விகடனில்
இநத வார (08.07.2016) விகடனில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது
இநத வார (08.07.2016) விகடனில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது
க.வை.பழனிச்சாமி அக்கறையாக வாசிக்காது ஒரு புத்தகம் நம்மோடு உரையாடாது.அப்படியான மனம் ஜனித்த பின்புதான் புத்தகத்தை நெருங்க வேண்டும்.நமது உயிர் சற்றே வாழ்வதற்கு காத்திருக்கும் புதிய உடல் புத்தகம்.அதனால்தான் வாசிப்பு இன்னொரு வாழ்தலாகிறது.நேர்மையானப் படைப்பிற்கே இந்த விளைவுகள் உண்டு.வாசிப்பு ஒரு அற்புத நிகழ்வு. மறைக்கப்பட்ட பிரதேசத்தின் மீது வெளிச்சமாகப் படிகிறது ‘இடக்கை’.வாழ்வின் அடிப்படையான கேள்விகளோடு நகர்கிறது ராமகிருஷ்ணனின் புதிய நாவல். பாத்திரங்கள் குமிழ்களாகத் தோன்றி அதிர்கின்றன. கதையாடலின் முடிவில் உருவம் உடைந்துமீண்டும் நீரோட்டத்தில் கலந்துவிடுகின்றன.மன்னன் ஒளரங்கசீப் முதல் யமுனை …
புகழ்பெற்ற மெக்சிக எழுத்தாளரான கார்லோஸ் ஃபுயெண்டெஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான Myself with Others: Selected Essays வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் எப்படி எழுதத் துவங்கினார் என்றொரு கட்டுரையிருக்கிறது. அக்கட்டுரை அவரது பிறப்பில் துவங்குகிறது. ஃபுயெண்டெஸ்ஸின் அம்மா சினிமா பார்க்கச் சென்றிருந்த போது பிரசவ வலி ஏற்பட்டு பாதி படத்தில் எழுந்து மருத்துவமனைக்குப் போனதைக் கேலியுடன் நினைவுகூறுகிறார். ஃபுயெண்டெஸ்ஸின் தந்தை மெக்சிக அரசின் அயல்நாட்டு தூதுவராகப் பணியாற்றியவர். அமெரிக்காவில் தான் ஃபுயெண்டெஸ்ஸின் பள்ளிப்பருவம் கழிந்தது. அமெரிக்காவில் …
சமகால ஈழக்கவிதைகளில் தனித்துமிக்க கவிஞர் றஷ்மி . நவீன ஓவியரும், வடிவமைப்பாளருமான இவர் தனது முகநூலில் எழுத்தாளர்களை அற்புமான சித்திரங்களாக வரைந்து வெளியிட்டு வருகிறார். இன்று எனது சித்திரம் ஒன்றை அனுப்பியிருந்தார். சிறப்பாக இருந்தது. ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு , ஈ தனது பெயரை மறந்து போனது, ஈதேனின் பாம்புகள் என்ற அவரது கவிதைத்தொகுப்புகள் முக்கியமானவை. றஷ்மியின் கவிதைகள் நீதி மறுக்கபட்ட சாமானிய மனிதனின் குரலை ஒலிக்கின்றன. அரசியல் மற்றும் இயற்கையால் காவு கொள்ளப்பட்ட எளிய …
திருச்சியிலுள்ள களம் இலக்கிய அமைப்பு சார்பில் இடக்கை நாவல் அறிமுகவிழா நடைபெறவுள்ளது எழுத்தாளர் பவா. செல்லதுரை இடக்கை நாவல்குறித்து உரை நிகழ்த்துகிறார் நாவல் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன். நாள் : ஜுலை 2 சனிக்கிழமை இடம் : திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள செவனா ஹோட்டல் அரங்கம் நேரம்: மாலை 6 மணி அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••
தி இந்து தமிழ் நாளிதழில் நாளை செவ்வாய்கிழமை (28.06,2016 ) முதல் புதிய பத்தி ஒன்றைத் துவங்குகிறேன் இந்தப் பத்தி உலகெங்குமுள்ள வாய்மொழிக்கதைகளைப் பற்றியது.
நேற்று (25.06.16 ) மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் என்ற எனது நாடகத்திற்குத் திரளாக பார்வையாளர்கள் வந்து சிறப்பித்தார்கள். தியேட்டர்லேப் குழுவினர் சிறப்பாக நாடகத்தை உருவாக்கியிருந்தார்கள். இயக்குனர் ஜெயராவிற்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். இந்த நிகழ்விற்குக் காரணமாக இருந்த தங்கப்பனுக்கும் அனுமதி தந்த ருஷ்ய கலாச்சார மைய இயக்குனருக்கும் நாடகத்தைக் காண வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ••
தி இந்து ஆங்கில நாளிதழில் எனது நாடகம் பற்றி வெளியாகியுள்ள குறிப்பு ** A ‘shadow’ to throw light on Dostoyevesky’s life – ZUBEDA HAMID For lovers of Russian literature in the city, this Saturday offers a treat. A Tamil play on Russian writer Fyodor Dostoyevesky’s life, scripted by S. Ramakrishnan, is to be staged at the Russian Cultural …
எனது புதிய நாடகம் 25 .06.2016 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு ஆழ்வார்பேட்டையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது .தியேட்டர் லேப் நாடகக்குழு இதனை நடத்துகிறது அனைவரும் கலந்து கொள்ளலாம். அவசியம் வருக.