admin

மகா பிரஜாபதி

. தேரி கதா எனப்படும் பௌத்த பெண் துறவிகளின் பாடல்களைக் கொண்ட தொகுப்பினை வாசித்தேன். புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டுப் புத்தர் மறைவுக்குப்பின் 1905 இல் திருமதி ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்தத் தொகுப்பில் புத்தரின் தாயான மகா பிரஜாபதி கௌதமியின் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. இவரே புத்தரை வளர்த்தவர். இவர் புத்தரின் தாயான மாயாவின் தங்கை. புத்தர் பிறந்த ஏழாம் நாளில் அவரது தாய் இறந்துவிடவே பிரஜாபதியே அவரை …

மகா பிரஜாபதி Read More »

அன்பான நன்றி

புத்தகக் கண்காட்சி நேற்றோடு நிறைவு பெற்றது. இந்த 14 நாட்களில் எத்தனையோ விதமான வாசகர்களைச் சந்தித்தேன். உரையாடினேன். கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். ஆசையாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஒரு எழுத்தாளன் மீது வாசகர்கள் காட்டும் அன்பை முழுமையாக உணரக்கூடிய தருணமிது. காலை 11 மணிக்கு தேசாந்திரி அரங்கிற்கு வந்து மாலை ஐந்துமணிக்கு நான் வரும் வரை காத்திருந்த வாசகருக்கு எப்படி நன்றியை வெறும் வார்த்தைகளால் சொல்வது. என்னிடம் ஒரு கையெழுத்து வாங்குவதற்காக மட்டுமே பெங்களூரில் இருந்து பயணம் …

அன்பான நன்றி Read More »

உலகமே வீடு

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ள Nomadland திரைப்படத்தைப் பார்த்தேன் இந்தப் படம் சென்ற ஆண்டு வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த படமாக விருது பெற்றுள்ளது. இந்த ஆண்டுக் கோல்டன் க்ளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஆஸ்கார் பரிசும் இந்தப் படத்திற்கு நிச்சயம் கிடைக்கக்கூடும். கடந்த இரண்டு வாரங்களாக ஆஸ்கார் போட்டிக்கான படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதில் இதுவே மிகச்சிறந்த படம். சீன இயக்குநரான Chloé Zhao இதுவரை இரண்டே படங்களை இயக்கியுள்ளார். அவரது …

உலகமே வீடு Read More »

புத்தகக் காட்சி தினங்கள்- 5

கடந்த இரண்டு நாட்களாகப் புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம். நேற்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் திரண்டிருந்தார்கள். அரங்கினுள் வெக்கை தாங்கமுடியவில்லை. வியர்த்து வழிய மக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். இத்தனை ஆயிரம் வாசகர்கள் ஒன்று சேர்ந்து பதிப்புத் துறைக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இனி மற்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சி சிறப்பாகத் தொடரும். ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் சங்க இலக்கியம் குறித்து ஆற்றிவரும் உரைகளின் முதற்பத்து உரைகளின் நூல் வடிவினை நேற்று வெளியிட்டேன். சங்கச்சுரங்கம் என்ற …

புத்தகக் காட்சி தினங்கள்- 5 Read More »

இரண்டு இளம் படைப்பாளிகள்

காளி பிரசாத்: ஆள்தலும் அளத்தலும் மராத்திய எழுத்தாளர் விலாஸ் சாரங் எழுதிய தம்மம் தந்தவன் நாவலை மொழியாக்கம் செய்த எழுத்தாளர் காளிபிரசாத் ஆள்தலும் அளத்தலும் என்ற தனது முதல் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். பதாகை மற்றும் யாவரும் வெளியீடாக வந்துள்ளது. இவரது கதைகளை முன்னதாகச் சொல்வனம் மற்றும் பதாகை இதழில் வாசித்திருக்கிறேன். இந்தத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளை நேற்று படித்தேன். தினசரி வாழ்வின் நுண்தருணங்களைக் கதைகளாக எழுதுகிறார். சரளமான எழுத்து நடை. பழனி கதையில் வரும் கதாபாத்திரச் …

இரண்டு இளம் படைப்பாளிகள் Read More »

சர்வோத்தமன் சடகோபன்

தஸ்தாயெவ்ஸ்கியினைப் பற்றி மிகச்சிறப்பான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் சர்வோத்தமன் சடகோபன். இவரது பார்வையும் புரிதலும் அற்புதமானது. ஆங்கிலத்தில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும். பெங்களூரில் பணியாற்றிவரும் சர்வோத்தமன் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகச் சாலை என்ற வலைப்பக்கம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். http://sarwothaman.blogspot.com/ தற்போது முறையிட ஒரு கடவுள் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. மணல்வீடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு …

