admin

சின்னஞ்சிறு மலை ரயில்

மலைரயிலில் பயணம் செய்யும் போது நமது வயது கரைந்து போய்விடுகிறது. குறிப்பாகக் குகைகளுக்குள் ரயில் செல்லும் போது ஏற்படும் இருட்டில் உடனிருக்கும் பயணிகள் கூச்சலிடும் போது நாமும் இணைந்து கத்துகிறோம். மரங்களுக்குள்ளும் பள்ளத்தாக்கின் மீதும் பெரிய பாலத்தைக் கடந்தும் ரயில் செல்லும் போது நாம் புதுவகை அனுபவத்தைப் பெறுகிறோம். உலகின் மிகச்சிறிய மலைரயிலாகக் கருதப்படுவது சீனாவின் ஜியாங் நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் இயங்கும் ரயில் சேவையாகும். இந்த ரயில் சேவை பற்றிய ஒரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். நாற்பது …

சின்னஞ்சிறு மலை ரயில் Read More »

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார். இறுதி நிகழ்விற்குப் போக முடியவில்லையே எனக் கண்ணீர் பெருகுகிறது கரிசல் மண்ணிலிருந்து உருவான படைப்பாளிகள் அனைவருக்கும் அவரே பேராசான். ஞானத்தந்தை. நிகரற்ற எழுத்தாளராக மட்டுமின்றி விவசாயிகளின் பிரச்சனைக்காகக் களத்தில் இறங்கிப் போராடி சிறை சென்ற போராளியாகவும் இருந்தவர் . கரிசல் நிலத்தின் தொல் நினைவுகள், வரலாறு யாவும் அவர் மூலம் எழுத்து வடிவம் பெற்றன. நாட்டுப்புறக்கதைகளையும் பாடல்களையும் தேடிச் சேகரித்து ஆய்வு செய்து ஆவணப்படுத்திய ஆய்வாளர். கரிசல் வட்டார அகராதியை …

அஞ்சலி Read More »

இசையே எனது புன்னகை

இந்தியாவின் மகத்தான இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் தனது சொந்த ஊரான காசி பற்றியும் தனது இசை வாழ்க்கையின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்ட கட்டுரை. அட்சரம் இதழில் வெளியானது. •• பனாரஸில் மழைக்காலம் துவங்கியிருக்கிறது. கங்கை நதிக் கரையோரங்களில் அதிகாலை நேரம் ரம்மியமானது. படித்துறைகள் இருளில் மூழ்கியிருக்கின்றன. குவாலியர் ராஜா இந்தூர் அரசர் எனப் பல்வேறு ராஜாக்களும் கட்டிய படித்துறைகளில் வேகமான கங்கையின் அலைகள் மோதுகின்றன. கங்கையைப் பார்த்துக் கொண்டிருப்பதே இசை கேட்பது போலவேயிருக்கிறது. இந்தப் படிக்கட்டுகளில் …

இசையே எனது புன்னகை Read More »

கைகளின் இயக்கம்

1984ம் ஆண்டுக் கான்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இயக்குநர் ராபர்ட் ப்ரெஸனை நேரில் சந்தித்து ஒரு நேர்காணல் எடுக்க விரும்பிய நான்கு இளைஞர்கள் பகலிரவாக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தொலைப்பேசி செய்தபடியே இருந்தார்கள். ராபர்ட் ப்ரெஸன் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க விரும்பாதவர். நேர்காணல்களில் விருப்பமில்லாதவர். ஆகவே அவர்களின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இதற்கிடையில் அந்த இளைஞர்கள் திரைப்படவிழாவிற்கு வந்திருந்த லூயி மால், பால் ஷ்ராடர் தார்க்கோவ்ஸ்கி பல்வேறு இயக்குநர்களிடம் ராபர்ட் ப்ரெஸன் பற்றிப் பேட்டி எடுத்து அதைத் …

கைகளின் இயக்கம் Read More »

எனது அப்பா

ஐசக் அசிமோவ் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளரான ஐசக் அசிமோவ் தனது சொந்த தேசமான ரஷ்யாவை விட்டு அமெரிக்காவில் குடியேறியவர். 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் பேராசிரியராகப் பணியாற்றியவர். விஞ்ஞானத்தின் புதிய சாத்தியங்கள் பற்றியும் விண்வெளி மனிதர்கள், மற்றும் ரோபோ பற்றிய இவரது கதைகள் அறிவியல் புனைவிற்குப் புதிய தளத்தினை உருவாக்கியவை. அவர் தன் தந்தையைப் பற்றி எழுதிய சிறப்பான பதிவு. •• 1923 ஜனவரி எனது அப்பாவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையான நாள். அதுவரை அவர் …

