குறுங்கதை 17 அந்தச் சிறுவன்
சக்கரவர்த்தியின் புதிய உடைகள் என்ற கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தினமும் புதுப்புது மோஸ்தரில் ஆடைகளை அணிய ஆசை கொண்ட அரசனுக்குப் பாடம் கற்பிக்க இரண்டு நெசவாளிகள் அரூப அடை நெய்து தருவதாக வாக்களித்தார்கள். அதன்படியே அவர்கள் நெய்து தந்த கண்ணுக்குப் புலப்படாத ஆடையை அணிந்து கொண்ட சக்கரவர்த்தி தெருவில் ஊர்வலம் வந்த போது ஊரே கண்ணுக்குப் புலப்படாத உடையைப் பாராட்டியது. ஆனால். ஒரு சிறுவன் மட்டும், “சக்கரவர்த்தி ஆடையே அணியவில்லை. அம்மணமாக இருக்கிறார்“ என்று உண்மையை உரத்துச் சொன்னான். …