கோடைப்பயணம்
நாளை முதல் பதினைந்து நாட்கள் கோடைப் பயணம் புறப்படுகிறேன். ஜுன் 7 அன்று சென்னை திரும்புவேன். ராஜபாளையத்தில் ஜுன் 4 அன்று நண்பர் சா. தேவதாஸ் ஒரு இலக்கியக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார். இடம் நேரம் குறித்து சில நாட்களில் பதிவிடுகிறேன் ஜுன் 5 மதுரையில் நண்பர் முருகேச பாண்டியன் மகள் திருமண நிகழ்விலும் ஜுன் 6 கவிஞர் கலாப்ரியா மகள் திருமண நிகழ்விலும் கலந்து கொள்ள இருக்கிறேன் ••
இமயத்தின் மணியோசை.
இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட ஆங்கிலப்படம் BLACK NARCISSUS, 1947ல் வெளியானது. மைக்கேல் போவல் இயக்கியுள்ளார். சிறந்த கலையமைப்பு. ஒளிப்பதிவு என இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள இப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். இமயமலையின் மோபு என்ற இடத்தில் கன்னியர் மடம் ஒன்றை உருவாக்க முயலும் கன்னியாஸ்திரிகளின் கதையே பிளாக் நார்சிசஸ். இளவரசன் திலீப் ராய் பயன்படுத்தும் வாசனைத்திரவியத்தின் பெயரது. மையக்கதையின் குறியீடாகவே அந்த வாசனை திரவியம் அடையாளப்படுத்தபடுகிறது. இளமையின் அடையாளமாக உள்ள அந்த வாசனைதிரவியத்தின் மணத்தைக் கன்னியாஸ்திரிகள் விரும்புகிறார்கள். …
அந்திமழையில்
அந்திமழை மே 2016 இதழில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் திரைப்படமானது குறித்த எனது கட்டுரை வெளியாகியுள்ளது
மூன்றாம் பதிப்பு
நான் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் நூலின் மூன்றாம் பதிப்பு வெளியாகியுள்ளது. இரண்டு தொகுதிகள் சேர்த்து விலை : ரூ 800 டிஸ்கவரி புக் பேலஸ் இதனை வெளியிட்டுள்ளது நூலை வாங்குவதற்கு அணுகவும் Discovery Book Palace (P)Ltd No.6, Magavir Comlex, 1st Floor Munusamy Salai, K K Nagar West Chennai – 600078 (Near Pondichery Guest house) Ph”+91 44 65157525 , Cell +91 9940446650 Mail: discoverybookpalace@gmail.com
எனக்குப் பிடித்த கதைகள் 35
கார்லோவுக்கு எப்படி வாசிப்பது என்று தெரியாது கியூலியோ மோஸி ஆங்கிலத்தில்: எலிசபெத் ஹாரிஸ் தமிழில்: சுகுமாரன் கார்லோவுக்கு (அது நான்தான்) எப்படி வாசிப்பது என்று தெரியாது. அவன் மாபெரும் புத்தகங்களை வாசிக்கிறான். அந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது கார்லோவுக்கு ஒரு வார்த்தையும் புரிவதில்லை. அந்தப் புத்தகங்களில் கார்லோ எதைப் பார்க்கிறானோ அதையே நினைவில் வைத்துக்கொள்கிறான். கார்லோ வாசிக்கும்போது அடிக்கடி கண்களை மூடிக் கொள்கிறான். சில சமயங்களில் தூங்கி விடுகிறான். தூங்கும்போது பொருட்களைப் பார்க்கிறான். விழித்தெழுந்ததும் மறுபடியும் வாசிப்பைத் தொடர்கிறான். …
செம்மலரில்
செம்மலர் மே இதழில் இடக்கை நாவல் குறித்து கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம் எழுதியிருக்கிறார். அவருக்கும் செம்மலர் இதழுக்கும் மனம் நிரம்பிய நன்றி ••
இடக்கை நாவல் குறித்து
இடக்கை நாவல் குறித்து புத்தகம் பேசுது மே இதழில் டி.லட்சுமணன் சிறந்த விமர்சனக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அவருக்கும், புத்தகம் பேசுது இதழிற்கும் மனம் நிரம்பிய நன்றி
சுதந்திர எழுச்சி
ராமநாதபுரம் ஜில்லாவில் 1942ல் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியை அன்றைய ஆங்கிலேய அரசு எப்படி ஒடுக்கியது என்பதைப் பற்றிய சிறுநூல் ஒன்றை வாசித்தேன். ஏ.வி.திருப்பதிரெட்டியார் என்ற தியாகி இதை எழுதி வெளியிட்டிருக்கிறார். இப் புத்தகத்தைப் பிரிட்டீஷ் அரசு தடைசெய்திருக்கிறது அதிலிருந்து சில பகுதிகள் தேசதலைவர்களைக் கைது செய்த செய்தி 1942 ஆகஸ்ட் 9ம் தேதி ரேடியோ மூலம் அறிவிக்கபட்டது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை அடைத்தார்கள். தொழிலாளர்களுக்கும் வேலைக்குப் போகவில்லை. பள்ளி மாணவர்கள் கூடப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எங்கும் …