இரும்புக்கை மாயாவி
பள்ளிநாட்களில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள் தற்போது புதுப்பொலிவுடன் மீண்டும் புதிய பதிப்பாக வெளிவந்துள்ளன. முத்துகாமிக்ஸ் வெளியிட்ட காமிக்ஸ் புத்தகங்களின் ரசிகன் என்ற முறையில் இவற்றை மீண்டும் வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக நேற்றிரவு இரும்புக்கை மாயாவியின் நாச அலைகளை வாசித்தேன். முதல்முறையாகப் படித்த போது அடைந்த சந்தோஷம் இன்றும் அப்படியே இருப்பது வியப்பளித்தது. இரும்புக்கை மாயாவி பற்றி ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். புத்தரின் கார்டூன் மொழி என்ற அச்சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் தொகுதி 1 ல் …