admin

அஞ்சலி

நவீன தமிழ் கவிதையுலகின் பெருங்கவி ஞானக்கூத்தன் இன்று மறைந்தார். சங்க கவிதைமரபின் தொடர்ச்சியிலிருந்து புதிய நவீன கவிதையை உருவாக்கிச் சாதனை செய்த மகத்தான கவிஞர் ஞானக்கூத்தன். அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பாகும் . ஞானக்கூத்தனின் மறைவிற்கு மனம் நெகிழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கணையாழி

பழைய கணையாழி இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது எனது முதல் புத்தகமான வெளியில் ஒருவனுக்கு வெளியான விமர்சனம் கண்ணில்பட்டது. என்னை உருவாக்கியதில் கணையாழிக்கு மிக முக்கியப் பங்கிருக்கிறது.  தி.ஜா குறுநாவல் போட்டியில் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அசோகமித்ரன் கையெழுத்தில் வந்த தபால் அட்டைகள் என்னிடமிருக்கின்றன.  

இனிப்பு

பத்தே நிமிடங்கள் நிகழ்த்தப்படும் குறு நாடகங்களை ஊக்கபடுத்துவதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு.சிறந்த நாடகங்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் வழங்கி உலக அளவில்  கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். இவர்களின் நாடகவிழா சென்னை அல்லையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில்  நடைபெற உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் கலந்து கொள்கின்றன. ஜூலை 6 லிருந்து – 23 வரை இந்நாடக விழா நடைபெறுகிறது. 27,29.30,31 தேதிகளில் இதன்  இறுதிச் சுற்று நடைபெறுகிறது இந்த …

இனிப்பு Read More »

சேலத்தில்

நாளை ( 17. 07.2016 ) சேலத்தில் பாலம் புத்தகக் கடை நடத்தும் வாசகர் சந்திப்பு நிகழ்வில் இடக்கை நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நடைபெறுகிறது இடக்கை நாவல் குறித்து  ஜி. செல்வா உரையாற்றுகிறார். இடம் : பாலம் புத்தகக்கடை 35, அத்வைத ஆசிரம சாலை (புதிய பேருந்து நிலையல் எதிரில்) சேலம்-  4 நேரம் : காலை 11 மணி ••

கும்பகோணத்தில்

இன்று மாலை கும்பகோணத்தில் எனது இடக்கை நாவல் குறித்து நண்பரும் வழக்கறிஞருமான மணிசெந்தில் உரையாற்றுகிறார். பொன்னி இலக்கியச்சுற்றம் இதனை ஏற்பாடு செய்துள்ளது இடம் : புனித பீட்டர்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி பழைய பாலக்கரை, கும்பகோணம். நேரம் : மாலை 5 மணி ••

ஊரும் உறவும்

திதி என்ற கன்னடப்படத்தைப் பார்த்தேன். சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையே உருவாகவில்லை. மாறாக ஒரு கிராமத்தில் நம் கண்முன்னே எல்லாச் சம்பவங்களும் நடப்பதாகவே இருந்தது. ஆவணப்படத்தைக் கூட இவ்வளவு துல்லியமாக எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. நடித்திருப்பவர்கள் அத்தனை பேரும் கிராமத்து மனிதர்கள். வெகு யதார்த்தமாகப் படமாக்கபட்டிருக்கிறது. இவ்வளவு நிஜமாக ஒரு படத்தை உருவாக்கிவிட முடியும் என்பது சாதனையே. இதனாலே Locarno International Film Festival லில் இரண்டு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது. படத்தின் இயக்குனர் …

ஊரும் உறவும் Read More »

முதற்பாடல்

இந்த வாரம் குமுதம் இதழோடு இணைப்பாக வந்துள்ள குமுதம் லைப்பில் இசைஞானி இளையராஜா இசையில் நான் எழுதிய பாடல் பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். நேற்றிலிருந்து ஏகப்பட்ட வாழ்த்துச் செய்திகள்.  போனிலும் மெயிலிலும் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நண்பர் சுகாவின் படித்துறை படத்திற்காக  எழுதப்பட்ட அப்பாடல் இன்னமும் வெளியாகவில்லை. பாடல் எழுதக் காரணமாகயிருந்த  இசைஞானிக்கும் சுகாவிற்கும் தீராத நன்றிகள். நன்றி  : குமுதம் ••

கண்காணிப்பின் வலை.

நேற்று Eye in the Sky என்ற பிரிட்டீஷ் திரில்லரைப் பார்த்தேன். நைரோபியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் ஒளிந்துள்ளதாகப் பிரிட்டீஷ் ராணுவம் அடையாளம் காணுகிறது. அவர்கள் தற்கொலைப்படையினர் என்பதால் வான்வழிதாக்குதல் மூலம் அவர்களின் இருப்பிடத்தை அழிக்க முற்படுகிறார்கள். இதற்கான விண்ணிலிருந்து அந்த வீடு கண்காணிக்கபடுகிறது. தீவிரவாதிகளை ஒழிப்பது கூட்டு நடவடிக்கை என்பதால் இங்கிலாந்துடன் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுகிறது. தீவிரவாதிகளின் இருப்பிடத்திற்குள் சிறிய வண்டு போல ரகசிய கேமிரா பறந்து போய் அவர்களைப் படம்பிடிக்கிறது. வான்தாக்குதல் நிகழ்த்தப்படும் நேரத்தில் …

கண்காணிப்பின் வலை. Read More »