admin

குறுங்கதை 112 சொற்கள் இல்லாத புத்தகம்

சொற்கள் இல்லாத புத்தகம் ஒன்றை மியோ பௌத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அது அபூர்வமான புத்தகம். வெளியாட்கள் யாரும் அதைக் கண்டதில்லை என்று பத்திரிக்கையாளர் ஜேசன் மார்க் கேள்விபட்டதில் இருந்து அந்தப் புத்தகத்தை காண வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தான். நேபாளத்திலிருந்த மியோ மடாலயத்தில் வெளிநாட்டவர் எவரையும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த மடாலயத்தின் கதவுகள் ஆண்டுக்கு ஒரு முறை தான் திறக்கபடும். அன்று உள்ளுர்  பொதுமக்கள் வருகை தருவார்கள். மற்ற நாட்களில் புத்த துறவிகள் …

குறுங்கதை 112 சொற்கள் இல்லாத புத்தகம் Read More »

தேசமெனும் குடும்பம்

சிங்கப்பூரின் வரலாற்றை மையமாகக் கொண்ட உருவாக்கபட்ட  Long Long Time Ago என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். Jack Neo இயக்கிய இந்தப் படம் இரண்டு பகுதிகளாக உருவாக்கபட்டுள்ளது. 2016ல் வெளியான இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டுள்ளது. சீனக்குடும்பம் ஒன்றின் கதையைப் படம் விவரிக்கிறது. அந்தக் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளின வழியே தேசத்தின் முக்கிய நிகழ்வுகளை அடையாளப்படுத்துகிறார்கள். 1965ம் ஆண்டு ஜாவ் டி (Zhao di) என்ற கர்ப்பிணிப் பெண்  கணவரின் மூத்தமனைவியால்  துரத்தப்படவே …

தேசமெனும் குடும்பம் Read More »

ஒளி உண்டானது.

The current war  என்ற ஹாலிவுட் திரைப்படத்தை பார்த்தேன். மின்சாரம் கண்டுபிடிக்கபட்ட காலத்தில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும், தொழிலதிபரான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் என்பவருக்கும் இடையில் நடந்த போட்டி மற்றும் பிரச்சனைகளை முன்வைத்து அமெரிக்கா எவ்வாறு மின்சார மயமாக்கப்பட்டது என்ற வரலாற்றை விவரிக்கிறது இந்தத் திரைப்படம் தனது கண்டுபிடிப்புகளின் உரிமைக்காக எடிசன் பல்வேறு முறை நீதிமன்றம் சென்று முறையிட்டு வென்றிருக்கிறார். 1093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமையை எடிசன் பெற்றிருந்தார். ஆனாலும் எடிசனின் கண்டுபிடிப்புகளில் எல்லாமும் வெற்றிபெறவில்லை. மின்சார பல்ப், போனோகிராப், …

ஒளி உண்டானது. Read More »

குறுங்கதை 111 ஒற்றைக்கை

முதற்பொய் சொன்ன போது பரமுவின் வயது ஆறு. அப்பா அவனைக் கடைக்குப் போய் தீப்பெட்டி ஒன்று வாங்கி வரச் சொல்லியிருந்தார். ஆனால் அவன் கடைக்குப் போகவில்லை. மாறாக அந்த நாலணாவை கொடுத்துப் பால் ஐஸ் வாங்கிச் சாப்பிட்டு விட்டான். வீட்டிற்கு வெறும் கையோடு வந்த போது அப்பா கோவித்துக் கொண்டார். ஒற்றைக்கையுள்ள பிச்சைக்காரன் ஒருவன் தன்னிடமிருந்த காசை பறித்துக் கொண்டான் என்று முதற்பொய்யைச் சொன்னான் பரமு. அப்பா அதை நம்பிவிட்டார். வேறு எதையும் கேட்கவில்லை. இவ்வளவு எளிதானதா …

குறுங்கதை 111 ஒற்றைக்கை Read More »

கவிதையெனும் மாற்றுவழி.

