admin

ஏனுகுல வீராசாமி

காசி யாத்திரை என்ற1832இல் வெளியான நூலே தமிழின் முதல் பயண இலக்கியமாகக் கருதப்படுகிறது. இதை எழுதியவர் ஏனுகுல வீராசாமி . இவர் சென்னையில் வசித்தவர். 1830ம் வருஷம் மே மாதம் 18ம் தேதி இவர் மதராஸிலிருந்து காசி யாத்திரைக்குப் புறப்பட்டார். ஒரு வருஷம் மூன்று மாதங்கள் நீண்ட இந்தப் பயணம் செப்டம்பர் 1831ல் முடிவு பெற்றது. தனது பயண அனுபவத்தை அவர் குறிப்பேட்டிலும் கடிதங்கள் வழியாகவும் எழுதி வந்தார். தெலுங்கில் இவர் எழுதிய குறிப்புகளைப் பனையூர் வெங்குமுதலி …

ஏனுகுல வீராசாமி Read More »

சுவர் தோறும் ஓவியங்கள்

தேனுகா •• திருப்பரங்குற்றத்து முருகப்பெருமானை வழிபடும் மக்கள் அதன் அருகில் உள்ள சித்திரக் கூடத்தில் உள்ள ஓவியங்களை கண்டு ரசிக்காமல் வருவதில்லை. ரதி, மன்மதன், பூனை உருவம் கொண்டு ஓடும் இந்திரன், கௌதம முனிவன் முதலிய ஓவியங்களை கண்டவர்கள் இது என்ன, அது என்ன, இவர் யார், அவர் யார் என்று ஒருவருக்கொருவர் கேட்டு மகிழ்வுரும் காட்சியை நப்பண்ணனார் என்னும் புலவர் கூறுகிறார். சித்திரை மாடத்து ஓவியங்களை பார்த்துக் கொண்டே உயிர் நீத்த பாண்டிய மன்னனை, ‘சித்திர …

சுவர் தோறும் ஓவியங்கள் Read More »

ஆங்கிலத்தில் குறுங்கதைகள்

பிரண்ட்லைன் இதழில் எனது கர்னலின் நாற்காலி தொகுப்பிலிருந்து இரண்டு குறுங்கதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்தக் கதைகளை மொழியாக்கம் செய்திருப்பவர் மாலினி சேஷாத்ரி. மினி கிருஷ்ணன் இதைத் தேர்வு செய்து அறிமுகம் செய்திருக்கிறார்.    Thanks Frontline Mini Krishnan Malini Seshadri ••

இந்தியன் குக்

புதிய சிறுகதை அந்த வனவிடுதியில் கிளாவெல்லைத் தவிர வேறு எவரும் தங்கியிருக்கவில்லை அது விருந்தினர்களுக்கான விடுதி என்ற போதும் வால்டர் கிளாவெல் வனத்துறை அதிகாரியாக வந்தபிறகு அதைத் தன்வசமாக்கி வைத்துக் கொண்டான். வேட்டைக்கு வரும் ஜமீன்களுக்குக் கூட அந்த விடுதியில் தங்க இடம் கிடைப்பதில்லை. இங்கிலாந்திலிருந்து 1845ல் இந்தியாவிற்கு வந்த வால்டர் கிளாவெல் வன அதிகாரியாக அஸ்ஸாமில் தான் பணியில் அமர்த்தப்பட்டான். ஏழு வருஷஙகள் அங்கே பணியாற்றியபிறகே தென்வனம் எனப்படும் அந்தக் காட்டினை நிர்வாகம் செய்ய அனுப்பி …

இந்தியன் குக் Read More »

கறுப்பு ரத்தம்

புதிய சிறுகதை நர்மதா லிப்டை விட்டு வெளியே வந்தபோது இரண்டு கார்களுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அந்தக் கிழவர் தன் பேத்தியுடன் நிற்பதைக் காணமுடிந்தது. மூன்று நாட்கள் முன்பாக அந்தக் கிழவர் அவள் வேலை செய்யும் சேனலிற்கு வந்து தன்னுடைய பேத்தியின் கல்லூரிப் படிப்பிற்குத் தேவையான பண உதவி வேண்டி டிவி செய்தியில் ஒளிபரப்பும்படி கேட்டார். அப்படிச் செய்யமுடியாது என அவர்கள் மறுத்துப் பேசியதை அவர் கேட்டுக்கொள்ளவேயில்லை. கிழவருக்கு எழுபது வயதிருக்கும். தோளைவிட இறங்கிய கைகள் கொண்ட …