எனது அப்பா Read More »

எஸ்.ராவுடன் விடுமுறைக்காலம்

ஜனக், ரியா, தருணிகா மூவரும் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர்கள்.சிறந்த நண்பர்கள். இந்த விடுமுறைக்காலத்தில் தினமும் புத்தகங்கள் படித்து வருகின்றனர்.கடந்த வாரம் எஸ்.ரா அவர்களின் புத்தகங்களை படித்து விமர்சனம் எழுதி உள்ளனர் என ரம்யா ரோஷன் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு எனது நன்றி. ஜனக். ரியா, தருணிகா மூவருக்கும் என் அன்பும் நன்றியும். சிறப்பாக எழுதியிருப்பதற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள் ———————————————————- பெயர் :ஜனக் புத்தகம்: எலியின் பாஸ்வேர்டு விமர்சனம்: வணக்கம். என் பெயர் ஜனக் …

எஸ்.ராவுடன் விடுமுறைக்காலம் Read More »

மின்தாது யந்திர வினோதம்

நூற்று நாற்பது வருஷங்களுக்கு முன்பாகச் சென்னையில் உள்ள பீபில்ஸ் பார்க்கில் நடைபெற்ற விக்டோரியா மகாராணி பட்டம் சூடிய மகோற்சவ விழா பற்றி ஜநவிநோதினி’ 1878ல் வெளியான கட்டுரை. ** அந்தக் காலக் கொண்டாட்டம் எப்படி இருந்திருக்கிறது என்று பாருங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட தளத்தில் தான் நடைபெறும். குறைவானவர்கள் தான் மாற்றம் குறித்து யோசித்தார்கள். ஏற்றுக் கொண்டார்கள். பின்பு அந்த மாற்றம் தானே மக்களிடம் அறிமுகமாகி பெரிய அளவில் நடந்தேறியது. இன்று …

மின்தாது யந்திர வினோதம் Read More »

ஓவியம் என்பது கனவு வெளி.

மார்க் சாகலின் (Mark Chagal) ஓவியங்களை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் பார்த்திருக்கிறேன். மூல ஓவியங்களை நேரில் காணுவது பரவசமூட்டக்கூடியது. அதன் புகைப்படங்களையும் நகல் பிரதிகளையும் கண்டிருந்த போதும் அசல் ஒவியம் தரும் மகிழ்ச்சியும் வியப்பும் அலாதியானது. அப்படித் தான் சாகலின் ஓவியத்தின் முன்பு வியந்து போய் நின்றிருந்தேன். மறக்கமுடியாத அனுபவமது. சமீபத்தில் மார்க் சாகலின் ஓவியங்களைக் கொண்ட விரிவான நூல் ஒன்றை வாசித்தேன். ஓவியரைப் புரிந்து கொள்வதற்கு அவரது வாழ்க்கையும் பார்வைகளும் முக்கியமாகிறது. மார்க் சாகல் பெலாரசிய …

ஓவியம் என்பது கனவு வெளி. Read More »

கலைஞனின் காத்திருப்பு

கைதட்டுகள் போதும் –  சிறுகதை வாசிப்பனுபவம் தயாஜி – மலேசியா கதை தொடங்கிய இடத்திலேயே முடிகிறது. அதற்குள் ஒரு கலைஞனின் இழப்புகளை பதிவு செய்துள்ளார் எஸ்.ரா. ‘கைதட்டுகள் போதும்’ என்று தலைப்பை வாசித்து கதைக்குள் நுழைந்தேன். ஆனால், ‘கைதட்டல் போதுமா?’ என்கிற கேள்வியோடு சிறுகதையை வாசித்து  முடித்தேன். கலை மீதான ஆர்வம் ஏதோ ஒரு வயதில் எவருக்கும் ஏற்படக்கூடியதுதான். சிலர் அதற்காகவே பிறந்தவர்கள் போலவும் பிரகாசிப்பார்கள். சிலர் துரதிஷ்டவசமாக காணாமல் போய்விடுவார்கள்.  இப்படி பிரகாசிப்பவர்களும்  காணாமல்  போகிறவர்களும் …

கலைஞனின் காத்திருப்பு Read More »