்றாண்டுவிழாவிற்காக ஆனந்தவிகடனில் வெளியான சிறப்புக் கட்டுரை •• திருமண விழாக்களுக்கு ஊர் ஊராகச் சென்று மைக்செட் போடும் வேலாயுதம் எப்போதும் போடும் முதல் ரிக்கார்ட் காருகுறிச்சியின் நாதஸ்வரம் தான். அந்த மங்கள இசையை ஒலிக்க விட்டவுடன் தான் கல்யாணவீடு ஒளிரத்துவங்கும். உண்மையில் சந்தோஷத்தின் அடையாளமாகவே நாதஸ்வரம் ஒலிக்கிறது. அந்த வாத்தியம் கரிசல் மனிதனின் அன்பைப் போல வீரியமானது. உக்கிரமானது. நாட்டுப்பசுவின் பாலுக்கெனத் தனிருசியிருப்பது போலவே காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்திற்கும் தனிருசி இருக்கிறது. அந்த வேலாயுதம் மைக்செட் போடும் …

காற்றின் நறுமணம். Read More »

பன்னாலால் கோஷ்

பண்டிட் பன்னாலால் கோஷின் புல்லாங்குழலிசையை விரும்பிக் கேட்பேன். நிகரற்ற இசைக்கலைஞர். கிருஷ்ணகானம் என்பார்களே அது இவரது குழலில் பிறக்கிறது. எச்.எம்.வி வெளியிட்ட இவரது இசைநாடாக்களை வாங்கித் தொடர்ந்து கேட்டிருக்கிறேன் இணையத்தில் இவரது இசை நிறைய கிடைக்கிறது. இரவில் தனிமையில் கேட்கும் போது நாம் கரைந்து போய்விடுகிறோம். ரகசிய நதியொன்று புல்லாங்குழலில் இருந்து கசிந்து பெருகுகிறது. நிலவொளியைப் போல இசை பிரகாசிக்கிறது. ஆனந்தம் என்பதன் முழுமையான அர்த்தம் இது போன்ற இசையில் தானிருக்கிறது Pannalal Ghosh Hamsadhwani, Khamaj …

பன்னாலால் கோஷ் Read More »

மூத்தோர் பாடல் 3

சிறுகட் பன்றியின் பெருஞ்சினம் சிவகாசிக்கு முன்பாக உள்ளது திருத்தங்கல். பட்டாசு ஆலைகளும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் நிறைந்த ஊர். பலமுறை அங்கே போய் வந்திருக்கிறேன். ஆனால் அது சங்க காலத்தைச் சேர்ந்த ஊர் என்பதும் இரண்டு முக்கியச் சங்க கவிஞர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்பதையும் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். பழந்தமிழ் இலக்கியங்களை வாசிக்க வாசிக்க ஏற்படும் பிரமிப்பும் பெருமையும் அளவில்லாதது. இந்த லாக்டவுன் நாட்களில் அதிகமும் சங்க இலக்கியங்களைத் தான் வாசித்தேன். சங்ககாலக் கவிஞர்களில் பலரும் தனது …

மூத்தோர் பாடல் 3 Read More »

கயிற்றின் முனை

அமெரிக்க எழுத்தாளரான கேதரின் ஆன் போர்ட்டர் எழுதிய, “கயிறு “என்ற சிறுகதையை க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தக் கதையை எப்படித் தேடிக்கண்டுபிடித்து மொழியாக்கம் செய்தார் என்று வியப்பாகவே இருக்கிறது. க.நா.சுவின் ரசனையும் தேர்வும் அபாரமானது. இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று பலரும் அலட்சியமாக விலகிப் போய்விடச் செய்யும் கதையிது. ஆனால் கதையில் அந்தக் கயிறு ஒரு முக்கியமான குறியீடாக இருக்கிறது என்பதை க.நா.சு நன்றாக உணர்ந்திருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பின் வழியே கண்டறியும் வெளிச்சமது. கேதரின் ஆன் …

கயிற்றின் முனை Read More »