admin

இடக்கை விமர்சனம்

இடக்கை தாளகதியில் ஒரு வாசிப்பு – பெஷாரா சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘’இடக்கை’’ என்னும் நாவல் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. வாழ்க்கையின் உள்ளோடும் அவலங்களின் சாரம் தொட்டுச் செல்கிறது நாவல். மற்றும் தேடல்தான் நாவலின் மையக் கரு. ஆம், சில கதாபாத்திரங்களின் மனம், கடந்த காலத்தில் நழுவ விட்ட, வாழும் தருணங்கள் தேடி நினைவலைகளில் அலைகின்றது. பிரிந்த குடும்பத்துடன் ஒன்று கூட விழையும் முயற்சிகளாக தேடல். ஞானிகளின் தரிசனத்தில் எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள பயணப்படும் தேடல். கருவூல ரகசியம் …

இடக்கை விமர்சனம் Read More »

நாடகம்

எனது புதிய நாடகம் தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் ஜுன் 25 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நாடகத்தை தியேட்டர் லேப்  மற்றும் ருஷ்ய கலாச்சார மையத்தின் புஷ்கின் இலக்கியப்பேரவை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். நாடக கலைஞர் ஜெயராவ் இதனை இயக்குகிறார். ஆழ்வார்பேட்டையிலுள்ள ருஷ்ய கலாச்சார மையத்தில் இந்நாடகம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

உயிர்மையில்

இம்மாத (ஜுன் 2016 )உயிர்மையில் எனது புதிய சிறுகதை நோர்பாவின் கல் வெளியாகியுள்ளது அதே இதழில் மகாராணியின் பேனா என்ற கட்டுரையும் வெளியாகியுள்ளது. இக்கட்டுரை மணிப்பூரி எழுத்தாளர் எம்.கே. பிநோதினி தேவி பற்றியது

அந்திமழையில்

இம்மாத ( ஜுன் 2016 ) அந்திமழை இதழில் முதல்புத்தகத்தின் வாசனை என்ற சிறப்பு பகுதி இடம்பெற்றுள்ளது.  தனது முதல் புத்தகத்தை வெளியிடுவதற்கு எழுத்தாளர்கள் அடைந்த சிரமங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். உப பாண்டவம் நாவலை வெளியிடுவதற்கு நான் பட்ட அவஸ்தைகளை அதில் பதிவு செய்திருக்கிறேன் எழுத்தாளர்கள் கி.ரா, வண்ணநிலவன். அசோகமித்ரன், நாஞ்சில் நாடன், கலாப்ரியா. ஜெயமோகன். சாருநிவேதிதா, கோணங்கி , இராசேந்திர சோழன்,, சுகுமாரன்.  ஆகியோர் பங்களித்துள்ளார்கள். இப்பகுதி மிகச்சிறந்த தொகுப்பாக  உருவாக்கபட்டுள்ளது.  ஆசிரியர் அசோகனுக்கு எனது மனம் …

அந்திமழையில் Read More »

புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை, விகடன் பிரசுரம்,  தி இந்து, டிஸ்கவரி புக் பேலஸ் , பாரதி புத்தகாலயம், விஜயா பதிப்பகம்  ஆகிய அரங்குகளில் எனது புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன

இந்திய வானம்

ஆனந்த விகடனில் தொடராக வந்த இந்திய வானம் தற்போது விகடன் பிரசுர வெளியீடாக வந்துள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் விகடன் அரங்கில் இந்நூல் விற்பனைக்கு கிடைக்கிறது

இடக்கை – நாவல்

தே. இலட்சுமணன் தமிழகத்தில் முன்னணியில் நிற்கும் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் அண்மையில் எழுதி வெளியிட்ட நாவல் “இடக்கை”. இந்த நாவல் பற்றிய எனது விமர்சனம் “புத்தகம் பேசுது” ஏப்ரல் இதழில் வெளிவந்துள்ளது. அந்த நாவலில் சமுதாயத்தில் மிகக் கீழ்  ஜாதியாக தள்ளப்பட்டுள்ள “தூமகேது” என்ற பெயர் கொண்ட பாத்திரமும் மன்னன் அவுரங்கசீப்பின் அந்தரங்கப்பணிப் பெண்களில் ஒருத்தியான அஜ்யா என்ற பெயர் கொண்ட அரவாணி  பாத்திரமும் மனதில் நிற்பவைகளாக நாவல் படைக்கப்பட்டுள்ளன, புத்தக அறிமுகத்தில் அஜ்யா பற்றி …

இடக்கை – நாவல் Read More »

படிக்கத் தெரிந்த சிங்கம்

படிக்கத் தெரிந்த சிங்கம் – எஸ்.ராமகிருஷ்ணன் (சிறார் நாவல்) விழியன் ** எஸ்.ரா கதை சொல்லி கேட்பது ஒரு சுவாரஸ்யம். சுவாரஸ்யம் என்பதைவிட ஒரு மயக்கம் கொடுத்துவிடும். பிரசாத் ஸ்டுடியோ வாசலில் ஒருமுறை சந்தித்தபோது படிக்கத் தெரிந்த சிங்கத்தின் ஒன் லைனைரை கூறினார். குழந்தைகள் தினசரிகளை வாசிக்க வைக்க ஒரு சிறார் நாவல் என்றார். எஸ்.ரா செய்யப்போகும் மாயத்திற்காக காத்திருந்தேன். விறுவிறு வாசிப்பு. எட்டு வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கான புத்தகமாக வந்துள்ளது. அதைவிட சிறிய …

படிக்கத் தெரிந்த சிங்கம் Read More »

கோணங்கியுடன்

இரண்டு நாட்கள் கோணங்கியுடன் சுற்றித்திரிந்தேன். நானும் அவரும் ஒன்றாக திரிந்த நாட்கள்  மறக்கமுடியாதவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இணைந்து சுற்றியிருப்போம். எத்தனையோ இலக்கியவாதிகளைத் தேடிச் சென்று சந்தித்திருக்கிறோம். வரலாற்றுபுகழ்மிக்க இடங்களை தேடி அலைந்திருக்கிறோம். எவரெவர் வீடுகளிலோ தங்கிப்பேசி கடந்து போயிருக்கிறோம். இன்று அவரது பாதையும் பயணமும் வேறு. ஆனாலும் மனதில் அந்த நெருக்கம் மறையவேயில்லை. இருவரும் ஒன்றாக சாத்தூர்  சென்று  நண்பர் தியாகுவை அழைத்துக் கொண்டு பாபநாசம் சென்றோம். அங்கே ஒரு அறை எடுத்துக் கொண்டு …

கோணங்கியுடன் Read More »