சர்வோத்தமன் சடகோபன் Read More »

எனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்

காந்தி பற்றி தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான நூல்களைத் தொகுத்திருக்கிறேன். நேரடியாக தமிழில் எழுதப்பட்ட காந்திய நூல்களைத் தனியே பதிவிட இருக்கிறேன். இதில் பெரும்பான்மை மொழியாக்க நூல்களே. 1) காந்தி வாழ்க்கை லூயி ஃபிஷர் தமிழில் : தி.ஜ.ர. பழனியப்பா பிரதர்ஸ் பத்திரிக்கையாளரான லூயி ஃபிஷர் காந்தியோடு நேரில் பழகியவர். காந்தியின் வரலாற்றை லூயி ஃபிஷர் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டே காந்தி திரைப்படம் உருவாக்கப்பட்டது 2)மகாத்மா காந்தியின் ஐந்து விநாடிகள் வால்டெர் ஏரிஷ் ஷேபெர் …

எனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள் Read More »

இரண்டு குறுங்கதை தொகுப்புகள்

. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக குறுங்கதைகள் எழுதிவருகிறேன். எனது தாவரங்களின் உரையாடல் தொகுப்பிலே எட்டு குறுங்கதைகள் இடம்பெற்றுள்ளன. அதிலுள்ள பாதம் என்ற குறுங்கதை தற்போது ஆறாம்வகுப்பிற்கான பாடமாக வைக்கபட்டுள்ளது. நகுலன் வீட்டில் யாருமில்லை எனும் குறுங்கதைகளின் தொகுப்பினை 2009ல் வெளியிட்டேன். இந்தத் தொகுப்பில் ஐம்பது கதைகள் இடம்பெற்றிருந்தன. இப்படிக் குறுங்கதைகளை மட்டுமே கொண்ட ஒரு தொகுப்பு அதன் முன்பு எவராலும் வெளியிடப்பட்டதில்லை. அந்த நூல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது அதன் ஐந்தாவது பதிப்பைத் தேசாந்திரி …

இரண்டு குறுங்கதை தொகுப்புகள் Read More »

தீவிற்கு வரும் பறவை

புத்தக வாசிப்பாளர்களையும் இலக்கிய ஈடுபாட்டினையும் கொண்டாடும் திரைப்படங்கள் உலகெங்கும் வெளியாகியுள்ளன. ஹாலிவுட்டில் ஆண்டிற்கு ஒரு படம் இந்த வகைமையில் உருவாக்கபட்டு வெற்றியடைகிறது. இரண்டாயிர வருடப்பழமையான தமிழ் இலக்கியத்தில் அதன் முக்கிய நாவல்கள் காப்பியங்கள் இன்றும் திரைப்படமாக்கபடவில்லை. இந்த இலக்கியங்களைக் கொண்டாடுவதை வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்கள் பற்றியோ, இலக்கிய அமைப்புகள் பற்றியோ எவ்விதமான ஆவணப்பதிவுகளும் கிடையாது இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வுப்பணிக்காகத் தமிழகத்திலுள்ள இலக்கிய அமைப்புகளைத் தொகுக்க முற்பட்டேன். தொல்காப்பியம் திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற …

தீவிற்கு வரும் பறவை Read More »

இந்தியக் கலைகள்

இந்தியக் கலைகள், நாடகம். நிகழ்த்துக் கலைகள், வரலாறு, அகழ்வாய்வு, இயற்கை வரலாறு, கட்டிடக்கலை, பண்பாடு குறித்த முக்கியக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் Marg இதழை நீண்டகாலமாகவே வாங்கி வாசித்து வருகிறேன். இது காலாண்டு இதழாக வெளிவருகிறது. ஒரு இதழின் விலை ரூ250. அழகான வண்ணப்படங்களுடன் சிறந்த கட்டுரைகளுடன் இதழ் வெளியாகிறது. மின்னிதழாகவும் இதை வாசிக்க இயலும். எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த் 1946 ஆம் ஆண்டில் மார்க் பவுண்டேஷனை உருவாக்கினார். இந்தியக் கலைகள் குறித்த ஆய்வுமையமாக இது உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனமே மார்க் இதழை வெளியிடுகிறது. ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட மையப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. …

இந்தியக் கலைகள் Read More »