admin

கைகளின் மாயம்

Glass 1958ம் ஆண்டு வெளியான டச்சு ஆவணப்படமாகும். இயக்குநரும் தயாரிப்பாளருமான பெர்ட் ஹான்ஸ்ட்ராவின் இந்தப் படம் 1959 இல் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் சினிமா பயிலரங்குகளில் தவறாமல் இப்படம் இடம்பெறுகிறது. இதை ஒரு பாடமாகவே மாணவர்கள் பயிலுகிறார்கள். 60 ஆண்டுகளைக் கடந்த போதும் இந்தப் படத்தின் தனித்துவமும் ஈர்ப்பும் மறையவேயில்லை. நெதர்லாந்தில் உள்ள கண்ணாடித் தொழிற்சாலையினைப் படமாக்கியிருக்கிறார்கள். கண்ணாடிப் பாட்டில்களை எப்படிக் கையால் தயாரிக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. படத்தின் தனித்துவம் …

கைகளின் மாயம் Read More »

வாக்கியங்களின் சாலை

– வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை        உலக மொழிகளுள் எழுதப்பட்ட எந்த வகையான இலக்கியமானாலும் அது மனிதனின் அகமனவோட்டத்தை நிச்சயமாகக் காட்சிப்படுத்தத்தான் செய்யும். அந்த இலக்கியத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் அந்த மனவோட்டங்களுள் ஏதாவது ஒன்றைத் தன் வாழ்வில் தனக்கு நிகழ்ந்த அனுபவத்தோடு பொருத்திப் பார்ப்பார். அப்போது அந்த இலக்கியப் படைப்பு அவருக்கு நெருக்கமானதாக அமைந்துவிடும். சில வாசகருக்குத் தன்னனுபவத்தோடு இலக்கியம் முன்வைக்கும் மனவோட்டத்தைப் பொருத்திப் பார்ப்பதில் பயிற்சி இருக்காது. அந்தப் பயிற்சியை அளிக்கும் …

வாக்கியங்களின் சாலை Read More »

தெலுங்கில்

 ” எம்பாவாய்”  என்ற எனது சிறுகதையின் தெலுங்கு மொழியாக்கம் “neccheli.com என்ற மின் இதழில் வெளியாகி இருக்கிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபானந்தன். அவருக்கு எனது மனம் நிரம்பிய நன்றி இணைப்பு

சென்னையும் நானும் -2

சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் பகுதி ஏப்ரல் 16 முதல் துவங்குகிறது. வாரம் வெள்ளிதோறும் இந்தக் காணொளித் தொடர் வெளியாகும். தேசாந்திரி யூடியூப் பக்கத்தில் இதனைக் காணலாம்

அன்பு மொழி

நேற்று எனது பிறந்த நாள். இந்நாளில் எனக்குத் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் முகநூலிலும் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள். அன்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் குடும்பத்தில் ஒருவரது பிறந்த நாளைக் கொண்டாடுவது போல வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உங்கள் நேசமும் வாழ்த்துக்களும் தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றன. இத்தனை நல்ல உள்ளங்களின் அன்பைப் பெற்றிருக்கிறேன் என்பது எனது பேறு. அயல்நாட்டிலிருந்து மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அழைத்துப் பேசி வாழ்த்து …

அன்பு மொழி Read More »

கலையில் கண்கள்

இந்திய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் கண்ணை வடிவமைப்பது முக்கியமானது. இந்தியக் கலைஞர்கள் கண்ணின் வழியே உணர்ச்சிகளை மிகத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார்கள். இந்திய இலக்கியத்தில் கண்களைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள் ஏராளம். கண்களே உணர்ச்சிகளின் ஜன்னலாக இருக்கிறது. இந்திய ஓவியர்கள் கண்களை எப்படி வரைந்தார்கள். எத்தனை விதமான வடிவங்களில் கண்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. கடவுளின் கண் எப்படியிருக்க வேண்டும் என்பது போல இந்தியக் கலையுலகில் கண்ணின் முக்கியத்துவத்தை விவரிக்கும் “The Eye In Art” என்ற புத்தகத்தைப் பப்ளிகேஷன் டிவிசன் வெளியிட்டிருக்கிறது. …

கலையில் கண்கள் Read More »

மன்னரின் மூக்குக் கண்ணாடி

The Last Emperor படத்தில் சீனாவின் கடைசி அரசர், புய் ஒரு அரசியல் கைதியாகவும், போர்க்குற்றவாளியாகவும் இருக்கிறார். அங்கே அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் மரியாதை செய்கிறார்கள். அது அவரை அதிகக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது. வீழ்ச்சியின் போது ஒரு மனிதன் தனது பழைய மரியாதையைப் பெறுவதை விலக்கவே முற்படுகிறான். ஆனால் அவனது வீழ்ச்சி தற்காலிகமானது என்பது போலவே மக்கள் பழைய மரியாதையை அளிக்க முற்படுகிறார்கள். படம் புய்  தற்கொலை செய்ய முயல்வதிலிருந்து துவங்குகிறது. மன்னர்களில் தற்கொலை …

மன்னரின் மூக்குக் கண்ணாடி Read More »

இரண்டும் கப்பல் தான்.

புதிய சிறுகதை சூயஸ் கால்வாயைத் தடுத்து நின்றிருந்த அந்தக் கப்பல் பிடிபட்ட திமிங்கலம் ஒன்றைப் போலிருந்தது தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்தபடியே திரையில் தெரியும் அந்தக் கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபால் ரத்னம். மணி மூன்றைக் கடந்திருந்தது. பின்னிரவில் பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எதற்காக இப்படிச் சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டிருந்த கப்பலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவருக்கே புரியவில்லை. ஆனால் அந்தக் கப்பல் அவரைச் சில நாட்களாகத் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. அதை எப்போது மீட்பார்கள். …

இரண்டும் கப்பல் தான். Read More »

கௌரிசங்கரின் கனவு

நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழா இந்த வருடம் ஏப்ரலில் துவங்குகிறது. இதற்காகச் சென்றவாரம் கோவில்பட்டி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். சொந்தவேலையின் காரணமாக அதில் கலந்து கொள்ள இயலவில்லை ஆனால் 25ஆண்டுகளுக்கு முன்பாகக் கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு ஒரு விழா நடைபெற்றது. அது எழுத்தாளர் கௌரிசங்கர் இயக்கிய காருகுறிச்சியார் பற்றிய ஆவணப்படத்தின் திரையிடல். அதில் நான் கலந்து கொண்டு …

கௌரிசங்கரின் கனவு Read More »