கறுப்பு ரத்தம் Read More »

காற்றில் பறக்கும் மலர்

புதிய சிறுகதை கரணின் டீசர்டை அபர்ணா துவைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இப்படிக் காலை ஐந்து மணிக்கு பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து அவனது டீசர்டை ஏன் துவைத்துக் கொண்டிருக்கிறாள் என வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்கதவு பாதித் திறந்திருந்தது. வாழைமரத்தில் அசைவில்லை. அதன் விநோதநிழல் சரிந்து விழுந்த, மஞ்சள் வெளிச்சத்தில் இப்படி அபர்ணாவைப் பார்க்க கலக்கமாகவே இருந்தது. கலைந்த கூந்தலுடன் சேலையை இடுப்பில் தூக்கி சொருகியபடியே அவள் துணியினைக் கசக்கிக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த பிளாஸ்டிக் வாளியில் சோப் …

காற்றில் பறக்கும் மலர் Read More »

கிணற்றின் வயது

புதிய சிறுகதை அவர்கள் மூன்று பேர் வந்திருந்தார்கள். மூவரில் உயரமாக இருந்தவருக்கு வயது எழுபதிற்கும் மேலிருக்கும். ஈட்டி போன்ற உறுதியான உடற்கட்டு கொண்டிருந்தார். தோளில் ஒரு துண்டு. அழுக்கடைந்த வேஷ்டி. உடன் வந்திருந்த இரண்டு பேரும் இளைஞர்கள். பெரியவர் கையில் ஒரு மஞ்சள் பையிருந்தது. அதில் ஏதோ ஒரு பொருளைச் சுற்றி வைத்திருந்தார். வீட்டின் பின்புறமிருந்த கிணற்றடிக்கு அவர்கள் போய் நின்றபோது விசாலாட்சி பூக் கட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எழுபது வயது நடந்து கொண்டிருந்தது. தலையில் ஒரு …

கிணற்றின் வயது Read More »

நிழல் கலைஞன்

புதிய சிறுகதை “பிகாசோ வெளியே வாருங்கள்“ என்று சப்தமாக அழைத்தாள் ஜாக்குலின் அவர் குளிப்பதற்காக வெற்றுடம்புடன் அரைக்கால் டிராயர் மட்டும் அணிந்தபடியே நின்றிருந்தார். அவரது காலை நேரம் மிகத் தாமதமாகவே துவங்குவது வழக்கம். பல நாட்கள் இரவில் நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு மிதமிஞ்சிய போதையில் வீடு திரும்புவதற்குப் பின்னிரவாகிவிடும். சில இரவுகளில் அவர் கடற்கரைக்குச் சென்று தனியே நடப்பதும் உண்டு. விருந்தில் வெளிப்படும் பகட்டும் போலியான உரையாடல்களும் அவரைச் சலிப்படையச் செய்திருந்தன. மனிதர்களின் பொய்யான …

நிழல் கலைஞன் Read More »

நானுமொரு திராட்சை

கீறல் பிரதிகளின் தனிமை என்ற கவினின் கவிதைத் தொகுப்பு சமீபமாக வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் படித்து வியந்து அவரைப் பாராட்டுவதற்காகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் கவினின் இரண்டாவது கவிதை தொகுதி இது என்றார். பாஷோ என்ற கவிதை இதழ் ஒன்றினையும் கொண்டுவந்திருக்கிறார். அவற்றை நான் பார்த்திருக்கிறேன். கீறல் பிரதிகளின் தனிமையில் கவிஞர் தேவதச்சனின் பாதிப்பு நிறையவே இருக்கிறது என்றாலும் அசலான தருணங்களை, தனித்துவமான கவிமொழியில் கவின் எழுதியிருக்கிறார். அது பாராட்டிற்குரியது. வடிவ …

நானுமொரு திராட்சை Read More »