பறவை
பதாகை இணைய இதழில் வெளியாகியுள்ள ஸ்ரீதர் நாராயணன் கவிதை மிகச்சிறப்பாகவுள்ளது. காத்திருப்பின் தருணத்தில் தான் எத்தனை சாத்தியங்கள். ஜென் கவிதைகளில் செயல்படுவது போல ஒரு புள்ளியை முதன்மைப்படுத்தி கவிதை விரிகிறது. பறவையின் சிறகசைப்பை போல கவிதையும் படபடத்து எழுகிறது. வாழ்த்துகள் ஸ்ரீதர் நாராயணன். •• பறவை – ஸ்ரீதர் நாராயணன் * இறக்கைகளை பறத்திக் கொண்டு விரிந்த நிலப்பரப்பில் நின்றிருக்கிறது சாம்பல் வண்ண பறவை ஒன்று தன் நிழலைப் பார்த்தபடி. பருவமாற்றத்தின் படிநிலையைக் காட்ட வலசை போகலாம். …