குறுங்கதை 23 வீடென்பது
சந்தையில் திரியும் மனிதர்களைப் போலப் புதிய வீடுகள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கின்றன. புதிய வீடுகளுக்குத் தனது பெருமைகளை எவ்வளவு சொல்லியும் நிறைவு வருவதேயில்லை. ஒரு புது வீடு சொன்னது “வீடென்பது ஒரு மலர். அதன் வாசனை வசிப்பவர்களின் இயல்பாலே வெளிப்படுகிறது.“ கொஞ்சம் பழசாக ஆரம்பித்தவுடன் அவை தன்னைப் பிறர் கவனிப்பதில்லை என்று மெலிதாகப் புகார் சொல்ல ஆரம்பிக்கின்றன. இப்போதும் தான் அழகு தான் என்று சுயசமாதானம் செய்து கொள்கின்றன. நடுத்தர வயதுப் பெண் தனது திருமண ஆல்பத்தைப் புரட்டிப் பார்ப்பதைப் போல ஆதங்கத்துடன், வெட்கத்துடன் நினைவில் ஆழ்ந்து …