சீன நிலக்காட்சி ஒவியங்கள்.
சீன நிலக்காட்சி ஒவியங்களைக் காணும் போது ஒவியன் தனக்கு வெளியேயுள்ள உலகை வரைந்தது போலவே தோன்றவில்லை. மாறாகக் காற்று, மலை, அருவிகள் யாவும் தனது வெளிப்பாட்டின் வடிவமே என்பது போலவே வரைந்திருக்கிறார்கள். குறிப்பாகப் பறவைகளை, விலங்குகளை ஐரோப்பிய ஒவியங்களைப் போலப் பெரியதாக வரையவில்லை. மாறாக அதன் இயல்பில், அதன் வடிவ அளவிலே வரைகிறார்கள். குரூர மிருகங்களை வரையும் போது அதன் குரூரரத்தை துல்லியமாகவே சித்தரித்திருக்கிறார்கள். பாறைகளைச் சீன ஒவியர்கள் அளவிற்கு உலகில் வேறு எவரும் வரைந்திருப்பார்களா எனத் …