ஓமானில்
சோலை வாசகர் வட்டம், நிஸ்வா- ஓமானில் எனது படைப்புலகம் குறித்த இலக்கியக் கூட்டம் நடைபெறுகிறது. நிகழ்வை ஒருங்கிணைப்பவர்களுக்கும் கலந்து கொண்டு உரையாற்றுபவர்களுக்கும் நன்றி •• தொடர்புக்கு +96896630871
சோலை வாசகர் வட்டம், நிஸ்வா- ஓமானில் எனது படைப்புலகம் குறித்த இலக்கியக் கூட்டம் நடைபெறுகிறது. நிகழ்வை ஒருங்கிணைப்பவர்களுக்கும் கலந்து கொண்டு உரையாற்றுபவர்களுக்கும் நன்றி •• தொடர்புக்கு +96896630871
எனது சிறுகதை விரும்பிக் கேட்டவள் ஜி. பாலாஜி அவர்களால் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை என்ற எனது புதிய நாவலைப் பற்றி அழகான விமர்சனத்தை திவாகர் ஜெ எழுதியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி •• காதலின் நினைவில் திவாகர். ஜெ உங்களின் பள்ளிப் பருவக் காலத்தில் நீங்கள் கோடை விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றதுண்டா? நிச்சயம் சென்றிருப்போம். அதுவும் பெரும்பாலும் தாத்தா – பாட்டி வீட்டிற்கோ அல்லது மாமா வீட்டிற்கோ தான் சென்றிருப்போம் அல்லவா? இக்கதையும் அப்படியொரு கோடை விடுமுறையில் தனது தாத்தா வீட்டிற்குச் செல்லும் ஒருவனது …
திருமணமாகி வந்த போது தனது வீட்டிலிருந்து அம்மா அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தாள். ஆப்த நாதரின் கதைகள் என்ற அந்தப் புத்தகத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்மா படித்துக் கொண்டிருந்தாள். அட்டை கிழிந்து காகிதங்கள் பழுத்து உதிரும் நிலைக்கு புத்தகம் வந்தபோதும் அதை வாசிப்பதை நிறுத்தவில்லை. ஒரு புத்தகத்தை எத்தனை முறை படிக்க முடியும். அப்படி என்னதான் அப்புத்தகத்தில் இருக்கிறது. அம்மா புத்தகம் படிக்கும் போது அவள் முகத்தில் எத்தனையோ உணர்ச்சிகள் வெளிப்படும். வீட்டுவேலைகள் செய்து கொண்டிருக்கும் …
அந்த நகரில் எல்லோரும் கனவில் நடனமாடினார்கள். விடிந்து எழுந்தவுடன் தாங்கள் கனவில் ஆடிய நடனத்தைப் பற்றி வெட்கத்துடன், பெருமிதத்துடன், கூச்சத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு இளம் பெண் சொன்னாள். நான் “நீர்க்குமிழி வானில் பறப்பது போல நடனமாடினேன்“. ஒரு இளைஞன் சொன்னான் “பாய்ந்தோடும் குதிரையின் வேகம் போலிருந்தது எனது நடனம்“. ஒரு முதியவர் சொன்னார் “நதிக்கரையோர நாணலின் அசைவு போன்றிருந்தது எனது நடனம்“. வீட்டு வேலைக்காரப் பெண் சொன்னாள் “காற்றில் ஈரத்துணிகள் உலர்வது போலிருந்தது எனது ஆட்டம்“. …
இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப் படங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும்பான்மை படங்கள் ஏமாற்றமே அளித்தன. எந்தப் படத்திற்கு விருது கிடைக்கும் என்பதை எளிதாக கண்டறிய முடிந்தது. இவை வழக்கமான ஹாலிவுட் சந்தைக்கான படங்கள் என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் கிடையாது. தொழில்நுட்ப ரீதியாக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட காரணத்தால் அவை மிகச்சிறந்த படம் போலத் தோற்றமளிக்கின்றன. International Feature Film, Feature Documentary என இரண்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஹனி லேண்ட் …
இன்று காலையிலிருந்து மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்.. என்ற திரைப்படப் பாடலை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். சில பாடல்கள் அப்படித் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கும். எதனால் என்று விளக்க முடியாது. பாடலின் வழியே மனது எதையெதையோ நினைவு கொள்கிறது. இயக்குநர் பி. மாதவன் இயக்கி தயாரித்த படம் “முகூர்த்த நாள். அப்படத்தில் தான் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் பாடலை எழுதியிருக்கிறார். பி. சுசீலா அற்புதமாகப் பாடியிருக்கிறார். பாடலைத் தனியே கேட்கையில் …
Miss Hokusai என்ற அனிமேஷன் படத்தைப் பார்த்தேன். ஜப்பானின் புகழ்பெற்ற ஓவியரான கட்சுஷிகா ஹொகுசாயின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை அவரது மகள் ஓயியின் பார்வையில் விவரித்திருக்கிறார்கள். ஹொகுசாய் குறித்து ஜப்பானில் வெளியான கறுப்பு வெள்ளை திரைப்படம் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். ஹொகுசாயின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஜப்பானுக்குச் சென்ற போது நேரிலே பார்த்திருக்கிறேன். இந்த அனிமேஷன் படத்தின் தனிச்சிறப்பு அவரது ஓவியங்களை அப்படியே மறு உருவாக்கம் செய்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அது எளிதான வேலையில்லை. ஒட்டு மொத்த படமும் ஹொகுசாய் …
சென்னையும் நானும் தொடரின் ஒன்பதாவது பகுதி வெளியாகியுள்ளது. காணொளி இணைப்பு : https://youtu.be/FPBScxhdi7w
சாலையில் கரித்துண்டுகளைக் கொண்டு ஓவியம் வரையும் ஒருவனிருந்தான். அவன் தினமும் பின்னிரவில் யாருமற்ற சாலையில் அமர்ந்தபடியே ஓவியம் வரைந்து கொண்டிருப்பான். மற்ற சாலை ஓவியர்களைப் போலக் கடவுள் உருவத்தை அவன் வரைவதில்லை. மாறாகத் தாயும் சேயுமாக இருவரை தான் வரைவான். ஒவ்வொரு நாளும் அந்தத் தாயின் முகம் மாறிக் கொண்டேயிருக்கும். சில சமயம் அந்த முகத்தில் தூய மகிழ்ச்சி ததும்பும். சில வேளை சோகம் படிந்ததாகக் காணப்படும். பெரும்பான்மை நேரம் வெறித்த பார்வை கொண்ட முகமாகயிருக்கும். ஆனால் …