குறுங்கதை 28 மொசார்ட்டின் வயலின்
பனிப்பிரதேசமொன்றில் அந்த மேபிள் மரம் ஒற்றையாக நின்று கொண்டிருந்தது. “எனக்கென யாருமில்லை. நான் யாருக்கும் பிரயோசனமாகவும் இல்லை. வாழ்வதே வீண்“ என்று அந்த மரம் சொல்லிக் கொண்டிருந்தது காற்று அம் மரத்தைக் கடக்கும்போது சொன்னது “அப்படி நினைக்காதே. உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது“ இரவில் வான் நிறைந்த நட்சத்திரங்களைக் காணும் போது மேபிள் மரம் சொன்னது. “இத்தனை அழகை நான் கண்ட போதும் அதைப் பகிர்ந்து கொள்ள ஒருவருமில்லை.“ அப்போதும் காற்றுச் சொன்னது. “அப்படி நினைக்காதே. உன் வாழ்க்கைக்கு …