admin

சிந்துபாத்தின் மனைவி

நாளை டிசம்பர் 13 ஞாயிறு மாலை தியேட்டர் லேப் அரங்கில் எனது சிந்துபாத்தின் மனைவி நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. இதனை ஜெயராவ் இயக்கியுள்ளார்.அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.முகவரிதியேட்டர் லேப்No 6 Mahaveer Complex, Munusamy Salai, K K Nagar West, Chennai – 600078,(Near Discovery book palace)Ph : 097888 58881

நூலக மனிதர்கள். 28 சாட்சியாய் ஒரு புகைப்படம்.

மனோகர் அந்த முறை ஒரு ஒவியரை நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வழக்கம் போலவே நூலகரிடம் சென்று ரெபரென்ஸ் பகுதியிலுள்ள மாவட்ட சுதந்திரப் போராட்ட மலரைக் காண வேண்டும் என்று கேட்டார். மனோகர் எப்போது நூலகத்திற்கு வந்தாலும் அந்த மலரைக் கேட்டு வாங்கிப் பார்ப்பது வழக்கம். சில நேரம் உறவினர்கள் சிலரை அழைத்து வந்தும் அந்த மலரைக் காட்டியிருக்கிறார். அந்த மலரில் அவரது தாத்தா கிருஷ்ணப்பாவின் புகைப்படம் ஒன்றிருக்கிறது. அதுவும் ஊர்வலம் ஒன்றில் கொடியை ஏந்தியபடி முன்னால் …

நூலக மனிதர்கள். 28 சாட்சியாய் ஒரு புகைப்படம். Read More »

கடலின் காட்சிகள்

யாழினி ஆறுமுகம்•• தங்களது சிறுகதைகள் தொகுப்பான “அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது” தற்போது தான் படித்தேன்.ஒவ்வொரு கதையும் அருமை. வரலாற்றையும், நினைவுகளையும், நடப்பு உலகையும் தனது அடித்தளமாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன என்று கூறியுள்ளீர்கள். ஆனால் உருவாக்கியுள்ளீர்கள் என்று தான் கூறுவேன். கிரேக்கத்து முயல் கதை மிகவும் அருமை. பின்னிரவுத் திருடன், பெரிய வார்த்தை, இருபது வயதின் அவமானங்கள், வயதின் கனவுகள் கதைகள் எல்லாம் மனதின் சிக்கல்களை மிக நுட்பமாக போகிற போக்கில் கதை மாந்தர்கள் சொல்லிக் கொண்டே போகிறார்கள். …

கடலின் காட்சிகள் Read More »

உறவின் மதிப்பு.

ஃபின்னிஷ் இயக்குனர் கிளாஸ் ஹாரோ இயக்கிய திரைப்படம் ONE LAST DEAL. கலைப்பொருட்களை விற்பனை செய்யும் ஒலாவி முதுமை மற்றும் வணிக நெருக்கடிகள் காரணமாக ஓய்வு பெற முயல்கிறார். குடும்பத்தை விடவும் அவருக்குக் கலைப்பொருட்கள் விற்பனை மீதே நாட்டம் அதிகம். ஆகவே கேலரியில் தனியே வசிக்கிறார். கலைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் தான் அவரது நண்பர்கள். கலையின் மீதான ரசனை மற்றும் விற்பனை முறைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் அவரைப் போன்ற தீவிர கலை ஆர்வலர்களால் ஏற்றுக் கொள்ள …

உறவின் மதிப்பு. Read More »

புதிய புத்தகங்கள் 6 நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

சிறார்களுக்காக எழுதப்பட்ட கதை. அரசுப் பள்ளி ஒன்று மாணவர்களுக்காக பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்க முயற்சிக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள், வேடிக்கையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. ஓவியர் ராஜன் படங்கள் வரைந்திருக்கிறார். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள் 5 அவளது வீடு

தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள் 3 அரூபத்தின் நடனம்

கடந்த ஓராண்டிற்குள் நான் பார்த்த அயல்மொழி திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாளர்கள், ஓவியர்கள் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள் 2 வெண்ணிற நினைவுகள்

இந்து தமிழ் நாளிதழில் வெளியான தமிழ் சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கப்பல் ஒட்டிய தமிழன், உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், வீடு போன்ற படங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள் 1 : கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்

ஹெர்மன் மெல்வில், கோ யுன், மோ யான், ஸ்டீன்பெக்,லேர்மன்தேவ், கொரலன்கோ,.பால்சாக், பாஷோ, ஓனோ நோ கோமாச்சி, ஜேவியர் மரியாஸ் என உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கியப் படைப்பு குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது