உணவு யுத்தம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ரீ இயற்கை விளைபொருள் அங்காடியில் மே 8 மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் இதில் கலந்து கொள்ளவும்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ரீ இயற்கை விளைபொருள் அங்காடியில் மே 8 மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் இதில் கலந்து கொள்ளவும்.
மே 3 2016 அன்று மாலை 5 :30 மணிக்கு, கவிக்கோ மன்றத்தில் நடைபெற உள்ள சுஜாதா விருதுகள் வழங்கும் நிகழ்வில் சுஜாதா படித்த புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். உயிர்மை பதிப்பகம் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
தனது முகநூல் பக்கத்தில் இடக்கை நாவல் குறித்து இயக்குனர் வசந்தபாலன் எழுதியிருக்கிறார். அவருக்கு எனது அன்பும் நன்றியும். ••• குமாரசாமி\ சங்கர்ராமன்\அண்ணாநகர் ரமேஷ்\ சாதிக் பாட்ஷா\ தினகரன் எரிப்பு சம்பவம்\ தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம்\ ராமஜெயம்/ லீலாவதி/ தா.கிருஷ்ணன் இந்தப் பெயர்கள் எல்லாம் நமக்கு உணர்த்தியது என்ன???. நீதி மறுக்கப்பட்டு விட்டது அல்லது நீதி மறைக்கப்பட்டு விட்டது என்பதை தானே. இப்படி நீதி மறுக்கப்பட்டவர்களின் குரல் அல்லது கதைகள் இன்று உலகமெங்கும் ஒலிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.இலங்கையின் …
பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான சுந்தரபுத்தன் எனது விருப்பத்திற்குரிய நண்பர். நுண்கலைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் நவீன ஒவியங்கள் குறித்து வண்ணங்களின் வாழ்க்கை என்ற சிறந்த நூலை எழுதியிருக்கிறார். தன் பால்யத்தையும் கிராமத்து வாழ்க்கை நினைவுகளையும் கூறும் வகையில் மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். இவரது தந்தை நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ பல ஆண்டுகளாக மாலை முரசு நாளிதழில் பகுதிநேர செய்தியாளராகப் பணியாற்றியவர். திருவாரூருக்கு அருகில் உள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் …
மே 1 ஞாயிறு மாலை, சேலம் தமிழ்ச் சங்கத்தில் எழுத்தும் படிப்பும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்
இயக்குனர் ராம் தனது முகநூலில் இடக்கை நாவல் குறித்துப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருக்கு மனம் நிரம்பிய நன்றி. •• படித்ததில் பிடித்தது எஸ்.ராமகிருஷ்ணனின் ”இடக்கை”. பதிப்பகம் : உயிர்மை. 91- 44 – 24993448 www.uyirmmai.com ’சம்பவங்கள் சொற்பமாய் சொற்கள் அதிகமாய்’ கொண்ட எழுத்தைப் படித்து சலித்துப் போன எனக்கு வெகு நாட்களுக்குப் பிறகு சம்பவங்களும் துணைக் கதைகளும் நிறைந்த இடக்கை, பரவச வாசக அனுபவத்தைத் தந்தது. உங்களுக்கு game of thrones (hbo தொலைக்காட்சித் தொடர்) …
கவிஞர் கார்த்திகா முகுந்த் சரித்திர காலத்தில் வாழ்ந்தும் சரித்திரங்களில் இடம் பெற்றிராத எளிய மக்களை மையமாகக் கொண்டு வாசிக்கையில் ‘இடக்கை’ ஒரு புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது. சரித்திரங்கள் குறித்த எனது பார்வைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இதுவும் ஒரு வகையில் சரித்திரமாகத் தோன்றுகிறது; எழுதப்படாத எளிய மக்களின் சரித்திரம். நாவலில் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பிறகும் தங்கள் நிலையில் மாற்றம் இல்லாமல் வாழும் மக்களின் சரித்திரம். சில சமயங்களில் கதை நடைபெறும் காலத்தில் …
கோவை வாசகர் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வினை எழுத்தாளர் இரா.முருகவேள் ஒருங்கிணைத்து நடத்தினார். இளம்வாசகர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் விஜயா வேலாயுதம் அவர்கள் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி தந்தது. காஸ் வனவியல் அருங்காட்சியகத்திலுள்ள சிற்றரங்கில் நிகழ்வு நடைபெற்றது. இந்தியாவில் மிகவும் பழமை வனவியல் அருங்காட்சியகமிது . 1902-ம் ஆண்டில் அப்போதைய வனத்துறை அலுவலர் ஹாரஸ் ஆர்ச்சிபால்ட் காஸ் என்பவரால், அருங்காட்சியகம் உருவாக்கபட்டுள்ளது..பல்வேறு வகையான பறவை, விலங்கினங்கள், மரங்கள், தாவர வகைகள் இங்கே பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டீஷ் …
ஏப்ரல் 23 உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் உரையாற்றுகிறேன்
கோவை ஆர்.எஸ். புரம் கவுலி பிரவுன் ரோட்டிலுள்ளது மாவட்ட மைய நுாலகம். தமிழகத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன நுாலகப்பிரிவு இங்கே திறக்கப்பட்டுள்ளது. கோவைக்குச் சென்றிருந்தபோது நண்பர் PUCL சந்திரசேகர் அந்நூலகத்தைப் பார்வையிட அழைத்துச் சென்றார். சந்திரசேகர், நூலகத்திற்கு தன்னார்வத்துடன் பல்வேறு சேவைகள் செய்து வருபவர். தீவிர வாசகர். களச்செயல்பாட்டாளர். முற்றிலும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட நூலகப்பிரிவு மிக அழகாக வடிவமைக்கபட்டுள்ளது. பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் புத்தகங்கள். பிரைலி கம்யூட்டர்கள் ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள், செவித்திறனை இழந்த குழந்தைகள் …