குறுங்கதை-33 மொழி அதிகாரம்
அமேசான் காடுகளில் வாழும் முண்டிரு என்ற பழங்குடியினர் பேசும் மொழியில் காலத்தைக் குறிக்கும் சொற்கள் கிடையாது. பன்மை சொற்கள் கிடையாது. அப் பழங்குடியின் மொழி பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஜோன்ஸ் வாழ்நாளின் பெரும்பகுதியை அமேசானில் கழித்தார். முதுமையில் நாடு திரும்பி வந்த போது அவரைச் சந்தித்த நண்பர் கேட்டார் “அமெரிக்காவிலிருந்து அங்குப் போய்ச்சேர எவ்வளவு நாட்களானது“ ஜோன்ஸ் சொன்னார் “இங்கிருந்து சான்டரெம் வரை ஒன்பது மணி நேர விமான பயணம். பின்பு அங்கேயிருந்து படகில் ஆறு மணி …