admin

தேசாந்திரி பதிப்பக அரங்கு

சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது அரங்கு எண் 472 & 473 தினமும் மாலை 4.30 மணி முதல் 8 வரை தேசாந்திரி அரங்கில் இருப்பேன். விருப்பமான வாசகர்கள் சந்திக்கலாம்

துஞ்சன் இலக்கிய விழா

கேரளாவில் நடைபெற்ற துஞ்சன் இலக்கிய விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றினேன். பிரம்மாண்ட அரங்கு. திரளான மக்கள் கூட்டம். எழுத்தச்சனின் புகழ்பாடும் நிகழ்வுகள். நிறைய எழுத்தாளர்களும் கலைஞர்களும் வந்திருந்தார்கள். மறைந்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நினைவாக திறந்த வெளி அரங்கம் அமைக்கபட்டிருந்தது. எம்.டி. வாசுதேவன் நாயரின் வாழ்க்கை வரலாறு விரிவான நூலாக வெளியாகியுள்ளது. புத்தகத் திருவிழாவில் அந்த நூலை எழுத்தாளர் ஸ்ரீகுமாரிடமிருந்து நான் பெற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளித்தது. நானும் எனது மனைவியும் மூன்று நாட்கள் டாக்டர் ரகுராம் வீட்டில் …

துஞ்சன் இலக்கிய விழா Read More »

ஐந்தாவது எம்.ஏ.

புதிய சிறுகதை. டிசம்பர் 30 அம்மா சமையலறையின் விளக்கை போட்டிருந்தார். அது ஹாலில் படுத்திருந்த வள்ளியின் கண்களைக் கூசியது. கலைந்த உறக்கத்தினுடாக அவள் போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டாள். மணி நாலாக இருக்ககூடும். அலாரம் வைக்காமலே அம்மா தினமும் நான்குமணிக்கு எழுந்து கொள்கிறாள். சமையலறையினுள் கிரைண்டரை ஒட்டிய சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடியே தனது பாடங்களைப் படிக்க ஆரம்பிப்பாள். உதடு அசையாமல் கண்கள் வரிகளைக் கடந்து செல்லும். ஊசியால் எம்பிராய்டரி வேலை செய்வது போலப் பாடங்களை மனதில் …

ஐந்தாவது எம்.ஏ. Read More »

துஞ்சன் இலக்கியவிழா

மலையாள மொழியின் தந்தையாகப் போற்றப்படும் துஞ்சத்து ராமானுசன் எழுத்தச்சனின் நினைவாக, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர், துஞ்சன் பறம்பில் ஆண்டுதோறும் துஞ்சன் இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது. இதில் கலைநிகழ்ச்சிகள். இலக்கிய அமர்வுகள். புத்தக வெளியீடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு நடைபெறும் துஞ்சன் இலக்கியவிழாவைத் துவக்கி வைக்க அழைக்கப்பட்டிருக்கிறேன். ஜனவரி 2 திரூரில் நடைபெறும் இலக்கிய விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறேன். இந்த இலக்கிய விழா ஜனவரி 6 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதில் மலையாளத்தின் …

துஞ்சன் இலக்கியவிழா Read More »

கெஞ்சிக் கதை / உலகின் முதல்நாவல் உரை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பானிய மொழியில் லேடி முரசாகி எழுதிய கெஞ்சிக் கதை நாவல் குறித்து சிறப்புரை ஆற்றினேன். 1300 பக்கங்களுக்கும் மேலான இந்த நாவலுக்கு மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. தமிழில் இந்த நாவலின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. அது முழுமையானதில்லை.

புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்

டிசம்பர் 25 மாலை எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய இளைஞர்கள். திருப்புகழ் ஐஏஎஸ் நூல்களை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்தினார். கவிஞர் ஷங்கர ராம சுப்ரமணியன் குற்றமுகங்கள் குறித்து செறிவான உரையை நிகழ்த்தினார். இந்த உரை அகல் இணைய தளத்தில் தனிக்கட்டுரையாக வெளியாகியுள்ளது நிலக்கோட்டை ஸ்ரீதர் எனது சிறுகதைகள் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. நிகழ்வில் ஆயிரம் ஆண்டுகளுக்கு …

புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள் Read More »

உலகின் முதல் நாவல்

டிசம்பர் 25 மாலை எனது புத்தக வெளியீட்டு விழாவில் உலகின் முதல் நாவல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறேன் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

டாலியின் அனிமேஷன்

1946-ல் வால்ட் டிஸ்னியுடன் இணைந்து ஓவியர் சால்வடார் டாலி ஒரு அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்க முயன்றார். ‘Destino’ என்ற அந்த அனிமேஷன் அவரது காலத்தில் முடிக்கபடவில்லை. 2003-ல் முடிக்கப்பட்ட இக் குறும்படம் டாலியின் வியப்பூட்டும் கற்பனையை அழகாக வெளிப்படுத்துகிறது. 1945 ஆம் ஆண்டு வார்னர் ஸ்டுடியோவின் உரிமையாளரான ஜாக் வார்னர் வீட்டில் நடந்த விருந்தில் டிஸ்னியும் டாலியும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது தனது சர்ரியல் ஓவியங்களைக் கொண்ட அனிமேஷன் ஒன்றை உருவாக்க விரும்புவதாக டாலி தெரிவித்தார். அதனை …

டாலியின் அனிமேஷன் Read More »

புத்தக வெளியீட்டு விழா / டிசம்பர் 25

எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்