நூலக மனிதர்கள். 27 பெயரெனும் கண்ணாடி.
நூலகத்திற்கு வரும் அனைவரும் புத்தகம் படிப்பதற்கென்று மட்டும் வருவதில்லை. சிலர் விநோத காரணங்களுக்காகவும் நூலகத்திற்கு வருகிறார்கள். தேடுகிறார்கள். தான் பிறந்த வருஷத்தில் வெளியான புத்தகங்களைத் தேடிப் படிப்பதில் ஒருவருக்கு ஆர்வம் அதிகம். நூலில் எந்த ஆண்டு வெளியானது என்று தான் முதலில் பார்ப்பார். இன்னொருவருக்கோ நாவல்களில், கதைகளில் வருகிறவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள். எந்த ஊரில் வசிக்கிறார்கள் என்பது முக்கியம். வேறு ஒருவருக்கு இதுவரை யாரும் எடுத்துப் போகாத புத்தகத்தை மட்டுமே தேடி எடுத்துப் படிப்பது வழக்கம். இதற்கு …









