பிரபஞ்சனின் நினைவு
இந்தப் புத்தகக் கண்காட்சி துவங்கிய நாளில் இருந்தே பிரபஞ்சனைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் இல்லாத வெறுமை மனதைப் பெருந்துயரம் கொள்ளச் செய்கிறது. எத்தனை அன்பான மனிதர். அவரோடு புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன அவரைப் பற்றி முன்பு எழுதிய கட்டுரையினை நேற்று திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன். மனதில் அவர் இல்லாத வலி மேலும் அதிகமாகியது •• பிரபஞ்சனின் இணையற்ற தோழமை என்ற எனது கட்டுரையின் ஒரு பகுதி : பிரபஞ்சன் என்றால் மனதில் …









