admin

சாய்ந்தாடும் குதிரை

புதிய சிறுகதை. – July25. அவன் வழக்கமாக நடைப்பயிற்சி செல்லும் கிரௌன் தியேட்டர் சாலையில் நிறையப் பழைய மரசாமான்கள், இரும்புப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன. அந்தக் கடைகளின் வெளியே ஸ்டீல் நாற்காலி, இரும்பு பீரோ. மரக்கதவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறான். வீட்டிலிருந்து வெளியேறியதும் கதவுகள் பற்களை இழந்த மனிதனைப் போலாகி விடுகின்றன.. விடிகாலையில் நடக்கும் போது இரவு விளக்கின் மஞ்சள் வெளிச்சமும் காலையின் மென்னொளியும் கலந்து அந்தச் சாலை விநோதமாகத் தோற்றமளிக்கும். வீதியோர மரங்களில் அசைவேயிருக்காது. …

சாய்ந்தாடும் குதிரை Read More »

மண்டியிடுங்கள் தந்தையே – இணைய நிகழ்ச்சி

நூல் வாசிப்பு முற்றம் சார்பில் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலிற்கான அறிமுகவுரை நடைபெறவுள்ளது. ஜுலை 24 வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இணைய வழியில் நிகழ்வு நடைபெறுகிறது மண்டியிடுங்கள் தந்தையே குறித்து இரா. ஜெயபால் உரையாற்றுகிறார். நூல் வாசிப்பு முற்றம் – 237′நாள் : 24.07.2025வியாழக்கிழமை நேரம் : இரவு 7.00 – 7.30 மணி நிகழ்விற்கான இணைப்பு : https://meet.google.com/pfw-tcoy-xxb நூல் கருத்துரை வழங்க விரும்புவோருக்கானவிண்ணப்பப் படிவம் :https://forms.gle/kVqEwX9uqrGYqv2a8

கோவை புத்தகத் திருவிழாவில்

கோவை புத்தகத் திருவிழாவில் மூன்று நாட்கள் இருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. திங்கள்கிழமை எனது உரையின் போது நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள். அரங்கு நிறைந்த கூட்டம். கோவை புத்தகத் திருவிழாவின் போது உடனிருந்து உறுதுணைகள் செய்த அன்பு நண்பர் மூர்த்திக்கு மனம் நிறைந்த நன்றி. உபசரித்து மகிழ்ந்த அம்பாள் முத்துமணி , நிலக்கோட்டை ஸ்ரீதர், தேன்மொழி, டாக்டர் சந்திரமௌலி, வசந்த், கொடீசியா நடராஜ், அழகிரி, கோவை ஷபி, ஸ்ருதி டிவி கபிலன், பத்திரிக்கை, …

கோவை புத்தகத் திருவிழாவில் Read More »

பாராட்டுவிழா

நான் பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தூத்துக்குடியில் நடைபெறுகிறது ஆகஸ்டு 1 வெள்ளிக்கிழமை மாலை காமராஜ் கல்லூரி அரங்கில் விழா நடைபெறுகிறது நூலக மனிதர்கள் இயக்கம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

கோவையில்

கோவை புத்தகத் திருவிழா கொடீசியா அரங்கில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கோவை வருகிறேன். ஜுலை 19, 20,21 மூன்று நாட்களும் தேசாந்திரி பதிப்பக அரங்கு 67ல் என்னைச் சந்திக்கலாம்.“ ஜுலை 21 திஙகள் கிழமை மாலை புத்தகத் திருவிழா அரங்கில் “புத்தகங்களின் சரித்திரம்“ என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்

புதிய மொழி

தாவோ கோவிலுக்குச் செல்வது எப்படி என்றொரு ஆங்கிலக் கவிதை தொகுப்பை மலையாள கவிஞர் சச்சிதானந்தன் வெளியிட்டுள்ளார். இருமொழிகளில் வெளியாகியுள்ள இந்தத் தொகுப்பை INTERNATIONAL POETRY NIGHTS IN HONG KONG வெளியிட்டுள்ளது. இதில் மிகச்சிறந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன இந்தத் தொகுப்பின் முதல்கவிதை திக்குவாய் பற்றியது. மிக அழகாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை திக்குவாயை ஒரு குறீயிடாக மாற்றுகிறது. திக்குவாய் குறித்த கேலிகள். அவமானங்களைப் புறந்தள்ளி அதனைப் புதியதொரு மொழியாக அறிவிக்கிறது. •• திக்குவாய் என்பது ஒரு குறையல்ல. …

புதிய மொழி Read More »

போரும் காதலும்

ஜெர்மானிய எழுத்தாளர் எரிக் மரியா ரெமார்க்கின் A Time to Love and a Time to Die நாவல் போரின் துயர நாட்களை விவரிக்கிறது. ஹெமிங்வேயின் A Farewell to Arms நாவலைப் போன்ற கதைக்களம் கொண்டது. இதில் போர் முனையிலிருந்து வீடு திரும்பி வரும் சிப்பாய் கிரேபரின் காதலும், பெற்றோரை தேடும் அவனது இடைவிடாத பயணமும் விவரிக்கபடுகிறது. போரை முதன்மைப்படுத்திய ஐரோப்பிய நாவல்களுக்கும் ரஷ்ய நாவல்களுக்கும் நிறைய வேறுபாடிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் போர் நாவல்களில் …

போரும் காதலும் Read More »

அலமாரியில் உறங்குகிறவன்.

போலந்து எழுத்தாளர் ஸ்லாவோமிர் மிரோசெக் (Slawomir Mrozek) கதை ஒன்றில் ஒருவன் தனது அறையில் உள்ள படுக்கை, பீரோ, மேஜை மூன்றும் நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருப்பதை நினைத்துச் சலிப்படைகிறான். அறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பி அலமாரியை நகர்த்தி வேறு பக்கம் வைக்கிறான். படுக்கையை அந்தப் பக்கம் திருப்புகிறான். மேஜையை ஒரமாக நகர்த்திவிடுகிறான். இந்த மாற்றம் பிடித்திருக்கிறது. ஆனால் சில நாட்களில் மீண்டும் அறையின் தோற்றம் சலிப்பை உருவாக்குகிறது. இந்த முறை அறையின் …

அலமாரியில் உறங்குகிறவன். Read More »

திரைப்பயணி

உலகின் சிறந்த திரைப்படங்களை அறிமுகம் செய்யும் விதமாக திரைப்பயணி என்ற காணொளித் தொடரைத் துவங்கியுள்ளேன். தேசாந்திரி யூடியூப் சேனலில் இதனைக் காணலாம். இந்த தொடரின் முதல் பகுதி நேற்று வெளியாகியுள்ளது.