டால்ஸ்டாயின் கைகள்
லியோ டால்ஸ்டாயோடு மிகுந்த நட்பு கொண்டிருந்தார் மாக்சிம் கார்க்கி. பலமுறை தேடிச் சென்று டால்ஸ்டாயை சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்பினை பற்றி நினைவுக்குறிப்புகளில் டால்ஸ்டாயின் கைகளைப் பற்றி வியந்து எழுதியிருக்கிறார். டால்ஸ்டாயின் நரம்புகள் புடைத்த பெரிய கைகளைக் காணும் போது லியனார்டோ டாவின்சியின் கைகளைப் போலவே தோன்றியது. இரண்டு பேர்களின் கைகளும் தொட்டதையெல்லாம் கலையாக்கியவை. மாயத்தன்மை கொண்ட கைகள். பேசிக் கொண்டிருக்கும் போது டால்ஸ்டாயின் கைகள் அசைந்து கொண்டேயிருந்தன. கடவுளை போல அவர் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. அந்த உரையாடலின் …