admin

திரைப்பயணி -6

திரைப்பயணி காணொளித் தொடரின் ஆறாவது பகுதி வெளியாகியுள்ளது. இதில்12 Angry Men குறித்துப் பேசியிருக்கிறேன்

ஆகஸ்ட் 15 – நாயகி

ஆகஸ்ட் 15 மாலை நாயகி 1947 என்ற நிகழ்வு நடைபெறுகிறது சுதந்திரப் போராட்டத் தியாகிகள் களத்தில் நிற்கையில் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்த அவர்களது மனைவியரின் நினைவைப் போற்றும் நிகழ்ச்சி. அரிதான இந்த நிகழ்வை அகிலா ஸ்ரீதர், ஜா.தீபா,பாலைவன லாந்தர் ,ஆர் காயத்ரி ,ரேவா, சவீதா ஜெயஸ்ரீ, தமிழ் பொன்னி ஆகியோர் இணைந்து ஒருங்கிணைப்பு செய்கிறார்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன் இடம் : கவிக்கோ மன்றம். சிஜடி காலனி. சென்னை 4 நாள் …

ஆகஸ்ட் 15 – நாயகி Read More »

திரைப்பயணி – 5

உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளித் தொடரின் ஐந்தாம் பகுதி வெளியாகியுள்ளது. இதில் ரோமன் ஹாலிடே பற்றி பேசியிருக்கிறேன்

திரைப்பயணி – 4

உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளி தொடரின் நான்காம் பகுதியில் சைக்கோ திரைப்படம் பற்றி பேசியிருக்கிறேன்

தூத்துக்குடியின் பாவோ பாப் மரம்.

தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி வளாகத்தினுள் பாவோ பாப் (Baobab)மரமிருக்கிறது. நானூறு ஆண்டுகள் பழமையான மரம் என்கிறார்கள். ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த மரம் தூத்துக்குடிக்கு எப்படி வந்தது எனத்தெரியவில்லை. அராபிய வணிகர்கள் மூலம் வந்திருக்கக் கூடும். அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன். பொன் மாரியப்பன். ஞானராஜ், ராம்குமார், ஜெயபால், காசிம் மற்றும் சில நண்பர்கள் உடன்வந்திருந்தார்கள். நான்கு யானைகள் ஒன்றாக நிற்பது போன்ற தோற்றத்திலிருந்தது. அதன் பிரம்மாண்டம். உறுதி, அகன்ற கிளைகளின் கம்பீரம் தனித்துவமாக இருந்தது. மரத்தில் காய்ந்து உதிரும் …

தூத்துக்குடியின் பாவோ பாப் மரம். Read More »

விலகும் திரை

ஒரு நடிகர் எப்படி உருவாகிறார் என்பதை அறிந்து கொள்வதற்குச் சரியான திரைப்படம் Mr. Burton. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படம். மார்க் எவன்ஸ் இயக்கியுள்ளார். ஆசிரியரான பிலிப் பர்ட்டனால் கண்டறியப்பட்டு அவரது ஆதரவு மற்றும் ஊக்கத்தால் எப்படி ரிச்சர்ட் பர்ட்டன் புகழ்பெற்ற நடிகராக மாறினார் என்பதைப் படம் சிறப்பாக விவரிக்கிறது. 1940களின் முற்பகுதியில் போர்ட் டால்போட்டில் கதை நடைபெறுகிறது, தாயை இழந்த ரிச்சர்ட் மூத்த சகோதரி சிஸ் மற்றும் அவரது …

விலகும் திரை Read More »

குற்றமுகங்கள் -19 கட்டைக்கை பரந்தன்

அவனை கட்டைக்கை பரந்தன் என்று அழைத்தார்கள்.  இருபத்திரெண்டு வயதிருக்கும். கற்சிலையைப் போல உறுதியான உடல் கொண்டிருந்தான். அவனது வலது கை அளவில் சிறியது. பிறக்கும் போதே அந்தக் கையின் அளவு அப்படியிருந்தது. எழுதிக் கொண்டிருக்கும் போது பென்சிலின் நுனி உடைந்துவிடுவது போல அவனை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது கடவுள் வைத்திருந்த களிமண் தீர்ந்துவிட்டது என்று வகுப்பு ஆசிரியர் மாணிக்கம் கேலி செய்தார். மாணவர்கள் அதைக் கேட்டு சிரித்தார்கள். அது தான் பரந்தன் பள்ளிக்குச் சென்ற கடைசி நாள். …

குற்றமுகங்கள் -19 கட்டைக்கை பரந்தன் Read More »

குற்றமற்ற மகன்

தி வின்ஸ்லோ பாய் திரைப்படம் 1910களில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரான டேவிட் மாமெட் இப்படத்தை இயக்கியுள்ளார். டெரன்ஸ் ராட்டிகனின் கிளாசிக் நாடகத்தின் 1999 ரீமேக்காகும். லண்டனின் தெற்கு கென்சிங்டனில் உள்ள வின்ஸ்லோ குடும்பத்தில் நடைபெறுகிறது. ஆர்தர் வின்ஸ்லோ ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, மிகவும் வசதியானவர். கண்டிப்பானவர். அவரது, மூத்த மகன் ஆக்ஸ்போர்டில் படிக்கிறான் , இளைய மகன் ரோனி ராயல் கடற்படை அகாடமியில் பயிலுகிறான். மகள் …

குற்றமற்ற மகன் Read More »

விருதுநகரில்

ஆகஸ்ட் 3 ஞாயிற்றுகிழமை மாலை விருதுநகரில் நடைபெறும் பேராசிரியர் வினோத்தின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன். JCI மற்றும் விருதை விருட்சம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வு ஸ்ரீ அம்பாள் ராமசாமி புஷ்பமணி அரங்கில் நடைபெறுகிறது. நிகழ்வில் அம்பாள் ஆர் முத்துமணி அவர்கள் தலைமை ஏற்கிறார். தொழிலதிபர் ஆறுமுகச்சாமி மற்றும் தேன்மொழி அவர்கள் நூலினைப் பெற்றுக் கொள்கிறார்கள் கல்வி அதிகாரி ஜான் பாக்கியா, முனைவர் ந. அருள்மொழி நூல் குறித்து உரையாற்றுகிறார்கள். பேராசிரியர் …

விருதுநகரில் Read More »

திரைப்பயணி -3

உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் காணொளித் தொடர் திரைப்பயணியின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது