admin

எனக்குப் பிடித்த கதைகள் 30

மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்யத் துவங்கியவர்.  தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோகன் செருவிலின் இச் சிறுகதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். உத்ரா, ஜெயஸ்ரீ, சுகானா என ஒரு குடும்பமே இலக்கியத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தீவிரமாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது  மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமாக உள்ள நண்பர் பவா. செல்லதுரைக்கும்  ஷைலஜாவிற்கும் அன்பும் வாழ்த்துகளும் …

எனக்குப் பிடித்த கதைகள் 30 Read More »

ம.பொ.சி.விழா

சிலம்புச் செல்வர் டாக்டர்.ம.பொ.சிவஞானம் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் புத்தக வெளியீட்டு விழா அக்டோபர் 5 திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இடம் :  டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி (சத்யா ஸ்டுடியோ) ராஜா அண்ணாமலைபுரம். சென்னை 28 ••

காந்தி ஜெயந்தி

காந்தி சர்வ சமய பிரார்த்தனை மைய நண்பர்கள் NFDC உதவியுடன் வருகின்ற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளன்று சென்னையில் உள்ள சத்தியம்,அபிராமி,சாந்தி,பெரம்பூர் எஸ்2 ஆகிய நான்கு தியேட்டர்களில் காலைக்காட்சியாக ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய காந்தி  படத்தின் தமிழ் வடிவத்தை  இலவசமாகத் திரையிட  உள்ளார்கள். அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்.

எனக்குப் பிடித்த கதைகள் 29

இறைவனின் ஒன்பது பில்லியன் பெயர்கள் – ஆர்தர் சி கிளார்க் தமிழில் :  ஆர்.அபிலாஷ் ”இது சற்று விசித்திரமான வேண்டுகோள் தான்”, பாராட்டத்தக்க கட்டுப்பாடு என்று தான் எதிர்பார்த்த ஒன்றுடன் டாக்டர் வாக்னர் கேட்டார். “எனக்கு தெரிந்த வரையில் ஒரு திபத்திய மடாலயத்துக்கு ஆட்டோமெட்டிக் சீக்குவன்ஸ் கணினி வழங்கும்படி கேட்கப்பட்டது இதுவே முதன் முறை. நான் அத்துமீறி ஆர்வம் காட்ட விரும்பவில்லை, ஆனால், உங்கள் உ …ம்… நிறுவனத்துக்கு இத்தகைய ஒர் எந்திரத்தினால் பயனுண்டு என்று நான் …

எனக்குப் பிடித்த கதைகள் 29 Read More »

விளம்பரப்படம்

ஆரண்யகாண்டம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள புதிய விளம்பரப்படத்தைப் பார்த்தேன். மிகச்சிறப்பாக உள்ளது. ஸ்டாப் மோஷன் முறையில் உருவாக்கபட்ட இந்த விளம்பரப் படத்திற்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் குரல் கொடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் உருவாக்கம் பற்றிய யூடியூப் வீடியோவை அவசியம் பாருங்கள். தனித்துவத்துடன் இதனை இயக்கியுள்ள தியாகராஜன் குமாரராஜாவிற்கும் சிறந்த ஒளிப்பதிவு செய்துள்ள ஜீவா சங்கருக்கும், தொழில்நுட்ப குழுவினர்களுக்கும், மனம் நிரம்பிய பாராட்டுகள். Make Room For Something New | Open Up With Stayzilla …

விளம்பரப்படம் Read More »

எவரெஸ்ட்

நேற்று மாலை எவரெஸ்ட் என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன், Baltasar Kormákur இயக்கியுள்ள இப்படம் 1996ல் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. எவரெஸ்ட் பயணம் மேற்கொள்வதற்காக நேபாளம் வந்து இறங்கும் குழு ஒன்றுடன் படம் துவங்குகிறது. நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கத் துவங்குகிறோம். பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது இமயம், பனிபடர்ந்த அதன் கம்பீரம் நம்மை மயக்குகிறது. அடிவாரத்தில் நின்றபடியே தாங்கள் செல்ல வேண்டிய சிகரத்தை வியந்து பார்க்கிறார்கள் பயணக்குழுவினர். இமயத்தின் அழகை கண்டு நம் அகம் …

எவரெஸ்ட் Read More »

நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல்

பேராசிரியர் அ.ராமசாமி நான் பெரிதும் மதிக்கும் கல்வியாளர். இலக்கிய விமர்சகர். நாடக இயக்குனர். அவர் எனது யாமம் நாவல் குறித்து தீராநதியில் எழுதியுள்ள விமர்சனக்கட்டுரை ••• நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல் : அ.ராமசாமி எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் : 1960-1970 வரையிலான பத்தாண்டுகள் விடுதலைக்குப் பிந்திய இந்தியவாழ்வின் முக்கியமான ஆண்டுகள். காலனிய இந்தியாவின் அடையாளங்கள் விலகிப்போன ஆண்டுகள். முதல் பிரதமர் பண்டித நேருவின் மரணம் அந்தப் பத்தாண்டுகளின் மத்தியில்(1964) தான் நடந்தது. ஆனால் அவரது திட்டங்களின் பலனும் அப்போதுதான் …

நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல் Read More »

விளக்கு விருது

எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளரும், விமர்சகருமான சி.மோகனுக்கு இவ்வாண்டிற்கான விளக்கு விருது அளிக்கப்படுகிறது. பா.சிங்காரம். சம்பத், ஜீ. நாகராஜன் போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த மோகனின் கட்டுரைகள் மிக முக்கியமானவை.  இந்த ஆளுமைகள் குறித்துத் தமிழ் இலக்கியம் கவனம் கொள்ள இக்கட்டுரைகளே முக்கியக் காரணமாக அமைந்தன. அவரது மொழிபெயர்ப்பில் வெளியான ஒநாய் குலசின்னம் மிக முக்கியமான படைப்பு. விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் ஒவியர் ராமானுஜத்தின் வாழ்வை மையமாகக் கொண்ட சிறந்த நாவல் நடைவெளிக் குறிப்புகள், காலம்,கலை,கலைஞன்  இவரது …

விளக்கு விருது Read More »

அறிமுக விழா

எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் மோகன்குமார் எனது சிறுகதை புர்ராவை குறும்படமாக இயக்கியுள்ளார். இதன் அறிமுகவிழா வருகின்ற ஞாயிற்றுகிழமை ( 20.09.2015) மாலை ஐந்து முப்பது மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற உள்ளது. அனைவரும் இதில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் நாள் : 20.09.2015 நேரம் : மாலை 5,30 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை …

அறிமுக விழா Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 28

வெல்வெட் தலையணைகளின் கதை மார்த்தா த்ராபா – தமிழில் ரெங்கநாயகி கிரீச்சிடும் மரப்படிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் மேலேறி, அந்த மேடையின் முன்னால் வந்து, தன் கைகளில் நீட்டியிருந்த அந்த வெல்வெட் தலையணையை விரித்து மேயரிடம் கொடுக்க முன்வரும் வரை நிமியா சான்ஷெஸ் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. ஏனோ, ஒரு கணம், தன் மனதை மாற்றிக் கொண்டவள்போலத் தோன்றினாள் அவள். ஒரு அரைவட்டமாய்த் திரும்பி ஞாயிற்றுக்கிழமைக்கான சிறப்பான ஆடை அணிந்து கொண்டு மேடையினை முன்புறம் நெருக்கியடித்துக் கொண்டு இருந்த …

எனக்குப் பிடித்த கதைகள் 28 Read More »