செஸ்லாவ் மிலாஸ் (Czeslaw Milosz) தொகுத்த உலகக் கவிதைகளின் தொகுப்பான A Book of luminous Things மிகச்சிறந்த புத்தகம். சர்வதேசக் கவிதைகளில் மிகச்சிறப்பானவற்றை தேர்வு செய்து தொகுத்திருக்கிறார். மிலாஸ் நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் நிகரற்ற கவியாக கருதப்படுகிறவர் அவரது கவிதைத் தேர்வும் அதை வகைப்படுத்திய முறையும் இடம்பெற்றுள்ள கவிதைகளும் தனித்துவமானவை. இதுவரை தொகுக்கப்பட்டுள்ள சர்வதேச கவிதைத் தொகுப்புகளில் இது தனித்துக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.. பொதுவாக சர்வதேசக் கவிதைகளின் தொகுப்புகளைத் …

கவிதையெனும் மாற்றுவழி. Read More »

குறுங்கதை 110 நின்றபடி உறங்குபவர்

தங்கதுரைக்கு அப்படி ஒரு பழக்கம் எப்படி உருவானது என்று தெரியவில்லை. ஆனால் அவர் வீட்டில் நின்றபடியே உறங்கும் பழக்கம் கொண்டிருந்தார். ஒரு மனிதரால் எப்படி நின்றபடி உறங்க முடியும் என வியப்பாக இருக்கும். ஆனால் தங்கதுரை நின்றபடியே தான் உறங்கினார். ஆழ்ந்த தூக்கத்தில் கிழே விழுந்துவிடுவார் என்று தங்கதுரையின் மனைவி பயந்திருக்கிறாள். ஆனால் ஒரு நாள் கூட உறக்கத்தில் தடுமாறி விழவில்லை. தங்கதுரை ஏன் நின்றபடி உறங்குகிறார் என அவரிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதில் சொன்னதில்லை. …

குறுங்கதை 110 நின்றபடி உறங்குபவர் Read More »

புத்தகங்களே உலகம்

ஆங்கில எழுத்தாளர் ஜுலியன் பார்ன்ஸ்  A Life with Books என்ற தனது கட்டுரை ஒன்றில் முதன்முதலாகத் தான் ஒரு புத்தகக் கடைக்குச் சென்ற அனுபவத்தை  எழுதியிருக்கிறார். பார்ன்ஸின் தாய், தந்தை இருவரும் ஆசிரியர்கள். ஆகவே அவர்கள் வாங்கிச் சேகரித்த புத்தகங்கள் அவரது வீட்டிலே சிறிய நூலகமாக இருந்தது. அம்மா வழி தாத்தா பாட்டியும் ஆசிரியர்கள் என்பதால் அவர்கள் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களும் நிறைய இருந்தன. தொலைக்காட்சி அறிமுகம் ஆகாத காலம் என்பதால் படிப்பதற்கு நிறைய நேரம் …

புத்தகங்களே உலகம் Read More »

டர்னரின் கடற்காட்சிகள்.

Mr Turner  என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். பிரிட்டீஷ் ஒவியரான வில்லியம் டர்னர் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட படமிது. 2014ல் வெளியான திரைப்படத்தை Mike Leigh  இயக்கியிருக்கிறார். இப்படம் டர்னரின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை மட்டுமே முதன்மைப்படுத்துகிறது. குறிப்பாக அவரது கடைசி நாட்களை. டர்னரின் நிலக்காட்சி ஒவியங்கள் தனித்துவமானவை. குறிப்பாக கடல் சார்ந்த ஒவியங்கள் அவரது முத்திரை ஒவியங்களாகக் கருதப்படுகின்றன.  The Slave Ship  என்ற ஒவியத்தில் தான் எத்தனை நுட்பமான சித்தரிப்புகள்.  கடலின் சீற்றமும் …

டர்னரின் கடற்காட்சிகள். Read More »

நேர்காணல்.

மின்னம்பலம் இணைய இதழில் வெளியான நேர்காணல். •• மழைக்காலங்களின் காலை நேரங்கள் அலாதியானவை. அந்தக் கதகதப்பையும் விநோத மனநிலையையும் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், 80களில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர். இவரது முதல் கதை ‘பழைய தண்டவாளம்’ கணையாழியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, தீவிரமாக எழுதத் தொடங்கிய இவர், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், பயணம், உலக சினிமா குறித்த அறிமுகம், திரைக்கதை …

நேர்காணல். Read More »

பிரெஞ்சில்

நீரிலும் நடக்கலாம் என்ற எனது சிறுகதை பிரெஞ்சு மொழியில் வெளியாகியுள்ளது. வசுமதி பத்ரிநாத் மொழியாக்கம் செய்திருக்கிறார். கொரனா காலத்தின் நெருக்கடியை உணர்த்துவது போல சர்வதேச எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேர்வு செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் இந்தக் கதையும் இடம்பெற்றுள்ளது. சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ள வசுமதி பத்ரிநாத் அவர்களுக்கு மனம் நிரம்பிய நன்றி ••